Posts

பூமியின் சுருக்கமான வரலாறு.

00000000000000 ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்கள். தற்பொழுது அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அதாவது ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப