Posts

Showing posts from May, 2013

ஆதி காலக் கடல் தரையானது களிமண் பாறையால் ஆகியிருந்தது.

Image
(  ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல்தரையாக இருந்த இடம் -வட அமெரிக்கா,ராக்கி மலை   ) ஆதி காலக் கடல் தரையானது களிமண் பாறையால் ஆகியிருந்தது. தற்பொழுது கடல்தரையானது பசால்ட் என்று அழைக்கப் படும் கடப்பாக் கல்லால் ஆகியிருக்கிறது. ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல்தரைப் பகுதியில் வாழந்த உயிரினங்களின் புதை படிவங்களானது இன்று பூமியில் பல இடங்களில் களிமண் பாறை அடுக்குகளில் காணப் படுகின்றன.குறிப்பாக வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் உள்ள ஷேல் என்று அழைக்கப் படும் களிமண் பாறை அடுக்குகளிளும் கலிபோர்னியாவில் லாதம் ஷேலிலும் யூதா பாலைவனப் பகுதியில் உள்ள வீலர் ஷேலிலும் புதை படிவங்களாகக் காணப் படுகின்றன. இதே போன்று சீனாவிலும் ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது மாவோசியன் ஷேல் என்று அழைக்கப் படும் களிமண் பாறை அ டுக்குகளிலேயே காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது. இதே போன்று ஆஸ்திரேலியாவிலும் ஈமு வளை குடா ஷேலி ல் ட்ரைலோபைட் உட்பட பல ஆதிகால கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இந்த நிலையில் தற்பொழுது கடல் தளப் பாறையின்