Posts

Showing posts with the label கடல் மட்டம்

எனது கண்டு பிடிப்பு பற்றி, மிக மிக மிகச் சுருக்கமாக ஒரு ஆய்வுக் கட்டுரை.

எனது கண்டு பிடிப்பு பற்றி, மிக மிக மிகச் சுருக்கமாக ஒரு ஆய்வுக் கட்டுரையாக எழுதி வெளியிட வேண்டும் என்று நீ....ண்ட காலமாகவே நினைத்துக் கொண்டு இருந்தேன்,இன்றுதான் நிறைவேறியது அந்த ஆசை. புதை படிவ ஆதாரங்களின் அடிப்படியில்,கடந்த காலத்தில் பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை.-விஞ்ஞானி.க.பொன்மு டி. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. தற்பொழுது,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதை படிவங்களானது,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான,வட துருவ ஆர்க்டிக் பகுதியில்,காணப் படுவதற்கு புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை. ஏனென்றால்,ஊர்வன இனத்தைச் சேர்ந்த டைனோசர்கள்,முட்டைகள் மூலம் இணைப் பெருக்கம் செய்யும் விலங்கினம் ஆகும். ஊர்வன வகை விலங்கினத்தின் முட்டைகள் பெரிய, முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை. ஆனால் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட,வட அமெரிக்காவின் வட பகுதியில் இருக்கும், அலாஸ்காவின் வட பகுதி மற்றும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியி...

ஆய்வுச் சுருக்கம்

தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் கண்டத் தட்டுப் பாறைகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு கண்டத் தட்டுப் பாறைக்கு அடியில் அடுத்த கண்டத் தட்டுப் பாறையானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்வதாலேயே சுனாமிகள் உருவாகுவதாகவும்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே, நில அதிர்ச்சிகளும், சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கடல் தரையும், கண்டங்களும், நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பானது,கடல் தரையையும்,கண்டங்களையும்,தொடர்ச்சியாகத் துளைப்பதால்,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கத்தின் படி,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் ம...

டைனோசர்கள் காலத்துப் பூமி.

Image
டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,தற்பொழுது கண்டங்களைச் சுற்றிலும்.கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர்களானது,கடல் மட்டத்துக்கு மேலாகத் தொடர்ச்சியாக இருந்ததால்,அதன் வழியாக டைனோசர்கள் உள்பட ஏனைய விலங்கினங்களும்,பயணம் செய்து, ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்றன.அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகளாக உருவாகிய பொழுது,அதிலிருந்து பிரிந்த நீரானது,கடலில் கலந்ததால்,கடல் மட்டம் உயர்ந்ததால்,அந்தக் கண்டங்களுக்கு இடையிலான, விலங்கினங்களின் போக்குவரத்து தடை பட்டது.அத்துடன் கடல் மட்டம் உயர்ந்ததாலும்,கடலின் பரப்பளவானது அதிகரித்ததாலும்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால்,துருவப் பகுதிகளில்,பனிப் படலங்கள் உருவாகியது.இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் டைனோசர்கள் உள்பட பனி யானைகளும் முற்றாக அழிந்தன. (படம்-இணையம்)

கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததற்கு ஆதாரம்.

ஜெர்மன் நாட்டின் கிரிஸ் வால்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான மார்டின் மிஸ்கிடே,தலைமையிலான குழுவினர்,கரீபியன் தீவுப் பகுதியி ல்,ஒலி அலைகள் மூலம்,கடல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களை அறிந்து, அவற்றை கடல் தரை குறித்த வரை படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அப்பொழுது,கடல் தரையில் பல இடங்களில் மலைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பகுதிகள், சம தளமாக இருப்பதை அறிந்தனர். அதே போன்று ,அந்த வரை படத்தில் சம தளம் என்று குறிப்பிடப் பட்டு இருந்த இடங்களில்,ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) உயரமுள்ள, மலைகள் இருப்பதையும் அறிந்தனர். அதே போன்று,அந்தப் பகுதியில், கடல் தரையில் இருந்து எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் காணப் படக் கூடிய கூழாங் கற்கள் இருப்பதைக் கண்டனர். அத்துடன் ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய பவளங்கள், நத்தைகள்,மற்றும் பாசிகள் இருப்பதைக் கண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஆச்சரியமடைந்தனர். அதன் அடிப்படையில்,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஒன்பதாயிரத்தி எண்ணூறு அடி (மூவாயிரம் மீட்டர் ) ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் அந்த மலைகளானது,ந...

ராட்சத ஆமைகள் எப்படி பெருங் கடலைக் கடந்தன?

Image
தீவுகளில் விலங்கினங்கள்...முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள். ராட்சத ஆமைகள் எப்படி பெருங் கடலைக் கடந்தன? தீவுகளில் விலங்கினங்கள்...முன்னுக்குப் பின் முரணான விளக்கங்கள். தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், எரிமலைத் தீவுக் கூட்டமான கலாபாகஸ் தீவுகளில்,ராட்சத ஆமைகள் காணப் படுகின்றன.அந்த ஆமையினமானது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும்,சிலியென்சிஸ் என்ற ஆமையின் நெருங்கிய இனவகை என்பது மரபணு ஆய்வில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து சிறிய அளவுள்ள ஆமைகளானது,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,இரண்டு வார காலம்,கடலில் தத்தளித்தபடி,தற்செயலாகக் கலாபாகஸ் தீவை அடைந்திருக்கலாம் என்று,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு,அந்தத் தீவுகளில்,கொன்றுண்ணி விலங்குகள் இல்லாத காரணத்தாலும்,தாவரங்கள் அதிகமாகவும்,உணவுக்குப் போட்டியாக வேறு விலங்க...