Posts

Showing posts from March, 2009

பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.

பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது - விஞ்ஞானி.க.பொன்முடி. பூமிக்கு அடியில் உள்ள அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகும் பொழுது அதிலிருந்து நீர் மற்றும் வாயுக்கள் பிரிவதால் அடர்த்தி குறைவான பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் சுடுநீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதால் கடல் மட்டடம் உயர்கின்றது. பூமிக்கு அடியில் புதிதாக உருவாகும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்வதால் கடல் தரையில் இருந்து நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்கின்றன. ஒரு இடத்தில் மட்டும் பாறைத் தட்டுகள் உயரும்பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையே ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. நில மட்டம் உயர்வதாலும் , நீர்ப்பரப்பு அதிகரித்து நீர் மட்டமும் உயர்ந்து கொண்டிருப்பதால் பூமி குளிர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. - விஞ்ஞானி க.பொன்முடி. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நிலநடுக்கதிற்குப் பிறகு.அப்பகுதியில் இருந்த சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்திலிருந்து மூன்று அடி உயர்ந்து இருந்தது. இதனால் தீவில் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்தது.மேலும் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன. மேலும் 26, டிசம்பர்,2004 ,நில நடுக்கத்திற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.மார்ச்,2005.அன்று ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகும் சிமிலு தீவு நான்கு அடி உயர்ந்து காணப்பட்டது. அத்துடன் தீவைச் ச்ற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு,கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் வெளியில் தெரிந்தன. தீவு ஏன் திடீரென்று நான்கு அடி உயர்ந்தது? பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு படிப்படியாகக் குளிர்ந்து கொண்டிருப்பதால் பல்வேறு அடுக்