Posts

Showing posts from December, 2012

abcd report

Image
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலையுடன் சிறிது உயர்கிறது. இதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உயர்ந்த தரைப் பகுதியும் சற்று கீழ் நோக்கி இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்று வடுக்கள் உருவாகின்றன. இவ்வாறு ஒரு எரிமலையானது குமுறி வெடிக்கும் பொழுது அந்த எரிமலையானது உயர்ந்து இறங்கியதற்கு ஆதாரமாக எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகும் வளைய வடிவ வரப்பு மேடுகளானது   நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றியும் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள