எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி.


இந்தியாவில் இருந்து எடுக்கப் பட்ட பாலூட்டி விலங்கின் எலும்புகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் கண்டங்கள் நகர்கின்றன என்ற கருத்தை தவறாக்கி விட்டது.


இந்திய நிலப் பகுதியானது பதின்மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.


ஆனால் தற்பொழுது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிசால்புரி என்ற கிராமத்தில் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆடு மாடு போன்ற குளம்புக் கால் இனத்தைச் சேர்ந்த விலங்கின் பற்களை தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வு மூலம் எடுத்திருக்கின்றனர்.


இதற்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் மான்டனா என்ற நகரில் இருந்து எடுக்கப் பட்ட ஆறு கோடியே முப்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான குளம்புக் கால் விலங்கின் எலும்புகளே தொன்மையானதாக இருந்தது.


தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக் குளம்புக் கால் விலங்குகளின் பொது மூதாதையின் பற்கள் ரஷியாவில் இருந்து எடுக்கப் பட்டிருந்தது.


ஸ்கெலெஸ்டிட்ஸ் என்று அழைக்கப் படும் அந்த அழிந்து போன விலங்கின் எலும்புகள் எண்பத்தி ஐந்து கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடப் பட்டிருந்தாலும் தற்பொழுது அந்த விலங்கு ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்காலாம் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது.


எனவே ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு விலங்கு எப்படி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை தீவுக் கண்டமாக இருந்த இந்தியாவிற்குள் வந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


இந்திய நிலப் பகுதியானது பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆசியக் கண்டத்துடன் மோதியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் இந்திய நிலப் பகுதியானது தற்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டதுடன் இணைந்து இருந்திருந்தால்தான் ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த குளம்புக் கால் விலங்கு இந்தியாவிற்குள் வந்திருக்க முடியும்.


எனவே தற்பொழுது மத்தியப் பிரதேசத்தில் இருந்து எடுக்கப் பட்ட ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான குளம்புக் கால் விலங்கின் பற்கள் ,இந்திய நிலப் பகுதியானது கடந்த ஒன்பதரை கோடி ஆண்டுகளாகவே தற்பொழுது உள்ள இடத்திலேயே இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.

எனவே கண்டங்கள் நகர்கின்றன என்ற கருத்து தவறாகி விட்டது.


ஆனால் அந்தமான் மற்றும் சுமத்ரா ஆகிய தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு வடகிழக்கு திசையில் இந்தியக் கண்டம் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறி, இந்தியக் கண்டத்தின் ஓரப் பகுதி சுமத்ரா தீவுகளுக்கு கீழே சென்று உரசுவதே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


உண்மையில் அந்தமான் மற்றும் சுமத்ரா தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தத் தீவுகளில் உள்ள எரிமலைகளே காரணம்.


எரிமலைகளுக்கு கீழே இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகும் பொழுது அதில் இருந்து நீரும் வாயுக்களும் வெளியேறுவதால் உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது பாறைத் தட்டுகளின் விளிம்புகள் உரசிக் கொள்ளும் பொழுதே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.