Posts

Showing posts from October, 2014

நியூஸ் ஸ்டோரி - அவுட் லைன்

எனது கண்டு பிடிப்பு பொது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவில் எளிய முறையில் கதை சொல்லும் பாணியில் முழு விபரங்களைத் தெரிவித்து இருக்கிறேன். புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் சுனாமி உருவானது.புதிய ஆதாரங்கள் மூலம் தெரிய வந்த உண்மை. பத்தாவது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக நான் சுனாமி குறித்து மேற்கொண்ட ஆய்வில் எனக்குத் தெரிய தெரிய வந்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனது ஆய்வு பற்றி . .. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தரையுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் ,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு திடீரென்று செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனால் இணைய தளத்தில் வெளியாகி இருந்த செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்ததில் புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரி

இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.

Image
A pygmy hippopotamus (Hexaprotodon liberiensis). http://en.wikipedia.org/wiki/Hippopotamus தற்பொழுது உயிர் வாழும் பெரிய விலங்குகளில் யானை மற்றும் காண்டா மிருகங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய விலங்காக நீர் யானைகள் இருக்கின்றன. சராசரியாக 1300 கிலோ முதல் 1500 கிலோ எடையுள்ள நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் மிதக்கவோ நீந்தவோ இயலாது. இந்த நிலையில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சிசிலி,கிரிட்டி,மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. dwarfhippos.png http://en.wikipedia.org/wiki/Cyprus_dwarf_hippopotamus cyphippo.png http://news.nationalgeographic.com/news/2007/12/071206-AP-cyprus-dwarf.html இந்த விலங்கினம் எப்படி அந்தத் தீவுகளுக்குச் சென்றன என்று விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை. மத்திய தரைக் கடல் தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனமானது ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து தோன்றி இருப்பதாக நம்பப் படுகிறது. கடலில் மிதந்து செல்லும் மர

டைனோசர்களை அழித்த திடீர் கால நிலை மாற்றம்.பகுதி மூன்று

Image
ஹெயின்ரிச் நிகழ்வுகள். titanic1.jpg titanic.jpg acc24.jpg http://www.eos.ubc.ca/research/glaciology/research/HeinrichEvents.html yd20.gif http://www.eos.ubc.ca/research/glaciology/research/HeinrichEvents.html http://www.geomar.de/en/research/fb1/fb1-p-oz/research-topics/low-to-high-latitude-climate-linkages/heinrich-events/ acc25.jpg http://www.eos.ubc.ca/research/glaciology/research/HeinrichEvents.html டைட்டானிக் கப்பலை உடைத்து மூழ்கடித்த மலை போன்ற பனிப் பாறைகள், அட்லாண்டிக் கடலில் குறிப்பிட்ட சில காலங்களில், குறிப்பிட்ட வழியில் அதிக அளவில் மிதந்து செல்கின்றன.  நிலத்தின் மேல் இருந்து உடைந்ததால் உருவான அந்தப் பனிப் பாளங்களானது, கடலில் மிதந்து செல்லும் பொழுது உருகத் தொடங்குகின்றன. அப்பொழுது அந்தப் பனிப் பாறைகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும் கற்கள், கடலுக்கு அடியில் சென்று படிகின்றன. இதே போன்று வெவ்வேறு கால கட்டத்தில் மிதாந்து செல்லும் கற்கள் வெவ்வேறு கால கட்டத்தில் படிகின்றன. அவ்வாறு படிய வைக்கப் பட்ட கற்களானது பல அடுக்குகளில் வெவ்வேறு ஆழத்தில் காணப் படும்.