Posts

Showing posts from April, 2015

டைனோசர்கள் காலத்தில் நம் பூமி எப்படி இருந்தது?

Image
டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன. அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்பம் இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரம். ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் பொரியாது. எனவே ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாகப் பசுமைக் காடுகள் இருந்திருப்பதுடன்,பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே  அதிக வெப்பம் இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில், பூமத்தியரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்றே அதிக வெப்பம் நிலவியதற்குக் காரணம், கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.அதனால் பூமியில் கடலின் பரப்பளவ

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நேபாளத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

Image
http://www.bbc.com/news/world-asia-32461019 நேபாளம் உள்ளிட்ட இமய மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.இவ்வாறு இமய மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு தற்பொழுது அறிவியல் அடிப்படை ஆதாரமற்ற கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது. nep6.jpg அதாவது இந்திய நிலப் பகுதியானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆசியக் கண்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு இருப்பதால் ஏற்படும் அழுத்தத்தால் இமய மலைப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாக நம்பப் படுகிறது. latejurassicmap.jpg குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இணைந்து தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் நம்பப் படுகிறது. http://www.nature.com/nature/journal/v475/n7354/images/nature10174-f1.2.jpg அதிலும் குற

சுனாமிக்கு எந்த விளக்கம் ஏற்கத் தக்கது?

Image
கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல்தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்,கடல் தளங்கள் நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாகப் புவியியலாளர்கள் விளக்கம் கூறியதால்,புவியியலாளர்கள் கூறும் விளக்கம் ஏற்கத் தக்கதல்ல. இந்த நிலையில்,எரிமலைகளைச் சுற்றி உருவாகி இருப்பதைப் போன்றே நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருப்பதால்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமே ஏற்கத் தக்கது.

திமிங்கிலங்கள் ஏன் கரை ஒதுங்குகின்றன?

Image
(A mass stranding of Pilot Whales on the shore of Cape Cod, 1902 ) sonar1.jpg http://en.wikipedia.org/wiki/Cetacean_stranding ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து ,மற்றும் ஜப்பான் நாட்டுக் கடற் கரையில் அவ்வப்பொழுது நூற்றுக் கணக்கில் திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் அரை மயக்க நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவ்வாறு திமிங்கிலங்கள் மற்றும் டால்பின்கள் நூற்றுக் கணக்கில் கரை ஒதுங்குவது ஏன்? என்பது குறித்து இன்றளவும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது கப்பல்களில் இருக்கும் சோனார் கருவிகளில் இருந்து அனுப்பப் படும் ஒலி அலைகளால் பாதிப்பு ஏற்பட்டு திமிங்கிலங்களும் டால்பின்களும் கரை ஒதுங்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. sonar2.png http://www.huffingtonpost.com/candace-calloway-whiting/whale-stranding-sonar_b_3997569.html?ir=India ஆனால் சோனார் கருவிகள் கண்டு பிடிப்பதற்கு முன்பே இது போன்று திமிங்கிலங்கள் பல எண்ணிக்கையில் கரை ஒதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கடந்த 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பிறகு, ஒரு மாதத்திற்குப் பிறகே லெவிஸ

இந்தியாவின் கிராண்ட் கன்யன் எப்படி உருவாகியது?

Image
igc20.jpg http://phys.org/news/2011-11-massive-volcanoes-meteorite-impacts-one-two.html igc6.png http://en.wikipedia.org/wiki/Deccan_Plateau வட  அமெரிக்காவில் கொலராடோ நதி பாயும் பீட பூமிப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் ஆழமுள்ள பிளவுப் பள்ளத் தாக்கில் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் அமைந்து இருப்பதைப் போலவே,இந்தியாவின் தக்காணப் பீட பூமிப் பகுதியிலும்,ஆறாயிரத்தி ஐநூறு அடி உயரத்திற்கு பாறைத் தட்டுகளால் ஆன மலைத் தொடர்  உருவாகி இருக்கிறது. இந்த வினோத மலைப் பிரதேசம் டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படுகிறது. ஸ்வீடன் மொழியில் ட்ராப்ஸ் என்றால் படிக் கட்டு என்று பொருள்.இந்த மலைத் தொடரில்,ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டது போல்,பாறைகள் பல்வேறு அடுக்குகளாக அமைந்து பார்பதற்கு படிக்கட்டுகளைப் போல் இருப்பதால் ,டெக்கான் ட்ராப்ஸ் என்று அழைக்கப் படுகிறது. இந்தப் பாறைத் தட்டுப் பீட பூமி மற்றும் அடுக்குப் பாறை மலைத் தொடரின் தோற்றம் குறித்து புவியியலாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். igc9.gif https://www.classzone.com/books/earth_science/terc/content/

கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்.

Image
gcf11.jpg http://asset.emsofl.com/ONLINE%20CLASS/EarthSci/_labdata/unit7/pages/strata/kaibtoro.html gcf10.jpg http://www.geo.arizona.edu/~jguynn/travel/grand_canyon/Image01a.html gcf13.jpg கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கின் விளிம்புப் பகுதியில் முன்னூறு அடி தடிமன் உடைய மேலடுக்கு சுண்ணாம்புப் படிவப் பாறையால் ஆனது.இந்தப் பாறை அடுக்கானது  கைபாப் அடுக்கு என்று அழைக்கப் படுகிறது. இந்தச் சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில், ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.  குறிப்பாக.பிராக்கி போட், கிரினாய்ட்,கடல் அல்லி,  கடல் பஞ்சு,பிரய்யோ ஜோன் ,ட்ரைலோபைட், மற்றும் பவளப் பாறை போன்ற  கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. இதன் மூலம் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிராண்ட் கன்யன் பள்ளத் தாக்கானது ஆழமற்ற கடலுக்கு அடியில் இருந்து  கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. gcf.png http://www.nps.gov/grca/learn/nature/fossils.htm கைபாப் அடுக்கில் கண்டு பிடிக்கப் பட்ட