வாலஸ் கோடு போட்டார்... டார்வின் ரோடு போட்டார்.

ஐரோப்பியர்கள் முதன் முதலில் கடலில் நெடுந் தொலைவுக் கடல் பயணங்களை மேற்கொண்ட பொழுது,பல்வேறு கண்டங்களிலும்,தீவுகளிலும் விலங்கினங்கள் இருப்பதைக் கண்டாலும்,அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.அவைகள் எல்லாம் இயற்கையில் ஆங்காங்கே படைக்கப் பட்டவைகள் என்று நம்பப் பட்டது.

அந்தக் காலத்தில்,புதிய கண்டங்கள் கண்டு பிடிக்கப் பட்டதால்,அந்தக் கண்டங்களில் காணப் படும் புதிய விலங்கினங்கள்,தாவரங்கள் பற்றி அறிவதில் ஐரோப்பியர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.அது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள்,புத்தகங்கள் மட்டுமின்றி அருங் காட்சியகங்களும் உருவாகின.

அப்பொழுது, அருங் காட்சியகங்களுக்கு தேவையான மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ,சார்லஸ் டார்வினின் நண்பரும் இயற்க்கை ஆராய்ச்சியாளருமான, ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் ,ஒரு கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் செய்தார்.

அப்பொபொழுது,ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,அதே போன்று,ஆசியா மற்றும் ஆசியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,காணப் படும் விலங்கினங்களும்,வெவ்வேறாக இருப்பதைக் கவனித்தார்.

குறிப்பாக, ஆசியக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில் குரங்கு,புலி,காண்டா மிருகம் போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.

அதன் அடிப்படையில்,அவர் விலங்கினங்களானது, ஓரிடத்தில்
தோன்றி மற்ற பகுதிகளுக்குப் பரவி இருப்பதைப் புரிந்து கொண்டார்.

அதன் அடிப்படையில் ,இந்தோனேசியாப் பகுதியில், முன் ஒரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பதையும்,அதனால் அந்தத் தீவுகளுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதையும்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதையும், வாலஸ் யூகித்து அறிந்தார்.

ஆனால், ஆஸ்திரேலியாக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் தீவுகளில்,வயிற்றுப் பைப் பாலூட்டி வகை விலங்கினங்கள் காணப் பட்டது.

அதன் அடிப்படையில்,கோடிக் கணக்கான ஆண்டுகளாக,அந்தத் தீவுகள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருப்பதையும், வாலஸ் புரிந்து கொண்டார்.

வாலஸ் கவனித்த ,வெவ்வேறு வகை விலங்கினங்கள் காணப் படும் கடல் பகுதியானது ''வாலஸ் கோடு'' என்று அழைக்கப் படுகிறது.

ஆனாலும்,இந்தத் தீவுகள் எல்லாம், அதிக பட்சம் நூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவிலேயே அமைந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

வாலசைப் போன்றே ,சார்லஸ் டார்வினும், ஒரு பயணத்தை மேற்கொண்டார்.

அப்பொழுது,கண்டங்களுக்கு அருகில் அமைந்து இருக்கும் தீவுகளில் காணப் பட்ட விலங்கினங்களானது, கண்டங்களில் காணப் பட்ட விலங்கினங்களில் இருந்து, சிறிது மாறுபட்டு இருப்பதைக் கவனித்தார்.

குறிப்பாகத் தென் அமெரிக்கக் கண்டத்துக்கு அருகில் அமைந்து இருக்கும் கலாபாகஸ் தீவுகளில்,காணப் பட்ட ஆமைகளின் உடலமைப்பானது, தீவுக்குத் தீவு மாறுபட்டு இருப்பதைக் கவனித்தார்.

அதே போன்று,அந்தத் தீவுகளில் காணப் பட்ட,சிட்டுகளின் அலகுகளும்,அவைகளின் உணவுப் பழக்கத்துக்கு ஏற்ப மாறு பட்டு இருப்பதைக் கவனித்தார்.

அதன் அடிப்படையில்,விலங்கினங்கள் எல்லாம் ஒரு பொது மூதாதையில் இருந்து தோன்றி, காலப் போக்கில்,வெவ்வேறு வாழிடச் சூழலுக்கு ஏற்ப,மாறி இருக்கின்றன, என்பதைப் புரிந்து கொண்டார்.

அதன் பிறகே, தீவுகளுக்கு விலங்கினங்கள் எவ்வாறு சென்றன என்ற கேள்வி,அதிக முக்கியத்துவம் பெற்றது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.