கண்டங்கள் தீவுகள் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து உயர்ந்திருக்கின்றன
napple.jpg ஐ சக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் புவிஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பதை அப்பொழுது நான் நம்ப வில்லை. ஆனால் இப்பொழுது நம்புகிறேன். ஏனென்றால் எனக்கே அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. ngpage.jpg ஒரு நாள் ஒரு பழைய புத்தகக் கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப் பட்டு இருந்த பழைய நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கைகளில் ஒன்றை எடுத்து அசிரத்தையாகப் புரட்டிய பொழுது பளிச் என்று ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர். குறிப்பாக அவர்கள் இருவரும் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் குறிப்பாக கனடா நாட்டுப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாகவும் அவர்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அத்துடன் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது க...