Posts

Showing posts from September, 2023

எனது ஐந்து கண்டு பிடிப்புகள்.விஞ்ஞானி.க.பொன்முடி.

ஐந்து முக்கிய புவியியல் நிகழ்வுகளுக்கு விடை கண்டு பிடித்து இருக்கிறேன். ஒன்று. சுமத்ரா ,ஹைத்தி ,மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி களை உருவாக்கிய நில .அதிர்ச்சி களுக்கான காரணம். இரண்டு. துருவப் பகுதிகளில் காணப் படும் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களுக்கான காரணம். மூன்று. மத்திய தரைக் கடலுக்கு அடியில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவானதற்கு காரணம். நான்கு. ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு மற்றும் இரும்புப் படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் பாடுவதற்கான காரணம். ஐந்து ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்பு திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதற்கான காரணம். 00000000 ஒன்று. சுமத்ரா ,ஹைத்தி ,மற்றும் ஹோன்சூ தீவுகளில் சுனாமி களை உருவாக்கிய நில .அதிர்ச்சி களுக்கான காரணம். 0000000 தெற்காசிய சுனாமிக்கு காரணம் கண்டு பிடிப்பு. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாம