கடற் பசு , கடல் மட்டம் மற்றும் கால நிலை மாற்றம்.




கடல் பசு என்று அழைக்கப் படும் பாலூட்டி விலங்கினம்,கடற் கரையோரத்தில் ஏழு அடி ஆழத்தில் உள்ள கடல் தரையில் வளர்ந்து இருக்கும் புற்களை உண்டு வாழும் ஒரு சாதுவான விலங்கு.
குறிப்பாகக் கடற்பசுக்கள் , வெப்ப மண்டலப் பகுதியான பூமத்திய ரேகைப் பகுதிக் கடல் பகுதியில் வாழ்கின்றன.கடலுக்கு அடியில் வாழ்ந்தாலும் கடற் பசுக்கள் கடல் நீரைக் குடிப்பதில்லை,ஆறு மற்றும் குளத்தில் உள்ள நல்ல நீரையே குடிக்கின்றன.
அதே போன்று கடற் பசுக்கள் காற்றை சுவாசிக்கவும் இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை நீர்பரப்புக்கு மேல் மூக்கைத் திறந்து காற்றை சுவாகிக்கும்.நீருக்கு அடியில் சென்றதும் மூடி போன்ற தசையினால் மூக்கை மூடிக் கொள்ளும். அதிக பட்சம் பதினைந்து நிமிடம் வரைக்கும் கடற் பசுவால் நீருக்குள் சுவாசிக்காமல் தாக்குப் பிடிக்க வல்லது.
கடற் பசுக்களின் உடற் செயலியல் மந்தமானது என்பதால் கடற் பசுக்கள் மெதுவாகவே இயங்கக் கூடியது.ஒரு நாளைக்க எட்டு மணி நேரம் புற்களை மேயும்.ஒரு நாளைக்கு நாற்பது கிலோ எடையுள்ள புற்களை உண்கின்றன.

கடற் பசுவில் இரண்டு இனங்கள் உள்ளன.இந்தியப் பெருங் கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் டோகோங் என்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் காணப் படும் கடற் பசுக்கள் மானாட்டி என்றும் அழைக்கப் படுகிறது.

டோகோங் இனத்தில் ஸ்டெல்லார் என்று அழைக்கப் படும் திமிங்கிலம் அளவுள்ள கடற் பசுக்கள் ,பசிபிக் கடலின் வட பகுதியில் வாழ்ந்து இருக்கின்றன,தற்பொழுது அந்த இனம் அழிந்து விட்டது.


டோகோங் இனத்தில் ஹாலி தீரியம் என்று அழைக்கப் படும் கடற் பசுக்களின் புதை படிவங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஜெர்மனி,பெல்ஜியம்,பிரான்ஸ் ஸ்விட்சர் லாந்து பகுதிகளில் டோகாங் வகை கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.




வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய கடற் பசுக்களின் புதை படிவங்கள் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படுவதன் மூலம்,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டம் அமைந்து இருக்கும் அட்ச ரேகைப் பகுதியில் கூட, பூமத்திய ரேகைப் பகுதியைப் போலவே அதிக வெப்ப நிலை நிலவி இருப்பது புலனாகிறது.

அதே போன்று ஐரோப்பாக் கண்டத்தின் நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டதுக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.

அத்துடன் ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையானது என்பதுடன், அந்தக் கடற் பசுக்கள் சிறிய அளவிலான தொடை எலும்புடன் வாழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது.அதனால் புல் தரைகள் காலியாக இருந்தது.அந்தக் காலத்தில் மரங்களில் பூச்சிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த, ஒரு மூஞ்சூறு வகை விலங்கினமானது,தரையில் இறங்கி தாவரங்களை உண்டு வாழ ஆரம்பித்ததுடன்,பல வகையான வாழிடங்களிலும் வாழ ஆரம்பித்ததால் பல தகவமைப்புகளுடன் பல வகை பாலூட்டி விலங்கினங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று தோன்றின.

அப்பொழுது தரைப் பகுதியில் நிலவிய போட்டியைத் தவிர்க்க ஒரு விலங்கினம் ,ஆறு குளம்,ஏரி போன்ற நீர் நிலைகளுக்கு அடியில் இருந்த தாவரங்களை உண்டு வாழும் வாழ்க்கை வாழ்ந்ததில், கால்களை நடக்கப் பயன் படுத்துவதற்குப் பதிலாக உந்தி உந்தி நீந்தவும் நீர்ப் பரப்புக்கு மேலே எம்பவும் பயன் படுத்தியத்தில், காலப் போக்கில் கால்களை இழந்து துடுப்புகள் வளர்ந்து கடற் பசுவினம் தோன்றியது.

கடற்பசுவின் மூததையானது யானை,திமிங்கிலம்,மற்றும் ஹை ராக்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு கொறித்துண்ணி விலங்கினத்தின் நெருங்கிய சொந்தம்.

எனவே கடற் பசுவின் தொன்மையான புதை படிவங்கள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்று எதிர் பார்க்கப் பட்டது.

அத்துடன் மானாட்டி வகைக் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்காவில் குறிப்பாக புளோரிடா பகுதியிலும் கரீபியன் தீவுகளிலும் காணப் படுவதால்,மானாட்டி வகைக் கடற் பசுக்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடல் நீரோட்டங்களின் உதவியுடன் அட்லாண்டிக் கடலில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பயணம் செய்து, அமெரிக்கக் கண்டங்களை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில்,ஒரு கடற் பசுவின் தலைப் பகுதியின் புதை படிவங்களை ரிச்சர்ட் ஓவன் என்ற விலங்கியலாளர் கண்டு பிடித்தார்.

தொல் விலங்கியல் வல்லுனர்கள் தொன்மையான கடற் பசுவின் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் கண்டு பிடிக்கப் படும் என்ற எதிர் பார்ப்புக்கு மாறாக இந்தக் கண்டு பிடிப்பு இருந்தது.

அப்படியென்றால் கடற் பசுக்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் அதாவது புதிய உலகம் என்று அழைக்கப் படும்,அமெரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம், அட்லாண்டிக் கடலில் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி பயணம் செய்து.ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. 

இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவில்,ஒரு ஆற்றுப் படுகையில்,மீன்கள்,முதலை,குரங்கின் எலும்பு போன்ற புதை படிவங்களுடன்,காண்டா மிருகத்தின் புதை படிவத்தையும்,டாக்டர்,டாரில் டொமினிக் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் முக்கியமாக காண்டா மிருகமானது நீரில் நீந்த இயலாதா விலங்கு.

எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பது எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.

இந்த நிலையில் அதே ஜமைக்கா தீவில் டாக்டர் டாரில் டொமினிக், நாலு கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, கடற் பசுவின் எலும்புப் புதை படிவத்தைக் கண்டு பிடித்தார்.

பிசோசைரன் என்று பெயரிடப் பட்ட அந்த விலங்கானது, நன்கு வளர்ந்த கால்களுடன் இருந்தது.அத்துடன் அந்த விலங்கானது நீர் வாழ் கடற் பசுவுக்கும் நிலத்தில் வாழ்ந்த நடக்கும் கடற் பசுவுக்கும் இடைப் பட்ட இனம் என்றும் தெரிவித்து உள்ளார்.

குறிப்பாக நீர் யானையானது பகலில் நீர் நிலைகளில் நீருக்கு அடியில் தாவரங்களை உண்டும், இரவில் தரைக்கு வந்து தாவரங்களை உண்டும் வாழ்கிறது.அதே போன்று ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட பிசோசைரன் விலங்கும் நீர் யானையைப் போலவே, நீரிலும் நிலத்திலும் வாழ்ந்தது என்று டாக்டர் டாரில் டொமினிக் தெரிவித்து இருக்கிறார். 

இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள டுனீசியாவில்,ஒரு விலங்கின் முதுகெலும்பு மற்றும் உட் செவிப் பகுதியில் காணப் படும் எலும்பின் புதை படிவங்களை,டாக்டர் ஜூலியட் பினாய்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார்.





குறிப்பாகக் கடற் பசுவின் உட்செவிப் பகுதி எலும்பானது தனித் தனியயுடன் இருக்கும் என்பதால்,அதனை ஆய்வு செய்த டாக்டர் ஜூலியட் பினாய்ட்,அந்த விலங்கு ஒரு கடற் பசுவின் எலும்பு என்றும்,அந்த விலங்குக்கு,சாம்பி கடல் பசு என்று பெயர் சூட்டினார். 

அத்துடன் அந்த காதுப் பகுதி எலும்பமைப்பின் படி அந்த விலங்கானது நீரடி வாழ்க்கைக்கு ஏற்ப தகவமைப்பு பெற்று இருந்தது என்றும் டாக்டர் ஜூலியட் பினாய்ட் தெரிவித்து இருக்கிறார்.

முக்கியமாக டுனீசியாவில் வாழ்ந்த விலங்கின் எலும்பு அமைப்பானது மிகவும் தொன்மையானது என்றும்,அந்த விலங்கின் தொன்மையானது ஐந்து கோடி ஆண்டுகளாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடற் பசுவானது ஆப்பிரிக்கப் பகுதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையில் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் இருக்கும் அமெரிக்காவுக்கு நடக்கும் கடற் பசுக்களே சென்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஒரே காலத்தில் அட்லாண்டிக் கடலுக்கு இரண்டு பக்கமும் நடக்கும் கடற் பசுக்கள் இருந்திருப்பது புதிராக இருக்கிறது.
eomap.jpg
இதன் மூலம் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களுக்கு நடக்கும் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமும் அதே போன்று அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் மாநாட்டி வகைக் கடற் பசுக்கள் காணப் படுவதன் மூலமும்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

அத்துடன் ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் மூலமாகவும், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து பின்னர் தற்பொழுது இருக்கும் மட்டத்துக்கு உயர்ந்து இருப்பதும்,அதனால் கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதும் அதனால் பூமியின் கால நிலையில் குளிர்ச்சி அடைந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.

ஆனால் தற்பொழுது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் பிரிந்ததால் அட்லாண்டிக் கடல் உருவானதாகவும்,அதனால் கண்டங்கள் பிரிந்த பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக சாகசக் கடல் பயணம் செய்து மற்ற கண்டங்களை அடைந்ததாக வினோதமான விளக்கங்கள் கூறப் படுகின்றன.

காண்டா மிருகங்கள் இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள சுமத்ரா,ஜாவா தீவுகளிலும் காணப் படுகின்றன.அந்தத் தீவுகள் அறுநூறு அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டுள்ளது.

பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பெரும்பாலான பகுதி பனியால் மூடப் பட்டு இருந்ததாகவும்.அப்பொழுது கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் நம்பப் படுகிறது.

அதன் பின்னர் பனி உருகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டம் அறுநூறு அடி உயர்ந்ததாக நம்பப் படுகிறது.இவ்வாறு கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது தீவுகளுக்கு விலங்கினங்கள் சென்றதாக நம்பப் படுகிறது.

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜமைக்கா தீவானது அறுநூறு அடிக்கும் அதிகமான ஆழமான கடல் பகுதியால் பிரிக்கப் பட்டுள்ளது.

எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,பனியுகக் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலாது.

எனவே ஜமைக்கா தீவில் காண்டா மிருகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து பின்னர் தற்பொழுது உள்ள உயரத்துக்கு உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.