Posts

Showing posts with the label நில நடுக்கம்

பாக்லாந்து தீவுக்கு ஓநாய்கள் எப்படி வந்தன ?

Image
இயற்கை அறிவியலில் கடந்த முன்னூற்றி இருபது ஆண்டு காலமாக விடுவிக்கப் படாமல் இருந்த புதிருக்கு, விடை கண்டு பிடித்து விட்டதாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள் . பாக்லாந்து தீவானது தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. இயற்கை அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1833  ஆம் ஆண்டு பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட பொழுது,பாக்லாந்து தீவில் இறங்கி ஆராய்ச்சி செய்தார். அப்பொழுது அந்தத் தீவில் இருந்த நரி முக ஓநாய்கள் அவரையும் அவருடன் வந்தவர்களையும் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் நாய்களைப் போல நட்புடன் அருகில் வந்து பார்த்தது. அந்த விலங்குகளைக் கண்ட டார்வின் , எப்படி இந்தத் தனிமைத் தீவுக்கு இந்த விலங்கினம் வந்திருக்கக் கூடும் ? என்று வியப்படைந்தார். டார்வின் அந்தத் தீவுக்கு வந்து சென்ற பிறகு நாற்பதே ஆண்டுகளில்,ரோமத்திற்காக அந்த விலங்கினம் வேட்டையாடப் பட்டதால் முற்றிலும் அழிந்தது. ஆனாலும் டார்வின் சேகரித்த அந்த விலங்கின் எலும்புகள் லண்டன் அருங்காட்சியத்தில்...

abcd report

Image
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலையுடன் சிறிது உயர்கிறது. இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உயர்ந்த தரைப் பகுதியும் சற்று கீழ் நோக்கி இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்று வடுக்கள் உருவாகின்றன. இவ்வாறு ஒரு எரிமலையானது குமுறி வெடிக்கும் பொழுது அந்த எரிமலையானது உயர்ந்து இறங்கியதற்கு ஆதாரமாக எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகும் வளைய வடிவ வரப்பு மேடுகளானது   நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பட...