ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது.


அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப் பட்டது.


அனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் ?


இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.


குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம்.


பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது.


அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது.


இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் மிதக்கிறது.


இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிக் கொண்டிருப்பதால் பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகின்றன.


பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிவதால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைத் தட்டுகளின் கன அளவும் அதிகரிக்கின்றன.இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.


இவ்வாறு பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயரும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் அப்பகுதியில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பழைய பாறைத் தட்டுகளை மேல் நோக்கி தள்ளுகின்றன.


இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.


இவ்வாறு ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அப்பகுதியில் உள்ள மற்ற பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.


மற்ற படி சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகருவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் இந்தியாவில் எல்லா இடத்திலும் ஒரே நாளிள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science