Posts

Showing posts from November, 2009

நிலம் உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி.

ர ஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சக்ஹாலின் தீவில், கடந்த 02.08.2007 அன்று, ரிக்டர் அளவில் 6.8 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இரண்டு பேரின் உயிர்களைப் பறித்த அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு,சக்ஹாலின் தீவை ஒட்டி,மூன்று சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு, கடலுக்கு அடியில் இருந்த நிலம்,கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து காணப் பட்டது. எனவே கடலுக்கு அடியில் இருந்த நிலம் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.ஆனால் கண்டங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் பாறைத் தட்டுகள் பக்க வாட்டில் நகர்ந்து உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தவறாகக் கூறுகிறார்கள். உதாரணமாகப் பசிபிக் பெருங் கடலைச் சுற்றிலும் ஐநூற்றி அறுபத்தி இரண்டு எரிமலைகள் சீறிக் கொண்டு இருப்பதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப் படுகிறது. இந்த எரிமலைகள் அமைந்திருக்கும் நியூஸிலாந்து இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் ஜப்பான் அலூசியன் தீவுகளிலும் மற்றும் பசிபிக் பெருங் கடல் கரையை ஒட்டி அமைந்திருக்கும் கம்சட்கா தீபகற்பம்,கலிபோர்னியா ஒரிகன் மெக்சிகோ பெரு மற்றும் சிலி ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன. குறிப்பாகப் பசிபிக் பெருங் கடலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் தீவுகளிலும் கண்டங்களின் நிலப் பகுதிகளிலும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு. பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தரை நகர்ந்து தீவுகளுக்கு கீழே செல்லும் பொழுது. இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதே நில அதி