Posts

Showing posts from March, 2023

தெற்காசிய சுனாமிக்கு காரணம் கண்டு பிடிப்பு.

தெற்காசிய சுனாமிக்கு காரணம் கண்டு பிடிப்பு. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் புவியியல் வல்லுநர்களால் ஏன் உறுதி படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை என்ற கேள்விக்கு விடை காண்பதே இந்த ஆய்வுக்கு கட்டுரையின் நோக்கம். கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 01.10.2005 அன்று முதலில் வெளியிட்ட அறிக்கையில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் ஏற்பட்டது என்று டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together) ஆனால் ,அதே நாசா 200