ஒரு கதையின் கதை-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

லிஸ்ட்ரோசாராஸ்lys1.jpg

ஜெர்மனியின் மார் பர்க் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் ஒரு நாள் அந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக பணி புரியும் கால நிலை இயல் வல்லுநர் டாக்டர் ஆல்பிரட் வெக்னர் தற்செயலாக ஒரு ஆய்வுக் கட்டுரையை படித்தார்.
அந்த கட்டுரையில் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது பற்றி தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களை இணைக்கும் வகையில் ஒரு காலத்தில் தற்காலிக நிலப் பாலம் ஒன்று இருந்திருக்கலாம் என்றும் பிறகு காலப் போக்கில் அந்த தற்காலிக நிலப் பாலம் கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்திகரமான விளக்கமாகப் பட வில்லை.
குறிப்பாக அவர் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதைக் கவனித்தார்.
எனவே முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பிறகு பிரிந்து நகர்ந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தார்.
தொடர்ந்து அவர் மேற்கொண்ட ஆய்வில் அட்லாண்டிக் கடலுக்கு மேற்கு பகுதியில் இருக்கும் வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அப்பாலாச்சியன் மலைகள் இருப்பதைப் போலவே அட்லாண்டிக் கடலுக்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் ஸ்காட்லாந்தின் மேற்குப் பகுதியில் உயர்ந்த நிலப் பகுதி இருப்பதும் ,அதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் பிரேசிலில் உள்ள சான்டா காட்டரினா பாறை அமைப்புகளைப் போல ஆப்பிரிக்காவில் காரூ பாறை அமைப்புகள் இருப்பதாகவும் கூறினார்.
அதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளின் அருகிலும் கடற் கரையோர உப்பு நீர் நிலைகளிலும் வாழ்ந்த முதலை போன்ற உருவில் இரண்டு அடி நீளமுள்ள மெசோசாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டதைப் போலவே ஆப்பிரிக்கக் கண்டத்திலும் அதே விலங்கின் புதை படிவம்கண்டு பிடிக்கப் பட்டது.இதன் அடிப்படையில் நிலத்தில் வாழும் ஒரு விலங்கு நிச்சயம் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க இயலாது,எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டம் இருந்திருக்க வேண்டும் என்று விளக்கம் கூறினார்.
வெக்னருக்கு முன்பே ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் சூயஸ் என்ற புவியியல் வல்லுநர் தென் பகுதிக் கண்டங்களில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த குளோசப் டெரிஸ் என்ற பெரணி வகை மரத்தின் புதை படிவங்கள் காணப் பட்டத்தின் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற பெருங் கண்டம் இருந்திருக்கிறது என்றும் பிறகு அந்தக் கண்டத்தின் இடையில் உள்ள நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்டது என்றும் ஒரு விளக்கத்தை கூறியிருந்தார்.
ஆனால் வெக்னர் தென் பகுதிக் கண்டங்கள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்திருக்கிறது என்று கூறினார்.மேலும் அந்தக் கோண்டுவாணாக் கண்டமானது பாஞ்சியா கண்டத்தில் இருந்து பிரிந்து தென் திசையை நோக்கி நகர்ந்தது என்றும் கூறினார்.குறிப்பாக பாஞ்சியா கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் பூமியின் வட பகுதியில் லாரேசியா என்ற வட பெருங் கண்டமும் கோண்டுவாணா என்ற தென் பெருங் கண்டமும் உருவானது என்றும் கூறினார்.
அத்துடன் கண்டங்கள் நகர்ந்து மோதும் பொழுது இடையில் உள்ள நிலப் பகுதி புடைத்துக் கொண்டு உயர்வதால்தான் இமய மலைத் தொடர் மற்றும் ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள் உருவானது என்றும் கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் விளக்கம் கூறினார்.
வெக்னரின் விளக்கத்தை அந்தக் காலத்தில் புவியியலாளர்கள் ஏற்கவில்லை.அவர்கள் தற்காலிக நிலப் பாலம் மூலமாகவும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாகவும் விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்றே நம்பினார்கள்.
குறிப்பாக கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது என்று புவியியலாளர்கள் கேட்ட கேள்விக்கு வெக்னரால் உறுதியாக எந்த ஒரு பதிலையும் கூற இயலவில்லை.
அதே நேரத்தில் புவியியலாளர்கள் மலைகள் எப்படி தோன்றின? நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை
spit.gif

வெக்னர் இன்னொரு முக்கியமான ஆதாரத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.அதாவது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப் படும் நார்வே நாட்டுக்கு வடமேற்கு திசையில் ஐநூற்றி அறுபது கிலோமீட்டர் தொலைவிலும் வட துருவப் பகுதியில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் ஸ்பிட்ஸ் பெர்ஜன்(ஸ்வால்பர்ட்) என்ற தீவு அமைந்து இருக்கிறது.
குறிப்பாக ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவு ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருப்பதால் அந்தத் தீவில் அறுபது சதவீதபனியால் மூடப் பட்டு இருப்பதுடன் ஆண்டுக்கு ஆறுமாதம் தொடர்ச்சியாக பகலும் ஆண்டுக்கு ஆறுமாதம் தொடர்ச்சியாக இரவும் நீடிக்கிறது.
ஆனால் அந்தத் தீவில் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் சைகேட் மற்றும் பெரணி வகைத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுகிறது. இதற்கு ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவானது முன் ஒரு காலத்தில் அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் அதன் பிறகு அங்கிருந்து நகர்ந்து ஆர்க்டிக் பகுதிக்கு வந்திருக்க வேண்டும் என்று வெக்னர் விளக்கம் கூறினார்.
ஆனாலும் 1930 ஆம் ஆண்டு, வெக்னர் கிரீன்லாந்து தீவில் கால நிலையை அறிய உதவும் கருவிகளை பொருத்தும் பணியின் பொழுது பனிப் புயலில் சிக்கி இறக்கும் வரையிலும் வெக்னரின் கருத்து ஏற்கப் படவில்லை.
குறிப்பாக வட பகுதிக் கண்டங்களில் ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ஆசியக் கண்டத்தின் சைபீரியா பகுதி வழியாக வட அமெரிக்காவில் அலாஸ்கா வழியாக கற்கால மனிதர்கள் ஆசியாவில் இருந்து சென்றதைப் போலவே மற்ற விலங்கினங்கலும் சென்றிருக்கலாம் என்று நம்பப் பட்டது.
ஆனால் பெருங் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தென் பகுதிக் கண்டங்களில் ஒரே வகையான விலங்கினங்கள் தாவரங்கள் காணப் படுவதற்கு மட்டும் அசாதாரணமான விளக்கங்கள் கூறப் பட்டது.அதாவது கடலில் மிதக்கும் தாவரங்கள் மரக் கிளைகள் மூலம் தாவரங்கள் விலங்கினங்கள் பரவி இருக்கலாம் என்று கருதப் பட்டது.
lys2.png

இந்த நிலையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த லிஸ்ட்ரோசாராஸ் என்ற விலங்கின் புதை படிவங்கள் 1969 ஆம் ஆண்டு அண்டார்க்டிக் கண்டத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டது.
சிறிய நாயைப் போன்ற உருவமுள்ள அந்த அந்த விலங்கானது மிகவும் தொண்மையான விலங்கு என்பதால் தற்பொழுது உள்ள விலங்குகளைப் போல் சுறு சுறுப்பாக நடமாடும் விலங்கு அல்ல லிஸ்ட்ரோசாராஸ்,தந்தம் போன்ற இரண்டே இரண்டு பற்களுடன் வாழ்ந்த லிஸ்ட்ரோசாராஸ் நடக்கும் பொழுது இடுப்பை வளைத்து வளைத்து மெதுவாக நடக்கக் கூடியது.அந்த விலங்கானது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம் கடலைக் கடந்திருக்காலாம் என்று நம்புவது கடினம்.ஆனால் ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்கள் இந்தியாவிலும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.எனவே லிஸ்ட்ரோசாராசின் புதை படிவங்கள் அண்டார்க்டிக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பொழுது வெக்னரின் விளக்கம் நம்பப் பட்டது.
அதே ஆண்டில் பிரின்சிடன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹாரி ஹாமன்ட் ஹெஸ் என்ற புவியியலாளர் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றில் பணி புரிந்த பொழுது முதன் முதலில் ஒலி அலைகளைப் பயன் படுத்தி கடலின் ஆழம் அறியும் சோனார் கருவியை பயன் படுத்தினார்.அப்பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்காக ஒரு கடலடி மலைத் தொடர் நீண்டு இருப்பதை அறிந்தார்.அத்துடன் அந்த மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் பெரிய பள்ளத் தாக்குகள் இருப்பதையும் அறிந்தார்.
போர் முடிந்த பிறகும் ஹெஸ் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் அந்தக் கடலடி மலைத் தொடரானது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மட்டுமல்லாது நீண்டு வளைந்து இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் பசிபிக் கடலுக்கு அடியிலும் செல்வதை அறிந்தார்.
அத்துடன் அந்த மலைத் தொடரில் எரிமலைகள் அதிகம் இருப்பதுடன் நில அதிர்ச்சிகளும் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படுவதும் அறியப் பட்டது.
இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள கடல்தரையில் இருந்து எடுக்கப் ப்பட்ட பாறைகளின் தொண்மை குறைவாக இருந்ததின் அடிப்படையிலும் ஆனால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து தொலைவில் கண்டங்களுக்கு அருகில் உள்ள கடல் தரையில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொண்மை அதிகமாக இருப்பதன் அடிப்படையிலும் ஹெஸ் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்ததால்தான் அட்லாண்டிக் மத்தியப் பகுதியில் குறைந்த தொண்மையுடனும் அங்கிருந்து அதிக தொலைவில் அதிக தொன்மையுடன் கடல் தரை இருக்கிறது ஹெஸ் விளக்கம் கூறினார்.
அதாவது வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்கள் மட்டும் நகர்ந்து கொண்டு இருக்க வில்லை.ஆனால் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரையானது தொடர்ந்து உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதால் கடல் தரையுடன் கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஹெஸ் விளக்கமளித்தார்.
sf
குறிப்பாக ஒரு பாத்திரத்தில் நீர் கொதிக்கும் பொழுது அடிப்பகுதியில் இருந்து நீர் வெப்பமடைந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து மறுபடியும் பாத்திரத்திற்கு அடியில் செல்வதைப் போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வெப்பத்தால் மேற் பகுதிக்கு வெறும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகி புதிய பாறையாக உருவாகிறது,அதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தட்டை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தரையாக உருவாகிறது என்றும் இது போன்று தொடர்ந்து நடை பெறுவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஹெஸ் விளக்கம் கூறினார்.
மேலும் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு பாறைக் குழம்பு மறுபடியும் பூமிக்கு அடியில் செல்லும் பொழுது பாறைக் குழம்பு ஒரு சக்கரம் போன்று செயப் பட்டு மேற்பகுதியில் இருக்கும் கடல்தரையையும் கண்டங்களையும் நகர்ந்துகிறது என்றும் ஹெஸ் விளக்கம் கூறினார்.ஹெச்சின் விளக்கம் கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் இன்று வரை கடல் தரைப்பாறையானது தொடர்ச்சியாக மாதிரி எடுக்கப் பட்டு அவற்றின் தொண்மை மதிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.ஆங்காங்கே எடுக்கப் பட்ட பாறை மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப் பட்டது கருத்து தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
spsp.jpg


தற்பொழுது கடல் தரை புதிதாக உருவாகிக் கொண்டு இருப்பதாகக் கூறப் படும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியிலேயே பூமியின் தொண்மை என்று மதிப்பிடப் படும் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைத் தீவான புனித பீட்டர் புனித பால் தீவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கமும் ஏற்கத் தகுந்த விளக்கம் அல்ல.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.