Posts

Showing posts from February, 2014

புதை படிவங்களும் பூமியின் கடந்த காலமும்

தற்பொழுது இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் கூட டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு , இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும் , பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று தவறாக நம்பப் படுகிறது. உண்மையில் அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததுடன் , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம் என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை எண்ணெய் எடுப்பதற்காகத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட