டாக்டர் ஆல்பிரட் வெக்னரின் விளக்கம் ஏற்கத் தகுந்ததல்ல.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவானது வட துருவப் பகுதியில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கிறது.ஆனால் அந்தத் தீவில் பல கோடி ஆண்டுகள்தொண்மையான வெப்ப மண்டலத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுகிறது.

இதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவானது வெப்பமான கால நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்தத் தீவானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் தற்பொழுது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் வெப்பமான கால நிலை நிலவியிருப்பதாக அப்பகுதியில் உள்ள ஆக்சல் ஹைபெர்க் மற்றும் எல்ஸ்மெர் தீவுகளில் செம்மரக் காடுகளின் புதை படிவங்கள் மற்றும் முதலை, ஆமை போன்ற வெப்ப மண்டலத்தில் வாழும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் பட்டத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.

எனவே ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவில் வெப்ப மண்டலத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் அந்தத் தீவானது பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் இருந்து தற்பொழுது உள்ள ஆர்க்டிக் பகுதிக்கு நகர்ந்து வந்ததாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் கூறிய விளக்கம் ஏற்கத் தகுந்ததல்ல.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.