இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

-
விஞ்ஞானி க.பொன்முடி.

இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நிலநடுக்கதிற்குப் பிறகு.அப்பகுதியில் இருந்த சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்திலிருந்து மூன்று அடி உயர்ந்து இருந்தது.


இதனால் தீவில் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்தது.மேலும் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன.
மேலும் 26, டிசம்பர்,2004 ,நில நடுக்கத்திற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.மார்ச்,2005.அன்று ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகும் சிமிலு தீவு நான்கு அடி உயர்ந்து காணப்பட்டது.

அத்துடன் தீவைச் ச்ற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு,கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் வெளியில் தெரிந்தன.

தீவு ஏன் திடீரென்று நான்கு அடி உயர்ந்தது?

பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு படிப்படியாகக் குளிர்ந்து கொண்டிருப்பதால் பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின்றன.இந்த பாறைத் தட்டுகள் குறைந்த அடர்த்தியுடன் இருப்பதால் மேல்நோக்கி உயர்கின்றன.
பாறைத்தட்டுகள் அடர்த்தி குறைவாக இருப்பதற்குக் காரணம், பாறைக் குழம்பிலிருந்து பாறைத்தட்டுகள் உருவாகும் பொழுது, அதிலிருந்து நீரும் மற்ற வாயுக்களும் வெளியேறி விடுகிறது.இதனால் குறைந்த அடர்த்தியுடன் பாறைத்தட்டுகள் உருவாகின்றன.

அடர்த்தி அதிகமான தண்ணீரில் உருவாகும் அடர்த்தி குறைந்த பனிக் கட்டி மேல் நோக்கி உயர்ந்து மிதப்பதைப் போல், பூமிக்குள் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக்குளம்பில் உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது, பூமிக்கு மேல் தீவுகளாக உயர்கின்றன.

பூமிக்குள் புதிதாக உருவாகும் பாறைத்தட்டுகள் மேலே இருக்கும் பழைய பாறைத்தட்டுகளை முட்டித் தள்ளிக் கொண்டு இருக்கின்றன. இந்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது திடீரென்று பாறைத்தட்டுகள் மேல்நோக்கி உயர்கின்றன.

நீர் நிறைந்த தட்டின் அடியில் ஒற்றை விரலால் சுண்டும்பொழுது தட்டில் நீர் வளையங்கள் உருவாகி விரிவதைப் போல, இந்தியப் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சிமிலு தீவு திடீரென்று உயர்ந்ததால்,தீவைச் சுற்றிலும் இருந்த நீர் தள்ளப் பட்டதால் உருவான கடல் அலைகளே சுனாமி அலைகளாக உருவாகின.

இவ்வாறு கடல் தரையிலிருந்து தீவுகள் திடீரென்று உயர்வதாலேயே இந்தோனேசியப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்ப்படுகிறது.

ஆனால் இந்தோனேசியப் பகுதியில் ஏற்ப்படும் நில அதிர்ச்சிக்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.

ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமத்திய ரேகைகுத் தெற்கில்,
ஒரு தீவாக இருந்த இந்தியா வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியது என்றும் ,இன்றும் இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


இவ்வாறு வடகிழக்கு திசையில் நகரும் இந்திய -ஆஸ்திரேலிய நிலத் தட்டு திடீரென்று பர்மா நிலத் தட்டிற்குக் கீழாக சென்றதால்தான் 26, டிசம்பர்,2004. அன்று நில நடுக்கம் ஏற்ப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதில் எள் அளவும் உண்மை இல்லை.ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பும் இந்தியா இப்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டத்துடன் இணைந்தே இருந்திருக்கிறது.

இதற்கு ஆதாரமாக ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியப் பகுதியில் வாழ்ந்த பாலூட்டி விலங்கின் எலும்புகள்,ஆந்திரா மாநிலத்தில் உள்ள நஸ்கல் என்ற கிராமத்திலிருந்து , பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அசோக் சாகினி மற்றும் ஜம்மு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜி.வி.ஆர்.பிரசாத் ஆகியோர்களால் எடுக்கப் பட்டு இருக்கின்றன.

எனவே ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பூமத்திய ரேகைக்குத் தெற்கில் தீவாக இருந்திருக்கவில்லை,

உண்மையில் இப்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டத்தின் பகுதியாகவே இருந்திருக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது.எனவே வட கிழக்கு திசையில் இந்தியா நகர்ந்து கொண்டிருக்கவும் இல்லை,
எனவே இந்திய நிலத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே திடீரென்று செல்லவும் இல்லை.
எனவே சுமத்ரா தீவு அருகே 26.12.2004.மற்றும் 28.03.2005.அன்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்கும்,சுனாமிக்கும், இந்தோனேசியப் பகுதியில் இருக்கும் சிமிலு உள்ளிட்ட தீவுகள் திடீரென்று கடல் தரையிலிருந்து உயர்ந்ததே காரணம்.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.