பல்லிகள் எப்படி தீவுகளுக்கு சென்றன?

amp36.jpgamp36.jpg


amp35.pngamp35.png


ஐரோப்பா,ஆப்பிரிக்கா,மற்றும் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா என அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களில் ஆம்பிஸ்பேனியா என்று அழைக்கப் படும் மண்ணுக்கு அடியில் மண் புழுக்களைப் போன்று வாழும் பல்லிகளின் இனவகைகள் காணப்படுகின்றன.
amp30.jpgamp30.jpg

இந்தப்  பல்லிகள் மண் புழுக்களைப் போலவே தலையால் மண்ணைத் துளைத்து வளை பறித்து வாழ்கிறது.அதற்கு ஏற்ப இந்தப் பல்லிகளின் தலையானது துப்பாக்கித் தோட்டா மற்றும் மண் வெட்டும் கரண்டி  என பல வடிவங்களில் உள்ளது. அதே போன்று குருட்டுப் பல்லிகளின்  தாடை மற்றும் பற்களின் அமைப்புகளும் இனத்துக்கு இனம் வேறு பட்டு இருக்கிறது ..

அதன் அடிப்படையில் இந்தப் பல்லிகள் ஆறு குடும்பங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது.மண்ணைத் தலையால் துளைத்து வாழ்வதால் இதன் கண் மிகவும் சிறுத்துக் காணப் படுவதுடன்,ஒளி புகக் கூடிய செதிளாலும் மூடப் பட்டுள்ளது.

எனவே இந்தப் பல்லிகளுக்குப் பார்வைத் திறனும் குறைவு,எனவே இந்தப் பல்லிகள் குருட்டுப் பல்லிகள் என்றும் அழைக்கப் படுகின்றன.

அத்துடன் இந்தப் பல்லிகள் மண்ணைத் துளைத்து அதற்குள் வாழும் வாழ்கையை மேற்கொண்டு இருப்பதால் அதற்கு இடையூறாக இருக்கும் கால்கள் இன்றியும் காணப் படுகின்றன.

amp10.jpgamp10.jpg

எனவே இந்தப் பல்லிகள் கால்கள் இல்லாத பல்லிகள் என்றும் அழைக்கப் படுகின்றன.ஆனால் மெக்சிகோ நாட்டில் காணப் படும் பைபெடிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லிகளுக்கு உடலின் முன் பகுதியில் இரண்டு சிறிய கால்கள் உள்ளன.


மற்ற படி குருட்டுப் பல்லிகளுக்கு கால்கள் இல்லையென்றே கூறலாம்,ஆனாலும் ஆண் பல்லிகளுக்கு மட்டும் செதில் போன்ற அளவில் பின்னங்கால்கள் காணப் படுகின்றன.

ஆனால் அந்தச் செதில் கால்களும்  இனச் சேர்க்கையின் பொழுது பெண் பல்லிகளைப் பற்றிக் கொள்ளவே பயன் படுகிறது.


கால்கள் இல்லாத நிலையில் இந்தப் பல்லிகளின் தோலானது உடலில் தளர்வாகப் பொருந்தி இருப்பதுடன் அந்தத் தோல் தனியாக இயக்கப் படக் கூடியதாக இருக்கிறது.

எனவே தோலை விரித்து சுருக்கி தோல் மூலமாகவே இந்தப் பல்லிகள் நகர்கின்றன.


இந்த முறையால்  இந்தப் பல்லிகளால் இரு திசையிலும் நேர் கோட்டுப் பாதையில் நகர இயலும்.அத்துடன் இந்தப் பல்லிகளின் வால் பகுதியும் தலைப் பகுதியைப் போலவே தடித்து இருப்பதால் இருதலைப் பாம்புகளைப் போன்ற தோற்றத்தில் இருக்கிறது.


எனவே இந்தப் பல்லிகள் ‘’இரு திசையிலும் செல்லக் கூடிய’’ என்ற பொருளைத் தரும் கிரேக்க மொழிச் சொல்லான ஆம்பிஸ் பேணியா என்று அழைக்கப் படுகிறது.


இந்தப் பல்லிகளின் பிரதான உணவு பூச்சிகள்


குருட்டுப் பல்லி இனத்தில் ஆறு குடும்பங்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.இதில் மெக்சிகோ நாட்டில் காணப் படும் பைபிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த குருட்டுப் பல்லிகளுக்கு மட்டும் முன் பகுதியில் இரண்டு சிறிய கால்கள் உண்டு.அந்தக் கால்கள் மண்ணைத் தோண்டுவதற்கு பயன் படுகிறது.


இந்தப் பல்லிகள் எப்படி ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு சென்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன.

amp14.jpgamp14.jpg

பிளானிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லி இனங்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் காணப் படுகின்றன.


காடிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லி இனங்கள் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் காணப் படுகின்றன.
amp26.pngamp26.png


ட்ரோகொனோபிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லி இனங்கள் ஆப்பிரிக்காவிலும் அரேபியாப் பகுதியிலும் காணப் படுகின்றன.

ரைனுயூரிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லி இனங்கள் வட அமெரிக்கக் கண்டத்தில் புளோரிடா பகுதியில் காணப் படுகின்றன.


ஆம்பிஸ்பேனிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லி இனங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காஆகிய இரண்டு கண்டங்களிலும் காணப் படுகின்றன.


இந்த நிலையில் , பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் என்ற உயிரியல் வல்லுநர் குழுவினர் மேற்கொண்ட மரபணு ஒப்பாய்வில் குருட்டுப் பல்லிகள் ஒரு பொது மூததையில் இருந்து பல இன வகைகளாக பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.


இவ்வாறு குருட்டுப் பல்லியின் இன வகைகள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் நான்கு கண்டங்களிலும் காணப் படுவதற்கு, கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது.


அதாவது கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒற்றைப் பெருங் கண்டமாக இருந்த பொழுது அந்தக் கண்டம் முழுவதும் குருட்டுப் பல்லிகள் பரவி இருந்ததாக நம்பப் படுகிறது.


பின்னர் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாஞ்சியாக் கண்டம் இரண்டாகப் பிரிந்து, லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதற்குப் பிறகு மறுபடியும் லாரேசியாக் கண்டம் இரண்டாகப் பிரிந்து வட அமெரிக்கா மற்றும் யூரேசியாக் கண்டமாகப் பிரிந்ததாகவும், அப்பொழுது அந்தக் கண்டங்களுடன் பிரிந்த குருட்டுப் பல்லிகள், தற்பொழுது வட அமெரிக்கா,கியூபா, மற்றும் மத்திய தரைக் கடல் பகுதியில் காணப் படும் ரைனுயூரிடே,பை பெடிடே,காடிடா, ட்ரோகோனோபிடே ஆகிய குருட்டுப் பல்லி இனவகைகளாக பரிணாம மாற்றம் அடைந்ததாக நம்பப் படுகிறது.


இதே போன்று பொழுது பாஞ்சியாக் கண்டத்தில் இருந்து பிரிந்து தென் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டமானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததாக நம்பப் படுகிறது.


அந்தக் கருத்தின் அடிப்படையில்  கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் பிரிந்த பொழுது,தென் அமெரிக்கப் பகுதியில் வாழ்ந்த  ஆம்பிஸ்பேணியா குருட்டுப் பல்லிகலும்,ஆப்பிரிக்கக் கண்டப் பகுதியில் இருந்த  ஆம்பிஸ்பேணியா குருட்டுப் பல்லிகளும் தனித் தனி இனவகைகளாகப்  பரிணாம மாற்றம் அடைந்ததாக நம்பப் பட்டது.

இந்த நிலையில் பென்சில்வேனியா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டாக்டர் பிளேர் ஹெட் ஜெஸ் குழுவினர் குருட்டுப் பல்லிகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.

amp15.jpgamp15.jpg

அந்த ஆய்வில் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆம்பிஸ்பேணியா குருட்டுப் பல்லிகளின் இனவகைகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆம்பிஸ்பேணியா இனக் குருட்டுப் பல்லி இனத்தில் இருந்து தனித்து பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.


ஆனால் கண்டங்கள் நகர்வுக் கோட்பாட்டின் படி இந்த இரண்டு கண்டங்களும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்ததால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாக நம்பப் படுகிறது.

amp19.pngamp19.png


எனவே தற்பொழுது ஆம்பிஸ்பேணியா குருட்டுப் பல்லிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த நிலையில் படி கடலில் பல நாட்கள் தத்தளித்த படி, தென் அமெரிக்கக் கண்டத்தில் கரை ஒதுங்கிய பிறகு பரிணாம மாற்றம் பெற்று இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் புதிய விளக்கத்தைக் கூறுகிறார்.


இதே போன்று கியூபா தீவில் காணப் படும் காடிடே என்ற குருட்டுப் பல்லிகள் ,மத்திய தரை கடல் பகுதியில் காணப் படும் பிளானிடே என்ற குருட்டுப் பல்லி இனத்தில் இருந்து நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருப்பது தெரிய வந்தது.


எனவே மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து குருட்டுப் பல்லிகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டத்துக்குக் குருட்டுப் பல்லிகள் சென்றதைப் போலவே, கடலில் மிதக்கும் மிதவைத் தாவரங்கள் மூலமாக அட்லாண்டிக் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக கியூபா தீவை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் புதிய விளக்கத்தை கூறுகிறார்.


ஆனால் குருட்டுப் பல்லிகள், மண் புழுக்கள் போன்று தரைக்கு அடியில் வாழும் சிறிய பிராணிகள் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலம் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி அதிக தொலைவில் அமைந்து இறுகும் தீவுகளை அடைவதுற்கு ஏற்ற பிராணிகள் அல்ல என்று பல உயிரியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.


இந்த நிலையில் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் எக்டோ பியாஸ் என்ற கரப்பான் பூச்சியின் புதை படிவங்கள் ,வட அமெரிக்காக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.


அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படும் முந்திரித் தாவரத்தின் மூதாதைத் தாவரத்தின் புதை படிவங்கள் ஐரோப்பாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.


இதன் அடிப்படையில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடல் மட்டம் தாழ்வாக இருந்து, தரை வழித் தொடர்பு ஏற்பட்டு, அதன் வழியாக விலங்குகள் மற்றும் தாவரங்கள் வட அமெரிக்காக் கண்டத்தில் இருந்து ஐரோப்பாக் கண்டத்துக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று உயிரியல் வல்லுனர்கள் விளக்கமளித்து இருக்கின்றனர்.


அதே போன்று குருட்டுப் பல்லிகளும் இந்த இரண்டு கண்டங்களுக்கும் தரை வழித் தொடர்பு வழியாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் இன்னொரு விளக்கத்தையும் தெரிவித்து இருக்கிறார்.



டயபாமிடே

amp38.jpgamp38.jpg

ஆம்பிஸ்பேணியா போன்று டயபாமிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லிகள், ஆசியக் கண்டத்தில் காணப் படுவதுடன், இந்தோனேசியா,பிலிப் பைன்ஸ்,மற்றும் நியூ கினியா ஆகிய தீவுகளிலும் காணப் படுகிறது.


இந்த நிலையில் டயபாமிடே இனத்தைச் சேர்ந்த அனிலிட்ராப்சிஸ் பாப்பிலோசாஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பல்லிகளின் இனவகைகள் ,வட அமெரிக்கக் கண்டத்தில் மெக்சிகோ பகுதியிலும் காணப் படுகிறது.

amp27.pngamp27.png

இதன் அடிப்படையில் டயபாமிடே இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பல்லிகளும், கடலில் மிதந்து செல்லும் தாவரங்கள் மூலமாக மாதக் கணக்கில் பசிபிக் கடலில் தத்தளித்தபடி ஆசியக் கண்டத்தில் இருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு பரவி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.


அல்லது முன் ஒரு காலத்தில் கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது ஆசியக் கண்டத்தின் சைபீரியா மற்றும் வட அமெரிக்கக் கண்டத்தின் அலாஸ்கா பகுதிகளுக்கு இடையில் இருந்த தரைவழித் தொடர்பு வழியாக, டயபாமிடே குருட்டுப் பல்லிகள் இடம் பெயர்ந்து ஆசியக் கண்டத்தில் இருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு வந்து இருக்கலாம் என்றும்  நம்பப் படுகிறது.


குருட்டுப் பல்லிகள் தரைவழித் தொடர்பு வழியாகவே ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்பதே சாத்தியமான விளக்கம்.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.