Posts

Showing posts from 2015

மனித குலத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.

இறுதிப் பேரழிவு நம் பூமி ஒரு நீர்கிரகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. அறிமுக உரை. தற்பொழுது புவி அறிவியலில் சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.குறிப்பாக கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்கள் அண்டார்க்டிகா , ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு , முன் ஒரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் உண்மையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பது கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இருக்கும் பொழுது பிரிந்த நீர் வெளிவந்து கடலில் கலந்ததால் கடல்மட்டம் உயர்ந்து இருப்பதும் , புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப