Posts

Showing posts from August, 2013

ரிசர்ச் ரிப்போர்ட்

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன. தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல்தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தளத்துடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். இவ்வாறு கண்டங்களானது கடல் தளத்துடன் நகரும் பொழுது பாறைப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். இதே போன்று கடலுக்கு அடியில் , ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது மேற்பகுதியில் உள்ள பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்வதாகவும் அதனால் சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது பல்வேறு வகையான ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் கடல