புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்தவைகள்.
ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்களால்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில், விளக்கம் கூற இயல வில்லை. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,கூறப் படும் விளக்கமானது,ஒரு தவறான விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கடல் மட்டமானது,பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,அந்தக் காலத்தில்,கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுடன்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நடை பெற்று இருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,பூமிக்கு அடியில்,எரிமலை வெடிப்புகள் ஏற்ப...