கரீபியன் தீவு விலங்கினங்கள்.

ttsloth.jpg
ttsloth.jpg
பொதுவாகக் கண்டங்களில் இருந்து தொலை தூரத்தில் அமைந்து இருக்கும் தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள்,மற்றும் தாவரங்கள் மூலம் ,பல விலங்கினங்கள் கூட்டமாக மிதந்த படி,கடலில் பல நாட்கள் தத்தளித்த படி,மிதந்து தற்செயலாகத் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காக் கண்டங்களுக்கு அருகில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,பெரிய தீவுகளான,கியூபா,ஹிஸ்பானோலியா,போர்டோரிகோ மற்றும் ஜமைக்கா,ஆகிய தீவுகளில், இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்லோத் என்று அழைக்கப் படும் மரத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு வாழும் விலங்கினம், சென்று வாழ்ந்திருப்பது அந்தத் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதே போன்று ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுகளில் பல இனத்தைச் சேர்ந்த குரங்குகள்,மற்றும் கொறித்துண்ணிகள், சென்று வாழ்ந்து இருப்பதும் ,அந்தத் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட, புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல இனத்தைச் சேர்ந்த விலங்கினங்கள், பல கரீபியன் தீவுகளுக்கும் சென்று வாழ்ந்து இருப்பதன் மூலம்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதும்,கடல் மட்டம் தாழ்வாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.


வட அமெரிக்கக் கண்டதுக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும் நடுவில் ,இரண்டு கோடியே,ஏழு லட்சத்தி,ஐம்பத்தி நாலாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கடல் பகுதி கரீபியன் கடல் என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கடல் பகுதியில் எழாயிரம் தீவுகள் சிதறிக் கிடக்கின்றன.அதன் மொத்த நிலப் பரப்பானது,இரண்டு லட்சத்தி முப்பத்தி ஒன்பதாயிரம் சதுர கிலோ மீட்டர்.அதில் கியூபா,ஹிஸ்பானோலியா,போர்டோ ரிகோ,மற்றும் ஜமைக்கா ஆகிய தீவுகள் பெரிய தீவுகள்.

தற்பொழுது இந்தத் தீவுகளில் 89  இன பாலூட்டி விலங்கினங்கள் காணப் படுகின்றன.அதில் 41 இனங்கள் உலகில் வேறு எங்கும் காண இயலாத அரிய வகை விலங்கினங்கள்.வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் அந்த விலங்கினங்களை மேட் இன் கரீபியன் என்று சொல்லலாம்.


அதே போன்று கரீபியன் தீவில் காணப் படும் 502  இன ஊர்வன வகை விலங்கினத்தில் 469 ஊர்வன வகை விலங்கினங்கள்,கரீபியன் தீவுகளில் மட்டுமே காணப் படக் கூடிய விலங்கினங்கள் ஆகும்,
இதே போன்று கரீபியன் தீவுகளில் காணப் படும் 170 வகையான தவளைகளும் உலகில் வெறும் எங்கும் காண இயலாத வகையாகும்.


இந்த விலங்கினங்களின் மூதாதையானது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுகளுக்கு வந்த பிறகு ,தீவை விட்டு வெளியேற இயலாத நிலையில்,புதிய இன வகைகளாக பரிணமித்தவைகள்.
ஆனால் எப்படி இந்த விலங்கினங்கள் கரீபியன் தீவுக்கு அருகில் உள்ள அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எப்படி வந்தன? என்ற கேள்விக்கு இன்று வரை யாராலும் சரியான பதிலைக் கூற இயலவில்லை.


கரீபியன் தீவின் பாலூட்டிகள்

சொலினோடோண்ட் மர்மம்.

 soleno.png
soleno.png
சொலினோடோண்ட் என்று அழைக்கப் படும் மூஞ்சூறு போன்ற பூச்சித் திண்ணி விலங்கினம் பாலூட்டி வகைகளிலேயே சற்று வினோதமானது.

இந்த விலங்கிற்கு பாம்பைப் போன்ற விஷப் பல் உண்டு,அதில் இருக்கும் குறுகிய பிளவு மூலம் விஷத்தை வெளிப் படுத்தக் கூடியது.இந்த விலங்கினமானது மிகவும் தொன்மையான பாலூட்டி இனமாகும்.குறிப்பாக டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த ப்லூட்டி விலங்கினத்தைப் போன்ற பண்புகளை உடையது.

இந்த இனத்தில் தற்பொழுது இரண்டு சிற்றினங்கள் மட்டுமே உள்ளது.

அதில் க்யூபா தீவில் காணப் படும் க்யூபன் சொலினோடோன்,மற்றும் ஹைத்தி நாடு அமைந்து இருக்கும் ஹிஸ்பானியோலான தீவில் காணப் படும் சொலினோடோன் பாரடாக்சஸ்.

இதன் மூதாதைகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால் எப்படி இந்த சிறிய விலங்கினம் கரீபியன் தீவுகளுக்கு வந்தது?

சொலினோடோண்ட் விலங்கினங்கள் க்யூபா மற்றும் ஹைத்தி என இரண்டு தீவுகளிலும் காணப் படுகிறது,எனவே இந்த விலங்கினம் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம் தற்செயலாக மிதந்த படி, கியூபா மற்றும் ஹைத்தி என இரண்டு தீவுகளுக்கும் தற்செயலாக வந்திருக்க இயலாது.

சொலினோடோண்ட்களின் பரிணாமம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வரும் ,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,உயிரியல் பேராசிரியர்,டாக்டர் ஸ்பிரிங்கர்,மரபணு ஆய்வின் அடிப்படையில்,சொலினோடோண்ட் விலங்கினங்கள் டைனோசர்கள் காலத்திலேயே வாழ்ந்திருகின்றன,என்றும் இதன் இனமானது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் வாழ்ந்து இருந்தாலும்,கரீபியன் தீவு சொலினோடோண்ட்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த இனத்துடன் தொடர்பு உடையது  என்றும் தெரிவித்து இருக்கிறார்.

solinodon.png
solinodon.png

ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து சொலினோடோண்ட்கள் நிலத் தொடர்பு வழியாக கியூபா மற்றும் ஹைத்தி தீவுகளுக்கு வந்ததா? அல்லது,மரக் கிளைகள் மூலம் கடலில் மிதந்து வந்ததா? என்று தெளிவாகவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.


மேலும் அவர்,விஞ்ஞானிகள், சொலினோடோண்ட்களின் புதை படிவங்கள் பற்றியும் புவியியல் ஆதாரங்கள் பற்றியும் மறுபடியும் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே கியூபா தீவில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புகளை தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.எனவே டைனோசர்கள் காலத்தில் கியூபா உள்ளிட்ட கரீபியன் தீவுகள் அமெரிக்கக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே சொலினோடோண்ட் விலங்கினங்களும் கியூபா மற்றும் ஹைத்தி தீவுகளுக்கு நிலத் தொடர்பு வழியாகவே வந்து சேர்ந்திருக்கிறது.

கடல் பயணம் செய்த கரீபியன் தவளைகள் 

caribbean frog.png
caribbean frog.png

caribbean frogs.png
caribbean frogs.png

தவளைகள் பெரும்பாலும் வெய்யிலைத் தவிர்த்து விடும் என்னென்றால் தவளையின் உடலில் உள்ள நீர் வெளியறி உலர்ந்தால் தவளை இறந்துவிடும் அதே போன்று தவளைகள் அதிக காற்றோட்டம் உள்ள இடத்தையும் தவிர்த்து விடும்.


இந்த நிலையில் கரீபியன் தீவுகளில் தவளைகள் காணப் படுவதற்கு,ஏழு அல்லது எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுகளுக்கும் அமெரிக்கக் கண்டதுக்கும் நிலத் தொடர்பு இருந்து அதன் வழியாக அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தவளைகள் கரீபியன் தீவுகளுக்கு வந்து சேர்ந்திருக்கும் என்று நம்பப் பட்டது.


இந்த நிலையில் கரீபியன் தீவுகளில் காணப் படும் எழுதிரோ டாக்டிலோ என்று அழைக்கப் படும் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ்,கரீபியன் தீவுகளுக்கு மூன்று முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ,கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி ,கடல் வழியாக கரீபியன் தீவுக்கு வந்து சேர்ந்த தவளையில் இருந்து பல்கிப் பெருகியதாக விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.


அந்தக் கடல் பயணத்தின் பொழுது தவளை உண்ணுவதற்கு மிதவைத் தாவரங்களில் பூச்சிகள் இருந்திருக்கலாம் என்றும்,அதே போன்று தவளை குடிப்பதற்கு நல்ல நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர்,பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

கரீபியன் தீவுகளின் குரங்கினங்கள்

 caribbean primate fossils.jpg
caribbean primate fossils.jpg

கரீபியன் தீவுகளில் ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு குரங்கினங்கள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கரீபியன் தீவுகளில் வாழ்ந்த குரங்கினங்கள்,தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் டிடிஸ் என்ற குரங்கினத்தைச் சேர்ந்தது என்று நம்பப் படுகிறது.


கரீபியன் தீவுக் குரங்குகள் செனோத்ரிக்ஸ் இனம் என்று அழைக்கப் படுகிறது.இந்த இனத்தில் உள்ள மூன்று சிற்றினங்களில், ஜமைக்கா தீவில் வாழ்ந்த குரங்கு சொனோத்ரிக்ஸ் மெக் கிரிகோரி என்றும் கியூபா தீவில் வாழ்ந்த குரங்கினம்  பாராலாட்ட வெரோனாய்,என்றும்,ஹிபானோலியா தீவில் வாழ்ந்த குரங்கு ஆண்டிலோத்ரிக்ஸ் பெர்னென்சிஸ் என்றும் அழைக்கப் படுகிறது.


கடந்த 1990 ஆம் ஆண்டு கியூபா தீவில் உள்ள ஒரு குகையில் கண்டு பிடிக்கப் பட்ட குரங்கின் எலும்புகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் மெக் பி என்ற விலங்கியல் வல்லுநர்,கியூபா,ஜமைக்கா மற்றும் ஹிபாநோலியா ஆகிய மூன்று தீவுகளிலும் வாழ்ந்த குரங்குகள் ஒரே பொது மூததையில் இருந்து, இன மாறுபாடு அடைந்தவை என்று தெரிவித்தார்.


இந்த நிலையில் நியூ யார்க் ப்ரூக்ளின் கலோரியைச் சேர்ந்த டாக்டர்,ஆல்பிரட் ரோசென் பெர்கர் ,கடந்த 2009 ஆம் ஆண்டு ஹிபானோலியா தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து,குரங்கின் எலும்புகளைக் கண்டு பிடித்தார்.அதனை ஆய்வு செய்ததன் அடிப்படையில் அந்தக் குரங்கானது ஹாவ்ளர் குரங்கின் இனத்தைச் சேர்ந்தது என்றும்,அதன் அடிப்படையில் கரீபியன் தீவுகளுக்கு பல குரங்கினங்கள் வந்து இருக்கின்றன என்றும்,பல முறை குரங்குகள் கரீபியன் தீவுகளுக்கு வந்து இருக்கின்றன என்றும் தெரிவித்து இருக்கிறார்.

caribbean primate fossil.png
caribbean primate fossil.png



இவ்வாறு கரீபியன் தீவுகளுக்கு பல முறை பல குரங்கினங்கள் வந்து இருப்பதன் மூலமாகவும்,கரீபியன் தீவுகளுக்கும்,அமெரிக்கக் கண்டதுக்கும் நிலத் தொடர்பு இருந்து இருப்பதும் கடல் மட்டம் ஆயிரம் அடிக்கும் அதிகமாக தாழ்வாக இருந்து  இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.


ஸ்லோத்துகள் எப்படி கடல் கடந்தன ?


ஸ்லோத், மரங்களில் தலை கீழாய் நடக்கும் ஒரு விலங்கு.


தென் அமெரிக்கக் கண்டத்தில் ஸ்லோத் என்று அழைக்கப் படும் குரங்கு போன்ற விலங்கினங்கள் ,கால்களில் உள்ள நீண்ட வளை நகங்களால் மரங்களின் உச்சியில் உள்ள கிளைகளைப் பற்றிய படி தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இளந்தளிர்களையும் மொட்டுக்களையும் உண்டு வாழ்கிறது.அதே நிலையில் மரக் கிளைகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகவே நடக்கிறது.
ஸ்லோத் என்ற சொல்லுக்கு சோம்பல் என்று பெயர்,ஆனால் இந்த விலங்கு சோம்பலான விலங்கு அல்ல,இதன் நகர்வு மற்றும் அசைவுகள் எல்லாமே மிகவும் மெதுவாகவே இருக்கின்றன.


இதற்கு காரணம் இந்த விலங்கு சத்துக் குறைவான இலைகளை உண்ணுவதே காரணம். இந்த விலங்கின் வளர்ச் சிதை மாற்றமானது மற்ற பாலூட்டி விலங்கினங்களுடன் ஒப்பிடும் பொழுது ,நாற்பது முதல் அறுபது சத வீதமாக இருக்கிறது.


இந்த விலங்கு பெரும் பாலும் மரத்தில் தலை கீழாகத் தொங்கிய படியே இருப்பதால் இதன் ரோமங்கள் வயிற்றுப் பகுதியில் இருந்து முதுகுப் பக்கமாக நீண்டு இருக்கின்றன.அதில் பூச்சிகள் வசிக்கின்றன.அத்துடன் ,பாசிகளும் வளர்ந்து பச்சை நிறத்துடன் இருப்பதால், இதன் அசைவுகளும் மிக மெதுவாக இருப்பதாலும், மரத்தில் இந்த விலங்கு இருப்பது மற்ற விலங்குகளின் கவனத்தைக் கவர்வதில்லை.அது இந்த விலங்குக்கு பாதுகாப்பை அளிக்கிறது.


இந்த விலங்கின் ,வயிறு,கல்லீரல் மற்றும் ஈரல் போன்ற உள்ளுருப்புகளும் கூட, இந்த விலங்கின் தலை கீழ் வாழ்க்கைக்கு ஏற்ப இடம் மாறி அமைந்து இருக்கின்றன.இதன் எலும்பு மற்றும் தசை இணைப்புகளும் கூட தலை கீழ் வாழ்க்கைக்கு ஏற்ப இருக்கிறது.
பெரும்பாலும் தாவர உண்ணி விலங்கினங்களுக்கு தாவரத்தில் உள்ள கடினமான செல்லுலோசைச் செரிப்பதற்கு எதுவாக, நீண்ட குடலைப் பெற்று இருக்கும்.ஆனால் ஸ்லோத்தின் குடல் மிகவும் சிறியது.


அதனால் அதில் உணவு மெதுவாகவே செரித்து நகர்கிறது.மற்ற பாலூட்டி விலங்கினங்களின் குடலில் தாவர உணவு செரிக்க சில மணி நேரங்களே ஆகும் நிலையில், ஸ்லோத்துக்கு,ஆறு முதல் இருபத்தி ஒரு நாள் வரை ஆகிறது.


அதனால் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே மரத்தை விட்டு கீழே இறங்கி,ஆடுகளைப் போல புளுக்கைகளை இட்ட பிறகு, அதை மண்ணால் மறைத்து மூடியவுடன் மீண்டும் மரத்தில் எறிக் கொள்கிறது.

sloth on ground.jpg
sloth on ground.jpg
ஸ்லோத்துகளின் வாழ்க்கை மரத்தில் தலை கீழாகத் தொங்கிய படி இருக்கும் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அதன் எலும்பு இணைப்புகள் இருப்பதால் தரையில் இந்த விலங்கால் நிற்க இயலாது.


தரையோடு தரையாக படுத்த படி முன் கால்களை நீட்டி, கூரிய நகத்தால் தரையைப் பற்றியவாறு உடலை நுண்ணோக்கி இழுத்து, இழுத்து நகர்கிறது.அத்துடன் மற்ற பாலூட்டிகளைக் காட்டிலும் இந்த விலங்கினத்துக்கு கைகளில் குறைவான அளவு  தசைகளே இருக்கின்றன.


எனவே உலகிலேயே மிகவும் மெதுவாக நகரும் பாலூட்டி விலங்கினமாக ஸ்லோத் இருக்கிறது.


தரையில் இருக்கும் பொழுது இந்த விலங்கை மற்ற விலங்குகள் எளிதில் வேட்டையாடுகின்றன.ஜாகுவார் மற்றும் கழுகுகளும் இந்த விலங்கின் முக்கிய எதிரிகள். ஆனாலும் நீரில் இந்த விலங்கினங்கள் நன்றாக நீந்தும்.
sloth13.jpg
sloth13.jpg

மற்ற பாலூட்டிகளை விட இந்த விலங்கின் உடல் வெப்ப நிலையும் 32.7 சென்டி கிரேட் என மிகக் குறைவாகவே இருக்கிறது.எனவே மழைக் காலத்தில் இந்த விலங்கினங்கள் உணவை செரிக்க வெயிலை நாடுகிறது.மழைக் காலத்தில் குளிரைத் தாக்குப் பிடிக்க இயலாமல் இந்த விலங்கினங்கள் அதிக அளவில் இறப்பதும் தெரிய வந்துள்ளது.இறந்த பிறகும் இந்த விலங்கு மரக் கிளையில் தொங்கிய படியே இருப்பதும் காணப் பட்டிருக்கிறது.


ஸ்லோத் விலங்கினத்தில் இருநூறுக்கும் அதிக சிற்றினங்கள் இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இதன் எலும்புகள் வட அமெரிக்காவில் கடுங் குளிர் நிலவும் அலாஸ்கா பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.


ஸ்லோத்துகள், கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகளான க்யூபா ,ஹிஸ்பானோலியா,மற்றும் போர்ட்டோரிகோ ஆகிய தீவுகளில் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்து இருப்பது, அந்தத் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


அதே போன்று தெற்கில் அண்டார்க்டிக்காக் கண்டத்திற்கு அருகில் உள்ள செய்மூர் தீவிலும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸ்லோத்த்தின் பற்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.


எப்படி இந்த விலங்கினங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கியூபா,ஹைத்தி,மற்றும் போர்டோ ரிகோ போன்ற தீவுகளுக்கும், அண்டார்க்டிக் கண்டத்துக்கு அருகில் இருக்கும் செய்மூர் தீவுக்கும் சென்றன ? என்ற கேள்வி எழுகிறது.


கரீபியன் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட ஸ்லோத் புதை படிவங்கள்.


ஸ்லோத்துகளில் மூவிரல் ஸ்லோத்துகள் இருவிரல் ச்லோத்துகள் என இரண்டு இனம் உள்ளது.


இந்த இரண்டு ஸ்லோத்துகளுக்கும் பின் கால்களில் மூன்று விரல்கள் இருக்கும் நிலையில் சில ஸ்லோத்துகளுக்கு முன் கால்களில் மூன்று விரல்களும் சில ஸ்லோத்துகளுக்கு முன் கால்களில் இரண்டு விரல்களும் காணப் படுகின்றன.அதன் அடிப்படையிலேயே ஸ்லோத்துகள் இவ்வாறு இன வகைப் படுத்தப் பட்டுள்ளது.


மூவிரல் ஸ்லோத்துகள் தென் அமெரிக்காவிலும், மத்திய அமெரிக்காவிலும் காணப் படுகின்றன.இந்த ஸ்லோத்துகள் இரு விரல் ஸ்லோத்துகளை விட உருவத்தில் சற்று பெரியது.அத்துடன் மூவிரல் ஸ்லோத்துகள் இரு விரல் ஸ்லோத்துகளை விட மெதுவாக இயங்குபவை.


மூவிரல் ஸ்லோத்துகள் பிராடிபோடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.பிரடிபஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது. மூவிரல் ஸ்லோத்துகள் பகலிலும் இரவிலும் இயங்குபவை.


இரு விரல் ஸ்லோத்துகள் மூவிரல் ஸ்லோத்துகளை விட அளவில் சிறியது,சற்று வேகமாக இயங்குபவை. இரு விரல் ஸ்லோத்துகள் மெகாலோநைசிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது,கொலோபாஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது.கொலோபாஸ் என்ற சொல்லுக்குக் ஊனமுற்ற கால் என்று பொருள். இரு விரல் ஸ்லோத்துகள் இரவில் மட்டும் இயங்குபவை.


மேகலோ நைசிடே ஸ்லோத் இனம் மூன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கக் கண்டத்தில், அர்ஜென்டினாவின் தென் பகுதியில் படகோனியா பகுதியில் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மேகாலோநிக்ஸ் என்று அழைக்கப் படும் ஒரு ஸ்லோத் இனம், பத்து அடி உயரத்துடன்.ஆயிரம் கிலோ எடையுடன் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த மெகாலோநிக்ஸ் ஸ்லோத் தரையில் வாழ்ந்த ஸ்லோத் ஆகும்.


தென் அமெரிக்கக் கண்டமானது முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட அமெரிக்கக் கண்டத்துக்கு அருகில் வந்ததாகவும், அப்பொழுது பூமிக்கு அடியில் இருந்து பனாமா நிலப் பகுதியானது மேல் நோக்கி உயர்ந்ததால்,தென் அமெரிக்கக் கண்டதுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில், நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து அடுத்த கண்டத்துக்கு இடம் பெயர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.  


ஆனால் மெகாலோநிக்ஸ் ஸ்லோத் ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, வட அமெரிக்கக் கண்டத்துக்கு சென்று வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தில் ஒன்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான மெகாலோநிக்ஸ் ஸ்லோத்த்தின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, தென் அமெரிக்கக் கண்டதுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் வரிசையாகப் பல் தீவுகள் இருந்து, அதன் வழியாக  மேகாலோநிக்ஸ் ஸ்லோத்துகள் நீந்தி வந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.


ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பயங்கரப் பறவைகள், ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்கக் கண்டத்திற்கு வந்து வாழ்ந்து இருப்பதற்கு ஆதாரமாக, டெக்சாஸ் பகுதியில்,ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான பயங்கரப் பறவையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


எனவே வட அமெரிக்கக் கண்டதுக்கும், தென் அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்து இருப்பதையே, வட அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பயங்கரப் பறவை மற்றும் ராட்சத ஸ்லோத்தான மெகாலோநிக்ஸ் சஸ்லோத்துகளின் புதை படிவங்கள் மூலம் உறுதியாகிறது. 


இதே போன்று ஒன்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான மெகாலோநிக்ஸ் ஸ்லோத்தின் புதை படிவங்கள், வட அமெரிக்கக் கண்டத்தில் காணப் படுவதன் மூலம், தென் அமெரிக்கக் கண்டமானது தற்பொழுது இருக்கும் நிலையிலேயே எப்பொழுதும் இருந்திருப்பதும் உறுதியாகிறது. 


இந்த நிலையில் மெகாலோநிக்ஸ் ஸ்லோத்களின் புதை படிவங்கள் வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியில் கடுங் குளிர் நிலவும் அலாஸ்கா மற்றும் யுக்கான் பகுதியிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.


இவ்வாறு வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் ஸ்லோத் இனத்தைச் சேர்ந்த , மெகாலோநிக்ஸ் ஸ்லோத்களின் புதை படிவங்கள், அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட்டு இருப்பதன் மூலம், ஒன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்காப் பகுதிகளில், பூமத்திய ரேகைப் பகுதியில் நிலவுவதைப் போன்று அதிக வெப்ப நிலை நிலவி இருப்பதும் உறுதியாகிறது. 


அழிந்து போன ராட்சத ஸ்லோத்தான மெகாலோநிக்ஸ் ஸ்லோத், மற்றும் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரு விரல் ஸ்லோத்துகளும், மேகலோ நைசிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது.


இந்த நிலையில் இருவிரல் ஸ்லோத்துகளின் புதை படிவங்கள், கரீபியன் தீவுகளான கியூபா,போர்டோ ரிகோ மற்றும் ஹைத்தி நாடு அமைந்து இருக்கும் ஹிஸ்பானோலியா தீவுகளிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

 Megalocnus   Wikipedia.png
Megalocnus Wikipedia.png

குறிப்பாக கரீபியன் தீவுகளில் பெரிய தீவான கியூபாவில், அரக்டோனஸ் ஆண்டி லென்சிஸ் ( Acratocnus antillensis )காலிரோக்னஸ் ஜய்மெஜி ,( Galerocnus jaimezi),இமாகோக்னஸ் ஜாஜே, (Imagocnus zazae ),( நியோக்னஸ் கிளிரிபார்மிஸ், ( Neocnus gliriformis),  மேகலோக்னஸ் ரோடென்ஸ், (Megalocnus rodens), நியோக்னஸ் மேஜர், (Neocnus major),  பராமியோக்னஸ் ரிவெரோய் (Paramiocnus riveroi) பாராக்னஸ்ப்ரவ்னி ( Parocnus browni )என எட்டு வகையான ஸ்லோத்துகள் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


இதே போன்று ஹிஸ்பானோலியா தீவில் அரக்டோனஸ் சிமொரின்கஸ் (Acratocnus simorhynchus), அரக்டோனஸ் யே (Acratocnus ye),மேகலோக்னஸ் ஜிலெ (Megalocnus zile),நியோக்னஸ்  கொமெஸ் (Neocnus comes), நியோக்னஸ் டாஸ்மான் (Neocnus dousman), நியோக்னஸ்  டாபிட்டி(Neocnus toupiti),பாராக் னஸ் சிரஸ் (Parocnus serus),என ஏழு இன ஸ்லோத்துகள் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


இதே போன்று மற்ற கரீபியன் தீவுகளான போர்டோ ரிகோ,டிரினிடாட்,குவாரகா,தீவுகளிலும் அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படக் கூடிய ஸ்லோத்துகள் வாழ்ந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


இதன் மூலம் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டதுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருப்பதைப் போலவே, தென் அமெரிக்கக் கண்டதுக்கும், வட அமெரிக்கக் கண்டதுக்கும் இடையில், கரீபியன் தீவுகளானது தொடர்ச்சியாக இருந்து இருப்பதும் உறுதியாகிறது. 


குறிப்பாகக் கடந்த 2002 ஆம் ஆண்டு ,கியூபா தீவில், பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை, ,கியூபாவின் இயற்கை அருங் காட்சியகத்தைச் சேர்ந்த,மானுவல் இல்டுராட்லே வின்சென்ட் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் கண்டு பிடித்தார்.


எனவே பதினைந்து கோடி ஆண்டுகளாகவே வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்து இருப்பதுடன், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்து இருப்பதும், அதன் வழியாக டைனோசர்கள் உள்பட குரங்கினங்கள்,ஸ்லோத்துகளும்,சொலினோடோண் போன்ற விலங்கினங்களும் இடப் பெயர்ந்து இருப்பதும் நிரூபணமாகியுள்ளது.


கரீபியன் தீவுகள் எப்படி உருவாகின?


பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இருக்கும் பொழுது,அதிலிருந்து நீரும்,வாயுக்களும் பிரிந்த பிறகு பாறைத் தட்டாக உருவாகும் பொழுது அதன் பருமன் அதிகரிக்கிறது.


உதாரணமாக கடல் நீரில் உள்ள நீர் குளிர்ந்து இருக்கும் பொழுது உருவாகும் பனிக் கட்டிகளின் பருமன் அதிகரிப்பதால் அந்தப் பனிக் கட்டிகள் நீரின் மேல் உயர்வதைப் போன்று,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பி உருவாகும் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.


இவ்வாறு பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது பிரியும் நீர்,கடலில் கலப்பதால் கடல் மட்டமும் உயர்கிறது.வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.


இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப்படியாக மேலிருந்து கீழ் நோக்கி குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பாறைத் தட்டுகள் உருவாகுவதால்,கடல் மட்டமும் நில மட்டமும் உயர்கின்றன.


கடலுக்கு அடியில் இருந்து நிலம் உயரும் பொழுது ஏற்படும் நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்கள்,காலப் போக்கில் புதை படிவங்களாக உருவாகின்றன.அதே போன்று நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள்,கடலுக்குள் மூழ்கி விடுகின்றன.

நில மட்டமும் நீர் மட்டமும் மாறி மாறி உயரும் பொழுது சில சமயத்தில் நிலப் பகுதிகளுக்கும் தீவுகளுக்கு இடையிலும் நிலத் தொடர்பு ஏற்படுகின்றன.அதன் வழியாக விலங்கினங்கள் இடப் பெயர்கின்றன.பின்னர் நீர் மட்டம் உயரும் பொழுது மறுபடியும் தீவுகளாக உருவாகின்றன.

Hyrachyus   Wikipedia.png
Hyrachyus Wikipedia.png


 முக்கியமாக ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹைரகுஸ் என்று அழைக்கப் படும் ஒரு விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்த விலங்கானது காண்டா மிருகத்தின் இனத்தைச் சேர்ந்தது.

இந்த விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் வட அமெரிக்கா,ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களிலும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று ஜமைக்கா தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நடக்கும் கடல் பசுவின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

( நடக்கும் கடல் பசு )
jamaica walking seacow fossils.jpg
( நடக்கும் கடல் பசு ) jamaica walking seacow fossils.jpg
எனவே ஹைரகுஸ் மற்றும் நடக்கும் கடல் பசு போன்ற தரை வாழ் விலங்கினங்களின் புதை படிவங்கள் ஜமைக்கா தீவில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுகளுக்கும் வட அமெரிக்கக் கண்டதுக்கும் நிலத் தொடர்பு இருந்திருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.


இது போன்று இன்னும் பல விலங்கினங்களின் புதை படிவங்கள் கரீபியன் தீவுகளில் காணப் படுவதால் தற்பொழுது கரீபியன் தீவுகலும் அமெரிக்கக் கண்டங்களும் கார்லான்டியா என்று அழைக்கப் படும் ஒரு நிலத் தொடர்பால் இணைக்கப் பட்டு இருந்ததாகவும் தற்பொழுது ஒரு கருத்து முன்மொழியப் பட்டு இருக்கிறது.


ஆனால் உண்மையில் கரீபியன் தீவுகளில் அமெரிக்கக் கண்டங்களில் காணப் படும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு ,இரண்டு கோடி ஆணடுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம்.



gaarlandia1.png
gaarlandia1.png




caribbeanbathy1.jpg
caribbeanbathy1.jpg


Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.