புதிர் போடும் புதை படிவங்கள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.




axberg

தற்பொழுது பல்லாயிரம் அடி உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருக்கும் துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடுகள் இருந்திருப்பதுடன், அவற்றில் முதலை ஆமை போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் விலங்கினங்கள் வாழ்ந்திருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
ஆக்சல் பெர்க் என்று அழைக்கப் படும் தீவானது வடதுருவப் பகுதியில் இருந்து எண்ணூறு கிலோ மீட்டர் தென் திசையில், ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படும் பகுதியில் அமைந்து இருக்கிறது.
வடகோளப் பகுதியில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகை வரையுள்ள வட்டப் பகுதியானது ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படுகிறது.
சூரியனை வலம் வரும் பூமியின் பூமத்திய ரேகைப் பகுதியானது சூரியனுக்கு பக்கமாக இருப்பதால் சூரிய ஒளியானது பூமத்திய ரேகைப் பகுதியில் நேராக படுகிறது.
ஆனால் துருவப் பகுதிகளில் சாய்வாகப் படுகிறது.அதனால் துருவப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவாக இருக்கிறது.அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியில் சூரியன் உச்சி வானத்தில் தோன்றுவதைப் போன்று துருவப் பகுதிகளில் சூரியன் உச்சிப் பகுதிக்கு செல்வதில்லை.
etilt.jpg

மதிய நேரத்திலும் கூட துருவப் பகுதிகளில் சூரியன் தொடு வானத்திற்கு அருகிலேயே இருக்கிறது.அத்துடன் பூமியானது சூரியனை சுற்றிவரும் பொழுது தன் அச்சிலும் இருபத்தி மூன்றரை டிகிரி சாயந்து இருப்பதால் ஆண்டுக்கு ஆறுமாதம் பூமியின் வட துருவமானது சூரியனை நோக்கி சாய்ந்தும், ஆண்டுக்கு ஆறுமாதம் பூமியின் வடதுருவம் சூரியனை விட்டு விலகியும் இருக்கிறது.
இதற்கு நேர் மாறாக பூமியின் வட துருவப் பகுதியானது சூரியனை நோக்கி இருக்கும் காலங்களில் பூமியின் தென் துருவப் பகுதியானது சூரியனை விட்டு விலகியும், அதே போன்று பூமியின் வட துருவமானது சூரியனை விட்டு விலகி இருக்கும் காலங்களில் தென் துருவமானது சூரியனை நோக்கியும் இருக்கிறது.
இவ்வாறு வடதுருவப் பகுதியானது சூரியனை நோக்கி சாய்ந்து இருக்கும் பொழுது வட கோளப் பகுதியில் கோடை காலம் நிலவுகிறது.அதே நேரத்தில் சூரியனில் இருந்து விலகி இருக்கும் தென்கோளப் பகுதியில் குளிர் காலம் நிலவுகிறது.
அத்துடன் பூமியின் இந்தச் சாய்வினால் வட கோளப் பகுதியில் கோடை காலம் நிலவும் பொழுது வடதுருவப் பகுதியில் சூரியன் மாதக் கணக்கில் மறைவதேயில்லை.
இதற்கு மாறாக தென் துருவப் பகுதியில் அப்பொழுது சூரியன் உதிப்பதேயில்லை.இதனால் அண்டார்க்டிக் கண்டத்தில் ஆறுமாத காலம் இரவு நீடிக்கிறது.
இது போன்று துருவப் பகுதிகளில் மாதக் கணக்கில் இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலை மைனஸ் ஐம்பது டிகிரி நிலவுகிறது.
இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் நீர் உறைந்து விடும்.எனவே தாவரங்களால் நீரை உறிஞ்ச இயலாது,அத்துடன் தாவரங்களில் உள்ள நீரும் உறைந்து விடும்.அதே போன்று முதலை ஆமை போன்ற விலங்கினங்களால் உயிர் வாழ்வதே கடினம் என்பதுடன் அவைகளின் முட்டைகளும் பொரியாது.
இந்த நிலையில் துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடுகள் இருந்திருப்பதற்கு ஆதாரமாக மரங்கள் தாவரங்கள் மற்றும் முதலை ஆமை போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் விலங்கினங்களின் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையுள்ள புதை படிவங்கள் கிடைத்திருப்பது அறிவியல் உலகில் பெரும் புதிரை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் வெப்பமான கால நிலை நிலவியிருப்பது தாவர மற்றும் விலங்குகளின் புதை படிவ சான்றுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
காடுகள் ஏன் அழிந்தன ?
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதியிலேயே வெப்ப நிலை நிலவியிருப்பதால் பூமத்திய ரேகை பகுதியில் இன்னும் அதிக வெப்ப நிலை நிலவியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் அண்டார்க்டிக் கண்டத்தை ஒட்டியுள்ள பனிப் படுகைக்கு அடியில் உள்ள கடல் தரையை ஒரு கிலோ மீட்டர் ஆழம் வரை துளையிட்டு எடுக்கப் பட்ட படிவுகளின் தொண்மை மதிப்பிடப் பட்டதில் அவைகள் இரண்டு கோடி ஆண்டுகள் தொண்மையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்துடன் அந்தப் படிவுகளில் பனை வகைகளின் மகரந்தத் துகள்கள் காணப் பட்டதன் அடிபடையில் அண்டார்க்டிக் கண்டத்தின் ஓரப் பகுதிகளில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை வெப்ப மண்டலக் கால நிலை நிலவியிருப்பதையும் காடுகள் இருந்திருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அண்டார்க்டிக் கண்டத்தில் தற்பொழுது நான்கு கிலோமீட்டர் உயரத்திற்கு உருவாகி இருக்கும் பனி அடுக்குகளானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே பனி உருவானதால் காடுகள் அழிந்திருக்கிறது.
பனி ஏன் உருவானது ?
கடல் மட்டம் உயர்ந்ததால் பூமியின் வெப்பம் குறைந்து துருவப் பகுதிகளில் பனி உருவாகியிருப்பது புதை படிவ ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியப் பெருங் கடலில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
மேலும் இந்த விலங்கினங்கள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பது மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.
mdh.jpg
( மடகாஸ்கர் தீவு குள்ள வகை நீர் யானை )
ஆனால் குள்ள வகை நீர் யானையால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.
முக்கியமாக நானூறு கிலோ எடையுள்ள குள்ள வகை நீர் யானைகள் நானூறு கிலோ மீட்டர் கடல் பகுதியை கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலமாகவும் கடந்திருக்க சாத்தியம் இல்லை.
எனவே தரை வழித் தொடர்பு வழியாகவே குள்ள வகை நீர் யானைகளால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்திருக்க இயலும்.
அத்துடன் மடகாஸ்கர் தீவில் காணப் பட்ட குள்ள வகை நீர் யானை இனமானது பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவிற்கு வந்தபிறகு தனி இனமாக இருவாகி இருப்பதும் எலும்புப் புதை படிவங்களில் காணப் பட்ட வேறுபாடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த குள்ள வகை நீர் யானைகள் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மடகாஸ்கர் தீவிற்கு வந்திருப்பதன் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.
எனவே இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோமீட்டர் உயர்ந்ததாலேயே பூமியின் வெப்ப நிலை குளிர்ந்து அண்டார்க்டிக் கண்டத்தில் பனி உருவாகி இருப்பதும் புலனாகிறது.
இரண்டு கிலோமீட்டர் கடல் மட்டம் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளிவரும் நீர் கடலில் கலப்பதே காரணம்.
பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகளில் உள்ள பாறைக் குழம்பில் இருந்து வெப்பமான வாயுக்களும் நீரும் பிரிந்த பிறகு பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைகளாக உருவாகிறது.
எனவே பூமியானது குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.