சுனாமி நினைவு தினக் கட்டுரை.

இதற்கு முன்பு,கடல் மட்ட உயர்வு, மற்றும் நில அதிர்ச்சி/ சுனாமிகளுக்கான காரணம் குறித்து, ஆறு அத்தியாயங்களில் தெரிவித்த விளக்கத்தை,இரண்டே.. இரண்டு, அத்தியாயத்தில் தெரிவித்து இருக்கிறேன்.

அத்தியாயம் ஒன்று

டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம்,பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

கேள்விகள்.

கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,தீவுகளிலும்,தீவுக் கண்டங்களிலும்,கணப் படுவதற்கு காரணம் என்ன?

நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,டைனோசரின் புதைப் படிவங்கள், கணப் படுவதற்கு காரணம் என்ன?

வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில், டைனோசர்களின் புதைப் படிவங்கள், கணப் படுவதற்கு காரணம் என்ன?

பதில்கள்.

தற்பொழுது, கடலின் ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.ஆனால் டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை விட,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

அதனால், டைனோசர்களின் காலத்தில்,கடலின் பரப்பளவானது குறைவாக இருந்திருக்கிறது.அதனால், டைனோசர்களின் காலத்தில் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.

அதனால், டைனோசர்களின் காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.

அதனால், டைனோசர்களின் காலத்தில்,துருவப் பகுதிகளில்,பனிப் படலங்களுக்குப் பதிலாகப் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன.

கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.

அதன் வழியாக டைனோசர்களானது தீவுகளுக்கும் தீவுக் கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.

அதன் பிறகு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்து இருக்கிறது.கடலின் பரப்பளவானது அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,குறைந்ததால்,துருவப் பகுதிகளில், பனிப் படலங்கள் உருவாகின.

இவ்வாறு ஏற்பட்ட,கால நிலை மாற்றத்தால்,டைனோசர் இனம் அழிந்தது.

தற்பொழுது,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தவறான விளக்கம் கூறப் படுகிறது.

எகிப்து ராணி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரம், தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள்.

அதே போன்று, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரத்தில் கூட, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களால் கட்டப் பட்ட கோவில்கள், இன்று கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

இதன் மூலம் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது,நிதர்சனமான உண்மை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

ஆனாலும்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கூறப் படும் விளக்கமானது, தவறு என்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது, என்று தற்பொழுது, நம்பப் படுகிறது .

அதன் அடிப்படையில்,கடல் மட்ட உயர்வுக்கு,உலக அளவில், அதிகப் பனிக் கட்டிகளைக் கொண்டிருக்கும்,அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகலானது,கடல் மட்ட உயர்வுக்கு முக்கியமான காரணம் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி கண்டுபிடித்து இருக்கிறார்.

நாசாவைச் சேர்ந்த, பனி இயல் வல்லுனரான,டாக்டர் ஜேய் ஜேவாளி தலைமையிலான ஆய்வுக் குழுவினர்,ஐரோப்பிய செயற்கைக் கோள்கள் மற்றும் நாசாவின் லேசர் செயற்கைக் கோள்கள் மூலமாக,சேகரிக்கப் பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் ,அண்டார்க்டிக்காக் கண்டத்தில், பனிப் பொழிவின் காரணமாகப் பனிப் படலங்களின் தடிமனானது, ஆண்டுக்கு 0.7 இன்ச் ( 1.7 சென்டி மீட்டர் )அதிகரித்ததாகவும் ,டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு, அண்டார்க்டிக்காக் கண்டத்தில் பனிப் படலத்தின் அதிகரிப்பானது, பல்லாயிரம் ஆண்டு காலமாகத் தொடர்ந்ததாகவும்,அதனால் அண்டார்க்டிக்காக் கண்டத்தில், பனி உருகிய அளவைக் காட்டிலும், உருவான பனியின் அளவு அதிகமாக இருந்ததாகவும், டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.

எனவே, கடல் மட்ட உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக்காக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல, என்றும் டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் கடல் மட்ட உயர்வுக்கு, வேறு எதோ காரணம் இருக்கலாம்! என்றும் டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.

எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு உண்மையில் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது?

தற்பொழுது, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.

இந்த நிலையில் கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.

இந்த நிலையில் கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.

இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.

எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.

எனவே, ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.

எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.

அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.

அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது.

இது போன்று, பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது.
நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.

அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.

இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது.
இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது.அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின.

இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது.

இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும்.

எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,தீவுகளிலும்,தீவுக் கண்டங்களிலும்,கணப் படுவதற்கு காரணம்,டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,அதன் காரணமாகக் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம் என்பது உறுதியாகிறது.

எனவே,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,கண்டங்களிலும் தீவுகளிலும்,காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம்.

அதே போன்று, ,சுனாமிகள் உருவாகுவதற்கும்,கண்டங்கள் எல்லாம்,கடல் தளங்களுடன் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான்,நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம்.

அதே போன்று,கண்டங்களானது கடல் தளத்துடன் நகர்ந்து,அடுத்த கண்டத்துக்கு அடியில்,உரசிய படி நகர்ந்து செல்வதால்தான்,சுனாமிகள் உருவாகுகின்றன, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம்.

அத்தியாயம் இரண்டு.

இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே,நில அதிர்ச்சிகளும்,சுனாமிகளும்,ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சில எரிமலைகள் இருக்கின்றன.

அந்த எரிமலைகள் எல்லாம் அணைந்து போன எரிமலைகள் என்றே நீண்ட காலமாக நம்பப் பட்டது.

இந்த நிலையில்அந்த எரிமலைகள் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள்கள் மூலம் அந்த எரிமலைகளின் இயக்கம் கண்காணிக்கப் பட்டது.
குறிப்பாக அந்த செயற்கைக் கோள்களில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டது.

அதன் பிறகு,அந்த ரேடியோ கதிர்களானது ,தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்த பொழுது,கருவிகள் மூலம், தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.

அந்தப் படங்களை ஒன்றாக இணைத்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.

ஏன் இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றி ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகின என்பதற்கு,எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் தெரிவித்தனர்.

அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்கிறது.

அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,சில சென்டி மீட்டர் உயர்கிறது.

அதன் பிறகு,அந்த எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.
இதனால் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் இறங்குகிறது.

இவ்வாறு ,எரிமலைகள் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன ,என்று எரிமலை இயல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

இதே போன்று,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவான இடங்களிலும், குறிப்பாக , சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.

குறிப்பாக,இத்தாலி நாட்டில்,லா அகுலா நகரில், கடந்த 2009 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது.

அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.

அத்துடன்,அந்தப் பகுதியில்,நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு,ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும்,கதிரியக்கத் தன்மை உடைய வாயு ,கசிந்து இருப்பதையும்,ஜியூலியானி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.இதே போன்று,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்த இடங்களில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன.

அதன் அடிப்படையில்,ஜியூலியானி ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அவர் எச்சரித்ததைப் போன்றே ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

முக்கியமாக,ரேடான் வாயுவானது, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் வாயு ஆகும்.

எனவே,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தால் லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்தது.

இதே போன்று ,கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவுப் பகுதியில்,ஏற்பட்ட ,நில அதிர்ச்சியால்,சுனாமி உருவானது.

அப்பொழுது,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் , பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.

அத்துடன்,அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ,ஹோன்சு தீவுக்கு மேலே வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது,வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.

இது குறித்து விளக்கமளித்த,நாசாவைச் சேர்ந்த,டாக்டர்,டிமிட்ரி ஒசனோவ்,அந்தப் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும்,ரேடான் வாயு கதிரியக்கத் தன்மை உடையதால்,அந்த வாயுவானது காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும்,இதனால் எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால்,வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கலாம் என்று, ,டாக்டர் டிமிட்ரி ஒசனோவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சிகளும்,சுனாமியும் உருவாகி இருப்பது, ஆதரப் பூர்வமாக உறுதிப் படுத்தப் படுகிறது.

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science