Posts

Showing posts from July, 2011

நில அதிர்ச்சி சுனாமி எனது கண்டு பிடிப்பு நிரூபணமாகியுள்ளது.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
கடந்த 12.01 .2010 அன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு மத்தியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் பயங்கரமான நில அதிர்ச்சியும் அதன் தொடர்ச்சியாக சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டபொழுது நில அதிர்ச்சியின் மையப் பகுதியில் இருந்த லியோகேன் என்ற துறைமுக நகரத்தின் கடற்கரைப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக நிலம் இரண்டு அடி வரை உயர்ந்து இருந்தது. அத்துடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சு உள்ளிட்ட கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தது. (படம்1) இந்த நிலையில் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஹைத்தி தீவை ஒட்டியவாறு ஹைத்தி தீவிற்கு வடக்கே அமைந்து இருக்கும் வட அமெரிக்கக் கண்டம் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் வீதத்தில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அதனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டிற்கும் ஹைத்தி தீவுப் பாறைத் தட்டிற்கும் இடையே ஏற்பட்ட நீண்ட கால அழுத்தம் விடு பட்டு உரசல் ஏற்பட்டதால்தான் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.(ப