டைனோசர் காலத்தில்... ராட்சதக் கடல் பல்லிகள் ஏன் அழிந்தன?

அறிமுக உரை.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனங்கள் அழிந்த பிறகு,மூஞ்சூறு போன்ற ஒரு மூதாதைப் 
பாலூட்டி விலங்கினத்தில் இருந்து ,ஒரு கோடி ஆண்டுகளில்,தற்பொழுது நாம் காணும்,ஐயாயிரத்தி ஐநூறுக்கும் அதிகமான பாலூட்டி வகை விலங்கினங்கள் தோன்றின.இந்தக் கால கட்டமானது 'பாலூட்டிகளின் காலம் என்று அழைக்கப் படுகிறது.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமானது,மெசோ சொயிக் காலம் என்றும் நடு உயிர் காலம் என்றும்,ஊர்வன விலங்குகளின் காலம் என்றும் அழைக்கப் படுகிறது.

தற்பொழுது நீரிலும்,நிலத்திலும்,வானிலும் வாழக் கூடிய விளங்கினமாகப் பாலூட்டி வகை விலங்கினங்கள் இருக்கின்றன.

ஆனால்,மெசோ சொயிக் காலத்தில்,நீரிலும்,நிலத்திலும்,வானிலும் வாழ்ந்த விலங்கினமாக ஊர்வன வகை விலங்கினங்களே இருந்தது.

பிறகு ஏன் இந்த மற்றம் நிகழ்ந்தது?

இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு, ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊர்வன வகை விலங்கினங்களால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது,எனவே அவைகளின் உடல் வெப்ப நிலையானது,சூழ் நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும்.

ஆனால்,பாலூட்டிகளால் சுயமாக உடல் வெப்பத்தை,உணவைச் செரிப்பதன் மூலம் உற்பத்தி செய்து கொள்ள முடியும்.அத்துடன் உற்பத்தி செய்த வெப்பத்தைக் காக்க ரோமத்துடன் கூடிய தோலும் பாலூட்டிகளுக்கு உண்டு.

எனவே பாலூடிகளால் இரவிலும்,குளிர்ப் பிரதேசத்திலும் சுறு சுறுப்பாக இயங்க முடியும்.அத்துடன் ஊர்வன வகை விலங்கினங்களானது முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.ஆனால் பாலூடிகளோ முழு வளர்ச்சி அடைந்த குட்டிகளை ஈனுவதன் மூலம்,இனப் பெருக்கம் செய்கின்றன.

கட்டுரை.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் எப்படி அழிந்தன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

அதே போன்று,வட துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்பது குறித்தும்,இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,டைனோசர்கள் காலத்தில்,கடலில் வாழ்ந்த ராட்சதப் பல்லி இனங்கள் ஏன் அழிந்தன என்பது குறித்தும்,இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

குறிப்பாக, டைனோசர்கள் காலத்தில்,இக்தியோ சாரஸ்,பிலெசியோ சாரஸ்,மோசா சாரஸ்.என மூன்று முக்கிய ஊர்வன வகைக் கடல் பல்லி இனங்கள், மற்ற விலங்கினங்களை வேட்டையாடின.

இதில், இக்தியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,டால்பின் போன்ற உருவமுடைய கடல் பல்லியானது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த ஒரு ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து கடல் வாழ்க்கைக்கு ஏற்ப பரிணாம மாற்றமடைந்த விலங்கினம் ஆகும்.

இந்த இனத்தில் தொண்ணூறுக்கும் அதிக இனவகைகள் வாழ்ந்திருப்பது புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் புதைப் படிவங்களானது,ஆர்க்டிக் பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அம்மோனிட்டி என்று அழைக்கப் படும்,ஓட்டுடலி உள்பட ,ஆமைகள்,மற்ற மீன்களை இக்தியோசாரஸ் உண்டு வாழ்ந்தது,அதன் பின்னர்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இக்தியோ சாரஸ் இனம் முற்றாக அழிந்தது.

குறிப்பாக,இக்தியோ சாரஸ் இனமானது,டைனோசர் இனத்தின் அழிவுக்கு மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதால்,டைனோசர்களின் அழிவுக்குக் கூறப் படும்,விண் கல் மோதல் மற்றும் எரிமலைச் சீற்றங்களின் விளைவு ,இக்தியோ சாரசின் அழிவுக்குப் பொருந்தாது.

இந்த நிலையில்,இக்தியோ சாரசின் அழிவுக்கு கால நிலை மாற்றம் காரணமாகக் கூறப் படுகிறது.

குறிப்பாக,பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ,லீஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,டாக்டர் வேலண்டின் பிஷர் ,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததாகவும்,அதனால் கடலின் வெப்ப நிலையும் உயர்ந்ததாகவும், அவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்துக்கு ஏற்ப வேகமாக,இக்தியோ சாரசால் ,தகவமைப்பு செய்து கொள்ள இயலாததால்,இக்தியோ சாரஸ் இனம் அழிந்து விட்டதாகப் பிஷர் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று,ஜெர்மன் நாட்டின் அருங் காட்சியகத்தைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான டேனியல் டிக் என்பவர்,இக்தியோ சாரஸ் தனது வாழிடங்களை இழந்ததால்,இக்தியோ சாரஸ் இனம் அழிந்து விட்டதாகத் தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று,டைனோசர்களின் காலத்தில்,கடலில், பாம்பு போன்ற நீண்ட கழுத்துடனும், யானையைப் போன்ற உடலுடனும் வாழ்ந்த, பிலெசியோ சாரஸ் என்று அழைக்கப் படும் ராட்சதக் கடல்
பல்லியானது,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன.

பிலெசியோ சாரசைப் போன்றே ஆனால் குட்டையான கழுத்தை உடைய,பிளியோ சாரஸ் என்று அழைக்கப் படும், ராட்சதக் கடல்
பல்லியும் ,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன.

பிலெசியோ சாரஸ் இனமானது, இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,நிலத்தில் வாழ்ந்த ஒரு ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து, கடல் வாழ்க்கைக்கு ஏற்ப, பரிணாம மாற்றமடைந்த ஒரு விலங்கினம் ஆகும்.

இதன் புதைப் படிவங்களானது வட துருவப் பகுதியிலும்,தென் துருவப் பகுதியிலும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதே போன்று,இக்தியோ சாரஸ் இனம் அழிந்த பிறகு,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பரிணாம மாற்றமடைந்த,முதலை போன்ற தலையை உடைய, மோசா சாரஸ் என்று அழைக்கப் படும் ,கடல் வால் ஊர்வன வகை விலங்கினமும்,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,டைனோசர்கள் அழிந்த பொழுது, முற்றாக அழிந்தன.

இந்த விலங்கினங்கள் யாவும்,ஆமைகள்,மீன்கள் மற்றும் அம்மானைட்டிஸ் என்று அழைக்கப் படும் ஓட்டுடலியை, உண்டு வாழ்ந்த விலங்கினங்கள் ஆகும்.

அத்துடன்,இந்த விலங்கினங்கள் யாவும்,கடல் வாழ் வாழ்க்கைக்கு ஏற்ப ,பாலூட்டிகளைப் போன்று,குட்டிகளை ஈன்று இனப் பெருக்கம் செய்யக் கூடியவைகளாகவும் இருந்தன.

எனவே,ஆமைகளைப் போன்று, முட்டைகளை இட நிலத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால்,நெடுங் கடல் பகுதியைக் கடந்து உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தன.

ஓட்டுடலியான அம்மானைட்டைஸ் ,நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

இதே காலத்தில்,பல மிதவை உயிரினங்களும்,சிப்பி மீனினங்களும் அழிந்தன.

இது குறித்த ஆய்வை மேற்கொண்ட,அமெரிக்காவின் தேசிய அருங் காட்சியகத்தைச் சேர்ந்த நீல் லான்ட் மேன்,அம்மொனைட்டுகள் ,பிளாங்டான் என்று அழைக்கப் படும்,கடல் மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்ந்ததாகவும்,இந்த நிலையில்,அந்தப் பிளாங்டான்கள் அழிந்ததால்,அம்மனைட்டுகளும்அழிந்திருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

முக்கியமாக அந்த ஆராய்ச்சியாளர்கள்,அந்த அம்மொனைட்டுகளை,வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில்,டகோட்டா மாகானத்து சமவெளிப் பகுதியில் இருந்து எடுத்திருக்கின்றனர்.

இதே போன்று,டைனோசர்கள் காலத்தில் ,கடலில் வாழ்ந்த ராட்சதக் கடல் பல்லிகளின் புதைப் படிவங்களும்,உள் நாட்டுப் பகுதிகளிலேயே கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

உதாரணமாக,வட அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள,நெவேடா பாலைவனப் பகுதியில்,இக்தியோ சாரசின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

எனவே,டைனோசர்கள் காலத்தில்,கண்டங்கள் தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கு மேலே,ஆழமற்ற உள் நாட்டுக் கடல் பகுதிகள் இருந்திருக்கின்றன.அதில் ஆழமற்ற ,சூரிய ஒளி புகக் கூடிய ஆழத்தில்,மிதவை உயிரினங்கள் வாழ்ந்து இருக்கின்றன.அவற்றை அம்மனைட்டுகள் உண்டு வாழ்ந்து இருக்கின்றன,அவைகளை மற்ற ராட்சதக் கடல் வாழ் பல்லி இனங்களும் உண்டு வாழ்ந்து இருக்கின்றன.

அதன் பிறகு,கண்டங்களானது உயர்ந்த பொழுது,ராட்சதக் கடல் வாழ் பல்லியினங்கள் மண்ணில் ,புதையுண்டுப் புதைப் படிவங்களாகின.

கண்டங்கள் உயர்ந்ததுடன்,கடலின் மட்டமும் உயர்ந்ததால்,கடலின் ஆழம் அதிகரித்து இருக்கிறது.எனவே,ஆழமற்ற பகுதியில் வாழ்ந்த மிதவை நுண்ணுயிரிகளும்,அவற்றை உண்டு வாழ்ந்த ,ராட்சதக் கடல் வாழ் பல்லியினங்களும் அழிந்து இருப்பது புலனாகிறது.

எனவே,பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் ராட்சதக் கடல் பல்லி இனங்கள் அழிந்ததாகக் கூறுவது தவறு.

மாறாகக் கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவு அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்ததால்,ஏற்பட்ட, கால நிலை மாற்றத்தின் காரணமாகவே,மிதவை நுண்ணுயிரிகளும்,உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத,ஊர்வன வகை, ராட்சதக் கடல் பல்லி இனங்களும் அழிந்திருக்கின்றன.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.