தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படிச் சென்றன ?


I do not deny that there are many and grave difficulties in understanding how several of the inhabitants of the more remote islands, whether still retaining the same specific form or modified since their arrival, could have reached their present homes. Charles Darwin 


தொலை தூரத்தில் அமைந்து இருக்கும் பல தீவுகளில் காணப் படும் விலங்கினங்கள்,எப்படி அந்தத் தீவுகளை அடைந்திருக்க முடியும்.அந்தத் தீவுகளுக்கு வந்ததில் இருந்தே அதே உருவத்துடன் இருக்கிறதா அல்லது மாற்றம் பெற்று இருக்கிறதா என்று புரிந்து கொள்வதில் கடினம் இருக்கிறது என்பதை நான் மறுக்க வில்லை-விஞ்ஞானி சார்லஸ் டார்வின்.

விஞ்ஞானி சார்லஸ் டார்வின் காலத்தில் இருந்தே, தொலை தூரத் தனிமைத் தீவுகளில் காணப் படும் பல வகையான விலங்கினங்கள் எப்படி அந்தத் தீவுகளுக்குச் சென்றன என்பது விடுவிக்கப் படாத புதிராக இருக்கிறது.

உதாரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூற்றி இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் காணப் படும் லெமூர் குரங்கினம்,டென்ரெக் என்று அழைக்கப் படும் பூச்சித் திண்ணி,போசா என்று அழைக்கப் படும் இரையுண்ணிகள் எப்படி அந்தத் தீவுகளை அடைந்தது என்று இன்றுவரை உறுதியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.

இனப் பெருக்கம் செய்யக் கூடிய அளவுக்கு கூட்டமாக சில விலங்கினங்கள், காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம்,பல நாட்கள் கடலில் தத்தளித்த படி தற்செயலாக அந்தத் தீவை அடைந்து இருக்கலாம் என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனாலும் மடகாஸ்கர் தீவில் காணப் படும் லெமூர் குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆனி யோடர்,லெமூர் குரங்குகள் மடகாஸ்கர் தீவுக்கு எப்படி வந்தது என்பது யூகம் சம்பந்தமான விஷயம் என்று தெரிவித்து இருக்கிறார்.


இந்த நிலையில் தற்பொழுது பிரதான நிலப் பகுதிகளில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் தீவுகளில், விலங்கினங்கள் காணப் படுவதற்குப் பொதுவாக புயல், சூறாவளி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட, மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் உதவியுடன், விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி, தற்செயலாகத் தீவுகளை அடைந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து பெருகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இந்த முறையில் தீவுகளில் விலங்கினங்கள் பெருக, ஆண் மற்றும் பெண்  விலங்கினங்கள் தேவை,எனவே பல விலங்கினங்கள் பல நாட்கள் ஒரு சேர மிதந்து வர வேண்டும்.ஆனால் அது சாத்தியமா?அல்லது குறைந்த பட்சம் ஒரு ஒரு கர்ப்பிணி விலங்காவது இந்த முறையில் வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளில் காணப் படும் விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம்,கடல் மட்டம் ஆயிரம் அடிக்கும் தாழ்வாக இருந்ததன் காரணமாகவே ,அந்தத் தீவுகளுக்கு விலங்கினங்கள் சென்று இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
medc.jpg
medc.jpg


ஐரோப்பா,ஆசியா,மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு நடுவில் இருபத்தி ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் மத்திய தரைக் கடலில்,ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகள் இருக்கின்றன.

அதில் சைப்ரஸ்,மால்ட்டா,கிரிட்டி,சிசிலி,சார்டினியா,டெலோஸ்,நாக்சாஸ்,கித்னோஸ்,செரிபோஸ்,மிலாஸ்,ரோடிஸ்,திலாஸ்,என பத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் குள்ள வகை யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று ஒன்பது தீவுகளில் மான்களின் புதை படிவங்களும்,சைப்ரஸ்,கிரிட்டி,சிசிலி,மால்டா என நான்கு தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
medc1.jpg
medc1.jpg
குறிப்பாக இந்த விலங்கினங்கள் பிளிஸ்டோசீன் காலம் என அழைக்கப் படும், இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் தீவுகளுக்கு வந்து இருப்பதாகப் புதை படிவங்களின் அடிப்படையில் தொல் விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சிசிலி தீவில் மூன்று முறை யானைகள் வந்து இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும், பல தீவுகளுக்கு பல இனத்தைச் சேர்ந்த விலங்கினங்கள் வந்து இருப்பதன் மூலம், இந்த விலங்கினங்கள் தற்செயலாக இந்தத் தீவுகளுக்கு வந்து இருக்க வில்லை என்பதும்,கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த நிலத் தொடர்பு வழியாகவே விலங்கினங்கள் இந்தத் தீவுகளுக்கு வந்திருப்பதும் உறுதியாகிறது.

இதன் மூலம் தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை வளி மண்டலத்தில் கலப்பதால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலை உயர்ந்து, அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகிக் கடலில் கலப்பதால்தான் கடல் மட்டம் உயர்கிறது, என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.

medc12.png
medc12.png
தற்பொழுது துருவப் பகுதிகளில் உள்ள பனி மற்றும் ஆல்ப்ஸ்,இமய மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் உள்ள பனி முழுவதும் உருகிக் கடலில் கலந்தாலும் கூட அதிக பட்சமாகக் கடல் மட்டமானது,இருநூற்றி நாற்பது அடி வரை உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
இவ்வாறு துருவப் பகுதிகளில் பனி உருவாகுவதற்கு சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வட்டப் பாதையில் ஏற்படும் மாற்றங்களே காரணம், என்று செர்பிய நாட்டைச் சேர்ந்த மிலன் கோவிச் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு கருத்தைக் கூறினார்.

அதாவது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுவட்டப் பாதையானது சில காலம் விரிவடைவதாகவும், சில காலம் குறுகுவதாகவும், அதனால்  பூமியில் பனிப் படலங்கள் உருவாகிப் பின் அழிவதாக விளக்கம் கூறினார்.

அதன் அடிப்படையில் பூமியானது சூரியனை விட்டு விலகிச் சென்று பெரிய வட்டப் பாதையில் சுற்றி வரும் பொழுது ,பூமியின் வெப்ப நிலை குறைந்து நிலத்தின் மேல் பனி படிவதாகவும், அதனால் கடல் மட்டம் தாழ்வடைவதாகவும் நம்பப் படுகிறது.

அதே போன்று பூமியானது சூரியனை நெருங்கி வந்து சுற்றும் காலத்தில் பூமியின் வெப்ப நிலை அதிகரித்து, அதனால் நிலத்தின் மேல் உள்ள பனி உருகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.ஆனால் மிலன்கொவிச் கருத்துக்கு நேரடியான ஆதாரம் எதுவும் இல்லை.

அத்துடன் இந்த விளக்கத்தில் உள்ள முக்கியமான தவறு என்னவென்றால்,சூரியனைச் சுற்றும் பூமியின் சுற்று வட்டப் பாதை அகலமாகி, பூமியில் குளிர்ச்சி ஏற்பட்டு, நிலத்தின் மேல் பனி படியும் பொழுது, கடல் நீர் மேற்கொண்டு ஆவியாகுவதும் நின்று விடும்.எனவே ஏற்கனவே வளி மண்டலத்தில் உள்ள நீரே நிலத்தின் மேல் பனியாகப் படியும்.

அதே போன்று சூரியனைச் சுற்றும் பூமியின் சுற்று வட்டப் பாதை சுருங்கிநாள் கூட, பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கும் பொழுது,நிலத்தில் உள்ள பனி உருகிக் கடலில் கலக்கும் அதே நேரத்தில், கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்.

எனவே பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்பட்டு, கடல் மட்டத்தில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதாகக் கூறப் படும் விளக்கம் ஏற்கத் தக்கதல்ல.

முக்கியமாகத் தற்பொழுது பூமியின் மேல் உள்ள பனி முழுவதும் உருகிக் கடலில் கலந்தால் கூட, கடல் மட்டமானது அதிக பட்சம் நானூற்றி நாற்பது அடிதான் உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

medc18.png
medc18.png
ஆனால் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரீட்டி தீவானது, ஆயிரம் அடி ஆழமான கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில் கிரிட்டி தீவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ,குள்ள வகை யானை,குள்ள வகை நீர் யானை,குள்ள வகை மான்,ராட்சத முயல் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் ஆயிரம் அடிக்கும் அதிக ஆழமாக இருந்திருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் ஆயிரம் அடி வரை உயர்ந்து இருப்பதும் உறுதியாகிறது.

எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு உண்மையான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ஜப்பானில் உள்ள மாச்சு ஹிரோ நகரில் உள்ள சுடு நீர் ஊற்றுக்களில் இருந்து வெளியான நீரை, ஜப்பானின் தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டாக்டர் யோசிதா தலைமையிலான குழுவினர் ,சேகரித்து பகுப்பாய்வு செய்தனர்.
அப்பொழுது,அந்த நீரில் உள்ள ஐசொட்டோப்புகள், பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து வெளியான  ஐசொட்டோப்புகள் என்பது தெரிய வந்தது.

இதன் அடிப்படையில் அந்த நீரனது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிய பொழுது வெளியான நீர் என்பதை டாக்டர் யோசித்தா கண்டு பிடித்தார்.

இதே போன்று கடலுக்கு அடியிலும் பல சுடு நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.

எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும் பொழுது வெளியாகும் நீர், கோடிக் கணக்கான ஆண்டுகளாகக் கடலில் கலந்ததால்தான் கடல் உருவாகி இருப்பதுடன், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணமாக இருப்பதும் உறுதியாகிறது.
medc6.jpg
medc6.jpg


இந்த நிலையில் மத்திய தரைக் கடலுக்கு அடியில், 1970 ஆம் ஆண்டு குளோமர் சேலஞ்சர் என்ற ஆய்வுக் கப்பல் மூலம் துளையிட்டு பாறைகளின்   மாதிரிகள் சேகரிக்கப் பட்ட பொழுது,மத்திய தரைக் கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு உப்புப் படிவங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதன் மூலம் மத்திய தரைக் கடலானது ஒரு காலத்தில் வறண்ட நிலையில் பெரிய உப்புப் பாலை வனமாக இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இன்றும் கூட  மத்திய தரைக் கடலின் உப்புத் தன்மையானது  அட்லாண்டிக் கடலில் உப்புத் தன்மையை விட அதிகமாக இருக்கிறது.

மத்திய தரைக் கடலுக்கு அடியில் இவ்வாறு இரண்டு கிலோ மீட்டர் உயரமுள்ள உப்புப் படிவம் உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டம் நகர்ந்து ஐரோப்பாக் கண்டத்துடன் இணைந்ததாகவும், அதனால் அட்லாண்டிக் கடலில் இருந்து மத்திய தரைக் கடல் பகுதி தனியாகத் துண்டிக்கப் பட்டதாகவும் ,அதன் பிறகு மத்திய தரைக் கடலில் இருந்த நீர் ஆவியாகி விட்டதாகவும்,அதனால் மத்திய தரைக் கடல் தளத்தின் மேல், இரண்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு உப்புப் படிவங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
medc7.gif
medc7.gif
மத்திய தரைக் கடல் பகுதியானது, ஒரு பெரிய தொட்டி போல் இருக்கும் நிலையில், அதன் மேல் பகுதியில் மட்டும், ஆழமற்ற ஜிப்ரால்டர் ஜல சந்தியால், அட்லாண்டிக் கடலுடன் இணைக்கப் பட்டு இருக்கிறது.

அதன் வழியாக அட்லாண்டிக் கடலில் இருந்து, கடல் நீர் வழிந்து மத்திய தரைக் கடலுக்குள் வந்த பிறகு, அந்த நீரும் ஆவியாகிப் போனதால் மத்திய தரைக் கடல் பகுதியில் உப்புப் படிவங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

அதன் பிறகு மத்திய தரைக் கடலுக்குள் நீர் வெள்ளமெனப் புகுந்ததால் மத்திய தரைக் கடல் உருவானதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு மத்திய தரைக் கடல் தாழ்வாக இருந்த பொழுது ஐரோப்பாக் கண்டதுக்கும், மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்த தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்ததாகவும், அதன் வழியாக விலங்கினங்கள், மத்திய தரைக் கடல் தீவுப் பகுதிகளுக்கு வந்த பிறகு, கடல் மட்டம் உயர்ந்ததால், விலங்கினங்களால் தீவை விட்டு வெளியேற இயலாத நிலையில், தீவுகளிள் குறைந்த உணவே கிடைத்த நிலையில் காலப் போக்கில் குள்ள வகை விலங்கினங்களாக மாறி விட்டதாக விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் இருபத்தி ஐந்து லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் ஐயாயிரம் மீட்ட ஆழமுள்ள கடல் நீர் ஏன் பெருமளவு ஆவியாகியது என்ற கேள்விக்கு இது வரை சரியான விளக்கம் கூறப் படவில்லை.

உண்மையில் மத்திய தரைக் கடல் ஆவியாகி இருந்தால் அதனை ஒட்டி இருக்கும் கருங் கடலும் ஆவியாகி இருக்க வேண்டும்,அதிலும் உப்புப் படிவங்கள் உருவாகி இருக்க வேண்டும். ஆனால் மத்திய தரைக் கடலில் காணப் படுவதைப் போன்று கருங் கடலில் உப்புப் படிவங்கள் காணப் படவில்லை.

எனவே மத்திய தரைக் கடல் ஆவியானதாகக் கூறப் படும் விளக்கத்தை  ஏற்றுக் கொள்ள இயலாது.

அப்படியென்றால் மத்திய தரைக் கடலுக்கு அடியில் இருக்கும் உப்புப் படிவங்கள் எப்படி உருவாகியது? என்ற கேள்வி எழுகிறது.
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.இந்த நிலையில் கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் பரவலாகக் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் புலனாகிறது.
கண்டங்கள் உயர்வதற்கு கண்டங்களுக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகளாக உருவாகும் பொழுது அதன் பருமன் அதிகரிப்பதால் கண்டங்கள் உயர்கின்றன.

இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும் பொழுது, அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிகின்றன.இவ்வாறு பூமிக்கு அடியில் உருவாகும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்கிறது.
இவ்வாறு கடல் மட்டம் உயர்ந்த பொழுது, உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலைப் போன்று, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாக் கண்டத்துக்கு இடையில் தனியாக இருந்த மத்திய தரைக் கடல் பள்ளத் தாக்கில், அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து தளும்பி வழிந்த நீர்,மத்திய தரைக் கடல் இருக்கும் பள்ளத் தாக்கில் சேர்ந்தது.

அதன் பிறகு அந்த நீர் ஆவியானது.இது போன்று பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்றதால் மத்திய தரைக் கடல் பகுதியில் உப்புப் படிவங்கள் உருவானது.

இது போன்று லட்சக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடை பெற்ற பிறகு, அட்லாண்டிக் கடலின் மட்டம் உயர்ந்ததால் அதே நேரத்தில் கண்டங்கள் உயராமல் போனதால்,அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து நீர் வரத்து அதிகமானதால், மத்திய தரைக் கடல் உருவாகி இருக்கிறது.

இவ்வாறு மத்திய தரைக் கடலின் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது ஐரோப்பாக் கண்டதுக்கும், மத்திய தரைக் கடல் பகுதியில் தற்பொழுது தீவுகளாக உருவாகி இருக்கும், முகடுகள் மற்றும் மலைகளுக்கும் இடையில் இருந்த நிலத் தொடர்பு வழியாக, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து விலங்கினங்கள் வந்திருக்கின்றன.
அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் தீவுகளாக முகடுகளும் மலைகளும் தீவுகளாக உருவாகி இருக்கின்றன.

medc tools.jpg
medc tools.jpg

medc tools1.jpg
medc tools1.jpg
கிரீட்டி தீவில் கற்கால மனிதர்கள்

மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் கிரிட்டி தீவானது கடந்த ஐம்பது லட்சம் ஆண்டு காலமாக தீவாக இருந்ததாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் கிரிட்டி தீவில் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மற்றும் ஏழு லட்சம் ஆண்டுகள் தொன்மையான கற்கருவிகளை, கிரீஸ் நாட்டைச் சேர்ந்த தொல் மானிடவியல் வல்லுநர் எலனி பனாகொ போலோவ் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர்.

இதன் அடிப்படையில் ஹோமோ ஏரக்ட்ஸ் என்று அழைக்கப் படும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், நாற்பது கிலோ மீட்டர் கடல் பயணம் செய்து கிரிட்டி தீவை அடைந்து இருக்கலாம் என்று மானிடவியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
Mungo Man.jpg
Mungo Man.jpg
இதற்கு முன்பு தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவில் முங்கோ ஆற்றுப் பகுதியில் ,சடங்கு சம்பிராதாயத்தின் படி புதைக்கப் பட்ட நாற்பத்தி இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்ட பொழுதும், இதே போன்று கற்கால மனிதர்கள் கட்டு மரத்தின் மூலம் ஆஸ்திரேலியக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர். ராபர்ட் பெட்நரிக்  என்ற தொல் பொருள் ஆராய்ச்சியாளர் கருத்து தெரிவித்தார்.
அத்துடன் கற்கருவிகள் மூலம் மூங்கில்களை செதுக்கி கட்டு மரம் ஒன்றைச் செய்து மாதிரிப் பயணம் ஒன்றையும் மேற்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் கல்லைக் கொண்டு ஒரு மூங்கிலைக் கூட வெட்ட இயலவில்லை.கல்லைக் கொண்டு மூங்கில்களை வெட்டும் பொழுது மூங்கில்களிள் பிளவு பட்டது.அது போன்ற மூங்கில்களைக் கொண்டு கட்டு மரம் செய்தால் ,அந்தக் கட்டு மரங்களால் மிதக்க இயலாது.

பின்னார் கத்தி கோடாலி போன்ற இரும்புக் கருவிகள் மூலமாகவே கட்டு மரத்தை செய்ய முடிந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ளாயின் டேவிட்சன் என்ற மானிடவியல் வல்லுநர்,கடந்த இரண்டரை லட்சம் ஆண்டு காலமாகவே கற்கால மனிதர்கள் உருவாக்கிய கற்கருவிகளில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் காணப் பட வில்லை,எனவே கற்கால மனிதர்களின் அறிவு நிலையிலும்  வளர்ச்சி ஏற்பட்டு இருக்க வில்லை என்று விளக்கம் கூறி, கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்யும் அளவுக்கு அறிவு பெற்றவர்கள் அல்ல என்று தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் சிசிலி தீவிலும், சைப்ரஸ் தீவிலும் கூட கற்கருவிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது மத்திய தரைக் கடல் பகுதியில் தற்பொழுது தீவுகளாக இருக்கும் நிலப் பகுதிகள், ஐரோப்பாக் கண்டதுடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்திருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

அதன் வழியாகவே கற்கால மனிதர்க்கள் கிரிட்டிக்கும், சிசிலிக்கும், சைப்ரசுக்கும் சென்று இருகின்றனர்.அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கிரிட்டி,சிசிலி,மற்றும் சைப்ரஸ் போன்ற நிலப் பகுதிகள் தீவுகளாக உருவாகி இருக்கின்றன.

மனிதக் குரங்குகளின் கடல் பயணம் 
 medc21.jpg
medc21.jpg
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டார் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த லெமூர் குரங்குகள் காணப் படுகின்றன.

இதன் அடிப்படையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு லெமூர் குரங்கின் மூதாதைகள்,ஆப்பிரிக்காவில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் ஒரு வார காலம் கடலில் தத்தளித்த படி மிதந்து சென்று, மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இருப்பினும் மடகாஸ்கர் தீவில் லெமூர் குரங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் டாக்டர் ஆனி யோடர் என்ற விலங்கியல் வல்லுநர் அது யூகம் சம்பந்தமானது என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ஆசியக் கண்டத்தில் இருந்தும் மனிதக் குரங்குகள் இதே போன்று மரக் கிளைகள் மூலமாகவே கடல் பகுதியைக் கடந்து ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தற்பொழுது விலங்கியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக மனிதக் குரங்கு என்று அழைக்கப் படும் சிம்பன்சி,உராங்குட்டான் போன்ற நிமிர் நடைக் குரங்குகளின் மூதாதை,ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த பிறகு ஆசியக் கண்டத்துக்கு பரவி இருக்கலாம் என்று நீண்ட காலமாகவே நம்பப் பட்டது.

இந்த நிலையில் மியான்மர் நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள மோகாயுங் என்ற கிராமத்தில்.மூன்று கோடியே எழுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான ஒரு குரங்கின் பல்லை ,பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாய்ட்டியர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்,ஜீன் ஜாக்வஸ் ஜீகர் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார்.மேலும் ஆறு ஆண்டுகள் தனது குழுவினருடன் அதே பகுதியில் மண்ணைத் தோண்டி மேலும் மூன்று பற்களைக் கண்டு பிடித்தார்.

மியான்மர் நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட பல்லுக்கு சொந்தமான விலங்குக்கு ஆஃப்ரேசியே டிஜிடே என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.  அந்தப் பல்லானது ஆப்பிரிக்காவில் எகிப்து நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட ஆஃப்ரோ டார்சியஸ் லிபிகஸ் என்று பெயர் சூட்டாப் பட்ட ,மூன்று கோடியே எண்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான விலங்கின் பற்களை ஒத்து இருந்தது.

மியான்மர் நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட பல்லானது எகிப்து நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட பல்லை விட, தொண்மை குறைவாக இருந்தாலும் கூட , அதன் அமைப்பானது மிகவும் தொன்மையாக இருந்ததாகவும், அதன் அடிப்படையில் மனிதக் குரங்குகளின் மூதாதையானது, ஆசியக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த பிறகு ,ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக, டாக்டர்,ஜீன் ஜாக்வஸ் ஜீகர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் ஆப்பிரிக்கக் கண்டமானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படும் கோண்டுவானா என்ற கண்டத்தில் இருந்து, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாகவும் அதற்கு முன்பு,ஆப்பிரிக்கக் கண்டமானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக மூன்று கோடியே எண்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில், மத்திய தரைக் கடலை விடப் பெரிய அளவில், டெதிஸ் என்ற கடல் இருந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இதன் அடிப்படையில் மனிதக் குரங்கின் மூதாதைகள் ஆசியக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் கடலில் தத்தளித்த படி, ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு சென்று இருக்கலாம் என்று விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இதே போன்று ஹிஸ்ட்ரிக்கோ நேதஸ் என்று அழைக்கப் படும் கொறித்துண்ணி மற்றும் ஆந்திரகோ தீரிடே என்று அழைக்கப் படும் நீர் யானை போன்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்களும், ஆசிய மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம், அந்த விலங்கினங்களும் அதே காலத்தில், மரக் கிளைகள் மூலம் கடலில் தத்தளித்த படி ஆசியக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்து இருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கடல் மட்டம் பலாயிரம் அடி வர தாழ்வாக இருந்தான் காரணமாகவே விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்று இருப்பது,மத்திய தரைக் கடல் பகுதியில் காணப் படும் பல தீவுகளில் பல இனத்தைச் சேர்ந்த விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.