ரேடான் வாயுக் கசிவு மூலம் நில அதிர்ச்சி ஏற்படப் போவதை அறிதல் .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.



japan radon.jpg (Satellite images showing changes in the heat of the atmosphere above the epicentre of the March 11 earthquake between March 1 and March 12. The total electron content in the ionosphere increased dramatically before the quake Read more: http://www.dailymail.co.uk/sciencetech/article-1388789/Japan-earthquake-Atmosphere-epicentre-heated-rapidly-days-disaster.html#ixzz2AfcE3t00 Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook )

ரேடான் என்பது நிறமற்ற மணமற்ற கதிரியக்கத் தன்மையுள்ள வாயு.மண்ணில் உள்ள யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற தனிமங்கள் சிதைவுறும் பொழுது ரேடான் வாயு உற்பத்தியாகி வளி மண்டலத்தில் கலக்கிறது.

இந்த வாயு கதிரியக்கத் தன்மையை கொண்டிருப்பதால் கதிரியக்கத்தை அறியும் கருவிகள் மூலம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ரேடான் வாயுக் கசிவு சிறிய அளவில் ஏற்பட்டாலும் கூட கண்டு பிடித்து விட முடியும்.

எரிமலைக்குள் பாறைக் குழம்பு சேரும் பொழுது எரிமலைப் பகுதியில் அதிக அளவில் ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

முக்கியமாக ஜப்பான் துருக்கி இத்தாலி போன்ற நாடுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு ரேடான் வாயுக் கசிவு ஏற்பட்டு இருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் ரேடான் வாயுக் கசிவை கண்காணிக்கும் நிலையங்களை மருத்துவமனை மற்றும் பெரிய கட்டிடங்களில் நிறுவுவதன் மூலம் நில அதிர்ச்சியை முன் கூட்டியே அறிய இயலும் என்று வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினோராம் நாள் ஜப்பானில் ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு வளி மண்டலத்தில் குறிப்பாக நில அதிர்ச்சி மையத்திற்கு மேலே அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்து இருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கு அந்தப் பகுதியில் புவியோட்டில் இருந்து வெளியேறிய ரேடான் வாயு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

குறிப்பாக கதிரியக்க ரேடான் வாயுவானது காற்றில் உள்ள அணுக்களை சிதைத்து அயனியாக்கியதால் அந்த அயனிகள் நீர் மூலக் கூறுகளை ஈர்த்து இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு ஈர்க்கப் பட்ட நீர் மூலக் கூறுகள் நீராக மாறும் பொழுது வெப்பம் உமிழப் படுவதால் வளி மண்டலத்திற்கு மேலே உள்ள அயனி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்கிறது.

இந்த வெப்ப நிலை உயர்வானது அகச் சிவப்பு ஒளியின் மூலம் எடுக்கப் படும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகிறது என்று செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்த நாசாவைச் சேர்ந்த டிமிட்டார் உசுநோவ் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக செயற்கைக் கோள் மூலம் அகச் சிவப்புக் கதிர்கள் உதவியுடன் எடுக்கப் பட்ட படங்களில் ஹோண்சு தீவு வளிமண்டலத்தில் மார்ச் எட்டாம் நாள் அதிக அளவில் வெப்பம் உயர்ந்து இருப்பது பதிவாகி இருக்கிறது.



இதன் அடிப்படையில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படும் ஜப்பான் போன்ற நாடுகளின் மேல் நிரந்தரமாக செயற்கைக் கோளை நிறுத்தி வளி மண்டலத்தை கண்காணித்து வருவதன் மூலம் நில அதிர்ச்சியை சில நாட்களுக்கு முன்பே அறிய இயலும் என்று டிமிட்டார் உசுநோவ் தெரிவித்து இருக்கிறார்.



இதே போன்று கோபி பார்ம சூட்டிக்கல் பல்கலைக் கழகம் ,தொகுக்கு பல்கலைக் கழகம்,மற்றும் புகுசிமா மருத்துவ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஹோண்சு தீவில் 2011 ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரை ரேடான் வாயு அதிக அளவில் வெளிப் பட்ட பிறகு படிப்படியாக குறைந்ததாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதே ஆராய்ச்சிக் குழுவினர் ஜப்பானில் 1995 ஆம் ஆண்டு ஜனவரி பதினேழாம் நாள் கோபி நகரத்தில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பும் ரேடான் வாயு அளவு அசாதாரணமாக உயர்ந்து இறங்கியதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் தீவிலும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு முன்பு ரேடான் வாயு அதிகரித்து இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் ரிக்கான் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள லுசான் தீவில் உள்ள தால் எரிமலைப் பகுதியில் ரேடான் வாயுக் கசிவை கண்காணித்து வந்தனர்.

குறிப்பாக அவர்கள் 1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரேடான் வாயுக் கசிவை கண்காணித்துக் கோண்டு இருந்த பொழுது 1994 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் தால் எரிமலைக்குத் தெற்கே 48 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவில் 7.1 அளவிலான கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு இருபத்தி இரண்டு நாட்களுக்கு முன்பு தால் எரிமலைப் பகுதியில் மண்ணிலிருந்து அதிக அளவு ரேடான் வாயுக் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் ரேடான் வாயுக் கசிவானது நில அதிர்ச்சியால் ஏற்பட்ட நிலமுறிவால் ஏற்பட்டது என்று ரிக்கான் தெரிவித்து இருக்கிறார். .

எனவே தால் எரிமலைக்குள் பாறைக் குழம்பு சேர்ந்தது இருப்பதால் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது புலனாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.