இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது? பகுதி 2

crabs.jpgcrabs.jpg
நன்னீர் நண்டுகள்

நண்டுகள் பத்துக் காலிகள் என்று அழைக்கப் படும் ஓட்டுடலி இனத்தைத் சேர்ந்தது.இந்த இனத்தில் இறால்,லாப்ஸ்டர்,ஸ்க்ரிம்ப்ஸ் மற்றும் கிரே பிஷ் என்று அழைக்கப் படும் முதுகு எலும்பற்ற உயிரினங்கள் உள்ளன.

நண்டினங்கள் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் தோன்றின.அதன் பிறகு கடலுடன் ஆறுகள் சங்கமிக்கும் முகத் துவாரப் பகுதிகளில் வசிக்க ஆரம்பித்த நம்ண்டுகள், பின்னர் படிப் படியாக ஆறுகள் மற்றும் குளத்திலும் வசிக்க ஆரம்பித்த பிறகு, நிலத்திலும் வசிக்க ஆரம்பித்தது.

நன்னீர் நண்டுகள் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நண்டினத்தில் இருந்து பிரிந்து தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற தகவமைப்புகளைப் பெற்றன.
fwc14.pngfwc14.png

கடல் நண்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதற்கு காரணம் பெண் நண்டுகள் கருத்தரித்த பிறகு அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் முட்டைகளை கடல் அலையில் கரைத்து விடும்.அதன் பின்னர் பல மாதங்கள் மிதவை உயிரியாக வாழும் இளம் நண்டுகள் பின்னர் கரைக்கு வந்து வாழத் தொடங்கும்,

நண்டுகளின் இளரிகள்,கடலில் மிதவை உயிரியாக வாழும் பொழுது கடல் நீரோட்டத்தால் மற்ற தீவுகளுக்கும் கண்டங்களுக்கும் அடித்துச் செல்வதால் கடல் நண்டுகள் உலகெங்கும் பரவி வாழ்கின்றன.
fwc8.pngfwc8.png
ஆனால் நன்னீர் நண்டுகளின் வாழ்க்கை முழுவதும் நன்னீர் நிலைகளிலேயே கழிவதால், நன்னீர் நண்டுகளின் பரவல் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே வரையறைப் படுத்தப் படுகிறது.இருந்தாலும் நன்னீர் நண்டினங்களும் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

அத்துடன் நன்னீரில் வாழும் நண்டு தவளை போன்ற பிராணிகள் அதிக உப்புள்ள கடல் நீரில் இருந்தால் நண்டு மற்றும் தவளையின் உடலில் இருந்து நீர் வெளியேறி நண்டும் தவளையும் இறந்து விடும்.

எனவே நன்னீர் நண்டு மற்றும் தவளைகளால் அதிக உப்புள்ள கடல் நீரில் வாழ இயலாது.
fwc9.png(நன்னீர் நண்டுகள் எப்படி தீவுக்குச் சென்றது?)fwc9.png(நன்னீர் நண்டுகள் எப்படி தீவுக்குச் சென்றது?)
இந்த நிலையில் இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர்,செஷல்ஸ் போன்ற தீவுகளில் நன்னீர் நண்டுகள் மற்றும் தவளைகள் காணப் படுகின்றன.

எப்படி இந்த நன்னீர் நண்டுகள் கடல் நடுவே இருக்கும் தீவுகளுக்குச் சென்றன என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடை பெற்று வருகிறது.


பொட்டாமானாட்டிடே என்று அழைக்கப் படும் நன்னீர் நண்டினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலும்,மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகிறது.

நன்னீர் நண்டுகளால் கடல் பகுதியைக் கடக்க இயலாது என்பதால் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளில் நன்னீர் நண்டுகள் காணப் படுவதற்கு, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதிகள் ஒன்றாக இணைந்து கோண்டுவானா என்ற பெருங் கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்ததே காரணம் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நீல் கும்பர்லிட்ஜ், ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் மற்றும் செஷல்ஸ் தீவுகளிலும் காணப் படும் நன்னீர் நண்டுகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டார்.

அந்த மரபணு ஒப்பாய்வில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே என்ற நன்னீர் நண்டினத்தில் இருந்து ஏழரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவில் காணப் படும் செஷல்ஸ் அல்லுராடி என்ற நன்னீர் நண்டினம் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
mtr7.jpg(செஷல்ஸ் அல்லுராடி  )mtr7.jpg(செஷல்ஸ் அல்லுராடி )


எனவே நன்னீர் நண்டுகள் எப்படி கடல் பகுதியைக் கடந்து தீவுகளுக்குச் சென்றன? என்று ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டது.
நன்னீர் நண்டுகள் கடல் நீரில் வைத்து சோதனை செய்யப் பட்டது.அப்பொழுது நன்னீர் நண்டுகள் இரண்டு வார காலம் கடல் நீரில் தாக்குப் பிடிப்பது தெரிய வந்தது.

எனவே நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரத் தண்டில் உள்ள பொந்துகளில் இருந்த படி இரண்டு வார காலம் மிதந்த படி ஐநூறு கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
fwc5.pngfwc5.png




அத்துடன் சூறாவளி மற்றும் புயல் மழையால் காற்றில் ஈரப் பதமான சூழலில் உடலின் ஈரம் காயாமல், காற்றையும் சுவாசித்த படி தீவுகளை அடைந்து பிறகு நன்னீர் நண்டுகள் குளம் குட்டை போன்ற நன்னெற நிலைகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் செஷல்ஸ் தீவு நன்னீர் நன்னீர் நண்டினமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் டெக்கானினே நண்டினத்தில் இருந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாக மரபணு சோதனையில் தெரிய வந்துள்ளது.

ஆனால் மடகாஸ்கர் தீவானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டாதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
mtr8.gifmtr8.gif

எனவே செஷல்ஸ் தீவுக்கு நன்னீர் நண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது.

ஆனால் செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து இருக்கிறது.

அதே போன்று செஷல்ஸ் தீவானது மடகாஸ்கர் தீவில் இருந்தும் வட மேற்கு திசையில் ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
mtr10.pngmtr10.png
ஆனால் அதிக பட்சம் நன்னீர் நண்டுகள் கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலம் ஐநூறு கிலோ மீட்டர் தொலைவு வரை கடக்க இயலும் என்று உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

எனவே செஷல்ஸ் தீவில் காணப் படும் நன்னீர் நண்டினம் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து செஷல்ஸ் தீவுக்கு வந்து சேர்ந்தது என்பது குறித்து தற்பொழுது உறுதியான விளக்கங்கள் இல்லை.
mtr9mtr9
குருட்டுப் பாம்புகள்
mtr11.gifmtr11.gif

பல தீவுகளுக்குப் பாம்பினங்கள் எப்படிச் சென்றன என்பதும் இன்று வரை புரியாத புதிராக இருக்கின்றன.

மிகவும் தொன்மையான பாம்பின் புதை படிவம் மத்தியக் கிழக்கு நாடான ஜெருசலேம் நாட்டில் யூதேயா மலைப் பகுதியில், பதின் மூன்று கோடி ஆண்டுகள் தொன்மையான சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.

பாகிராகிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்பிற்கு சிறிய அளவிலான இரண்டு பின்னங் கால்களும் இடுப்பு மற்றும் கணுக் கால் எலும்புகளும் இருந்தன.
mtr12.pngmtr12.png

அந்தப் புதை படிவம் பல்லி போலவும் பாம்பு போலவும் இருந்தது.

ஆனால் அந்தப் புதை படிவமானது சுண்ணாம்புப் பாறைப் படிவத்தில் இருந்ததால், பாம்பினங்கள் மொசாராஸ் என்று அழைக்கப் படும் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருக்கலாம் என்று கருதப் பட்டது.

அதன் பிறகு அதே மலைப் பகுதியில் பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான பாம்பின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டது.ஹாசி ஒப்பிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்தப் பாம்புக்கும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்தன.
பின்னர் மத்தியக் கிழக்கு நாடான லெபனான் தேசத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பத்து கோடி ஆண்டுகள் தொன்மையான யூபோடாபிஸ் என்ற பாம்பின் புதை படிவத்திலும் இரண்டு சிறிய பின்னங் கால்கள் இருந்ததால் பாம்புகள் கடல் வாழ் பல்லி இனத்தில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
(  A legged snake fossil found in 2003 in Patagonia, Argentina, may be the most primitive snake ever found - the sacral region is shown here (Image: H Zaher)

 )  mtr14( A legged snake fossil found in 2003 in Patagonia, Argentina, may be the most primitive snake ever found - the sacral region is shown here (Image: H Zaher) ) mtr14

இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் படகோனியா நாட்டில் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான நாஜெஸ் என்று பெயர் சூட்டப் பட்ட பாம்பின் புதை படிவத்தில் சிறிய கால்கள் இருந்ததுடன் அந்தப் பாம்பானது தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்ற எலும்பு அமைப்புடன் இருந்தது.
mtr13.jpgmtr13.jpg


இதன் அடிப்படையில் பாம்பினங்கள் தரை வாழ் பல்லி இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் அடைந்து இருக்கலாம் என்ற கருத்து வலுப் பெற்றுள்ளது.

பாம்பினங்களில் மூவாயிரத்தி நானூறுக்கும் அதிக இனவகைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் மானையே விழுங்கக் கூடிய மலைப் பாம்புகளுக்கும், மண் புழு போன்று பூந்தொட்டிகளில் காணப் படும் குருட்டுப் பாம்புகளுக்கும், சிறிய அளவிலான பின்னங்கால் எலும்புகள் இருப்பதன் அடிப்படையில், இந்தப் பாம்பினங்கள் மிகவும் தொன்மையான பாம்பினம் என்பது தெரிய வந்துள்ளது.

மலைப் பாம்புகளில் பைத்தானிடே என்று அழைக்கப் படும் முட்டையிடும் மலைப் பாம்புகள் தொன்மையன இனமாகக் கருதப் படுகிறது.
pythonidae.jpgpythonidae.jpg

இதில் இருபத்தி ஆறு இனங்கள் உள்ளன. இவ்வகைப் பாம்புகள் பழைய உலகம் என்று அழைக்கப் படும் ஆப்பிரிக்கா ,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களிலும்,இந்தோனேசியா ,பிலிப் பைன்ஸ் மற்றும் பாப்புவா நியூ கினியா தீவுகலிலும் காணப் படுகின்றன.

இதே போன்று போய்டே என்று அழைக்கப் படும் குட்டிகளை ஈனும் மலைப் பாம்புகள் சற்று பரிணாமத்தில் மேம்பட்ட இனமாகக் கருதப் படுகிறது.
boidaemapboidaemap

இவ்வாகைப் பாம்புகள் புதிய உலகம் என்று அழைக்கப் படும் அமெரிக்கக் கண்டங்களிலும் ,ஆப்பிரிக்கா,இந்தியா, ஆகிய கண்டங்களிலும்  மடகாஸ்கர் தீவு,சலமன் தீவு, பிஜி போன்ற தீவுகளிலும் காணப் படுகிறது.

இதே போன்று ஸ்கோலிக்கோ பிடியா என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்புகளும் சிறிய அளவிலான கால் எலும்புகளைக் கொண்டிருக்கும் தொன்மையான பாம்பினம் ஆகும்.
இந்தப் பாம்புகள் மண் புழுக்களைப் போன்று தோற்றமளிப்பதால் புழுப் பாம்புகள் என்றும் பூந்தொட்டிகளில் காணப் படுவதால் பூந்தொட்டிப் பாம்புகள் என்றும் அழைக்கப் படுகின்றன.

குருட்டுப் பாம்புகள் ஸ்கோலெக்கோ பிடியன்ஸ் என்று அழைக்கப் படுகின்றன.இதில் மூன்று இனவகைகள் இருக்கின்றன.டைப்லோபிட்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுகின்றன. இதில் இருநூற்றி ஐம்பது இன வகைகள் உள்ளன.

லெப்ட்டோடைப்லோப்ஸ் என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவிலும் காணப் படுகின்றன.

அனாமாலெபிட்ஸ் என்று  அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் அமெரிக்காவில் மட்டும் காணப் படுகின்றன. 
இந்தப் பாம்புகள் வாழ்வின் பெரும் பகுதியை தரைக்கு அடியிலேயே கழிப்பதால் காலப் போக்கில் பார்வைத் திறனை இழந்து விட்டது.

ஆனாலும் ஒளியை உணரக் கூடிய அளவுக்கு பார்வைத் திறன் உண்டு,
bls26.pngbls26.png

எனவே இந்தப் பாம்புகள் குருட்டுப் பாம்புகள் என்று அழைக்கப் படுகின்றன.இதன் பிராதான உணவு எறும்பும் கறையானும் அதன் முட்டைகளுமே.
bls27bls27



குருட்டுப் பாம்புகளில் அறுநூற்றி நாற்பது இன வகைகள் கண்டறியப் பட்டுள்ளது.இந்தப் பாம்புகள் மண் புழுவைப் போன்று இருந்தாலும் இதற்கு முதுகெலும்பும், கபாலமும், தாடையும் அதில் கூரிய பற்களும் உண்டு.

குருட்டுப் பாம்புகள் மெலிதான எலும்புகளைக் கொண்டு இருப்பதால் இதன் புதை படிவங்கள் இல்லையென்றே கூறலாம்.எனவே இந்தப் பாம்புகள் எப்பொழுது தோன்றியது என்று அறிவதற்காக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் மற்றும் நிகோல் விடல் ஆகியோர் ,உலகெங்கும் உள்ள தொண்ணூற்றி ஆறு இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், குருட்டுப் பாம்புகள் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் மடகாஸ்கர் தீவும் ஒரே நிலப் பகுதியாக இணைந்து இண்டிகாஸ்கர் என்ற நிலப் பகுதியாக இருந்ததாகவும், அப்பொழுது அதில் குருட்டுப் பாம்புகள் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.

பின்னர் மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியா பிரிந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக்  கண்டத்துடன் மோதிய பொழுது, இந்தியாவில் இருந்த குருட்டுப் பாம்புகள் ஆசியா மற்றும் ஐரோப்பாக் கண்டங்களுக்குப் பரவியதாகவும் நம்பப் படுகிறது.

அல்லது, குருட்டுப் பாம்புகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்திற்கு பரவி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.
mtr15.jpgmtr15.jpg
ஆனால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் குருட்டுப் பாம்புகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
bls2.pngbls2.png


bls3.pngbls3.png
முக்கியமாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்ததாகவும் நம்பப் படும் நிலையில்,இந்த இரண்டு கண்டங்களிலும் காணப் படும் குருட்டுப் பாம்புகள், அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து இருப்பது மரபணு ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார்.
bls22.jpgbls22.jpg

அதாவது இந்த இரண்டு கண்டங்களும் பிரிந்த பிறகு நான்கு கோடி ஆண்டுகள் கழித்தே இந்த இரண்டு கண்டங்களில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் தோன்றி இருப்பதாகவும், எனவே தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் குருட்டுப் பாம்புகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாக அட்லாண்டிக் பெருங் கடலில் ஆறு மாத காலம் கடலில் மிதந்த படி தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் தரைக்கு அடியில் வாழும் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலமாகக் கடல் வழியாக பரவ இயலாது என்று மற்ற அறிவியலாளர்கள் கூறினாலும் கூட மரபணு ஆய்வு முடிவுகள் கடல் வழிப் பயணம் நடை பெற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுவதாக டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் ஆறு மாத காலம் குருட்டுப் பாம்புகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் இருந்த பொழுது, அவைகள் உண்பதற்கு அந்த மிதவைத் தாவரங்களில் பூச்சிகளும் இருந்திருக்கும், என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று கரீபியன் தீவுகளில் காணப் படும் குருட்டுப் பாம்பினங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக அந்தத் தீவுகளை அடைந்து இருக்கும் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் எதிர் பாராத வண்ணம் பல தொலை தூரத் தனிமைத் தீவுகளுக்கும் குருட்டுப் பாம்புகள் சென்று புதிய இனவகைகளாகப் பரிணாம மாற்றம் பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக டைப்ளோலெபிடே என்று அழைக்கப் படும் குருட்டுப் பாம்பினம் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆசியா,ஆஸ்திரேலியா,ஆகிய கண்டங்களிலும் கரீபியன் ,பிலிப்பைன்ஸ் சாலமன் மற்றும் பிஜி குவாம்,மற்றும் பாலவ் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு வாசிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடிசன் வைன் என்ற உயிரியல் வல்லுநர் குவாம் மற்றும் பாலவ் தீவுக்கு கிழக்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பாசா என்ற தீவிலும் ஏன்ட் தீவிலும் இரண்டு புதிய இனத்தைச் சேர்ந்த குருட்டுப் பாம்புகளைத் தற்செயலாகக் கண்டு பிடித்தனர்.

blss3.jpgblss3.jpg
blss6.pngblss6.png



இவ்வளவு தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவுக்கு குருட்டுப் பாம்புகள் பரவி இருக்கும் என்பதை அவர்கள் முதலில் நம்பவே இல்லை.

ஒரு மரத்தின் உட்பகுதியில் இருந்த அந்தக் குருட்டுப் பாம்பு ,ஏற்கனவே கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்பு இனமாக இருக்கும் என்றும் தற்செயலாக மனிதர்கள் மூலமாக அந்தத் தீவுகளுக்கு வந்திருகக் கூடும் என்றும் முதலில் நம்பினார்கள்.

அதன் பிறகு அந்தப் பாம்பின் செதில் அமைப்புகளை ஆய்வு செய்ததில் அந்தக் குருட்டுப் பாம்புகள் இது வரை கண்டு பிடிக்கப் படாத புதிய இன வகை என்பது தெரிய வந்தது.
bls6.pngbls6.png
bls7.pngbls7.png
bls8.pngbls8.png

தற்பொழுது கரோலின் தீவுக் கூட்டத்தில் உள்ள பாசா தீவிலும் ஏன்ட் தீவிலும் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் அடோ சீட்டஸ் என்றும், அதே போன்று ஜிலாப்,உழுதி ஆகிய தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குருட்டுப் பாம்புகள் ராம்போடைப்லோப்ஸ் ஹாட்மாலியெப் என்றும் புதிதாகப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

இதே தீவுகளில் அந்தத் தீவுகளில் மட்டுமே காணப் படும் புதிய இனத்தைச் சேர்ந்த ஜிக்கோ என்று அழைக்கப் படும் பல்லி இனங்களும் காணப் படுகின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது.

2007 ஆம் ஆண்டு வரையில் குருட்டுப் பாம்பினத்தில் ஆக்டோ டைப்லோப்ஸ் என்ற குடும்பத்தில் நான்கு இனவகைகள் ,நியூ கினியாத் தீவு,பிஸ்மார்க் தீவுகள்,போகைன் வில்லா மற்றும் சாலமன் தீவுகளில் இருப்பது அறியப் பட்டது.

இந்த நிலையில் அதே ஆக்டோ டைப் லோப்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆக்டோ டைப் லோப்ஸ் பானோரம் என்ற ஐந்தாவது இனம் எதிர்பாராத வண்ணம் நாலாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் பிலிப்பைன்ஸ் தீவுக் கூட்டத்தில்  உள்ள லுசான் தீவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
bls28.pngbls28.png

இதே தீவுகளில் பிளாட்டி மாண்டிஸ் என்று அழைக்கப் படும் தவளைகளும் காணப் படுவதும் குறிப்பிடத் தக்கது.
ஒரு தவளை கூட்டிய பஞ்சாயத்து.

இதே போன்று குருட்டுப் பாம்பின் இனவகைகள் இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும் கிறிஸ்து மஸ் தீவில் கண்டு கண்டு பிடிக்கப் பட்டதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
bls4.pngbls4.png

புவியியல் வல்லுனர்கள் தற்பொழுது நம்பிக் கொண்டு இருக்கும் புவியியல் கருத்துக்களைப் புரட்டிப் போட்டு விட்டது மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு தவளையின் புதை படிவம்.
4c.jpg4c.jpg

1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் ,ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராவுஸ் என்ற தொல் விலங்கியல் வல்லுநர் தலைமயிலான குழுவினர் மேற்கொண்ட அகழ்வாய்வில்,ஆறரைக் கோடி முதல் ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் தவளையின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

ஆனாலும் சில எலும்புகளே கிடைத்ததால் அந்த எலும்புகளைக் கொண்டு முழுதாக ஒரு தவளையை உருவாக்க இயலவில்லை.
அதன் பிறகு தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வில் அறுபதுக்கும் அதிகமான எலும்புகள் கிடைத்தது.

ஆனாலும் 2008 ஆண்டுதான் ஓரளவு ஒரு முழுத் தவளையைக் உருவாக்கும் அளவுக்கு எலும்புகள் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனாலும் தலைப் பகுதி முழுதாக இருந்தது.

அந்த எலும்புகளைப் பொருத்திப் பார்த்ததில் அந்தத் தவளையானது பத்து அங்குலம் நீளத்துடன் நாலு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்தது.

குறிப்பாக அதன் தலையில் கண்களுக்கு அருகில் எலும்புகள் புடைத்துக் கொண்டு கொம்பு போன்று நீண்டு இருந்தது.அதன் வாய்ப் பகுதி அளவுக்கு அதிகமாக அகன்று இருந்ததுடன் அதன் தாடையில் கூரிய பற்களும் இருந்தது.

அதன் அடிவயிற்றுப் பகுதியில் ஆமைக்கு இருப்பதைப் போன்று கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.முதுகுப் பகுதியில் முள் போன்ற நீட்ச்சிகளுடன் பார்க்கப் பயங்கராமாக இருந்ததால் அந்தத் தவளை சாத்தான் தவளை என்ற பொருளைத் தரும் பிளிசிபூபோ அபிங்ணா என்று  பெயர் சூட்டப் பட்டது.

இது போன்ற கொம்பு உடைய தவளைகள் தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் மட்டுமே காணப் படுகிறது.

மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளையின் எலும்புகளை சி டி ஸ்கேன் மூலம் ஆய்வு செய்த லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல் விலங்கியல் வல்லுநர் டாக்டர் சூசன் இவான் மற்றும் மார்க் ஜோன்ஸ் ஆகியோர்,மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட தவளை தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் கொம்புகளுடன் காணப் படும் செரட்டோபைரிடே என்று அழைக்கப் படும் தவளைக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று அறிவித்தனர்.

தவளையினம் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் தோன்றி விட்டது.

தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் ,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் துருவப் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் நம்பப் படுகிறது.
gif.jpggif.jpg

பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்பப் படுகிறது.

ஆனாலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அண்டார்க்டிக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் ஆனால் பதினோரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது.
gif2.pnggif2.png


இதே போன்று மடகாஸ்கர் தீவும் இந்தியாவும் இணைந்த நிலையில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து இந்தியாவும் பிரிந்து விட்டதாகவும் நம்பப் படுகிறது.



ஆனால் டாக்டர் சூசன் இவான் மேற்கொண்ட மரபணு ஆய்வில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளையானது தென் அமெரிக்கக் கண்டத்தின் கொம்புத் தவளைக் குடும்பத்தில் இருந்து ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே தீவாக இருந்த தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு எப்படி சாத்தான் தவளைகள் வந்திருக்க முடியும்? என்று வல்லுனர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.
l
gif7.pnggif7.png

பொதுவாகக் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் ஒரே வகையான விலங்கினங்கள் காணப் படுவதற்கு காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேலிருந்த படி விலங்கினங்கள் கடலில் பல நாட்கள் தத்தளித்த படி தற்செயலாக மற்ற கண்டங்களையும் தீவுகளையும் அடைந்திருக்கலாம் என்று நமபப் படுகிறது.

ஆனால் தென் அமெரிக்காவும் மடகாஸ்கர் தீவும் அதிகத் தொலைவில் உலகின் எதிரெதிர் பகுதியில் அமைந்து இருப்பதாலும், தவளைகளின் தோல் நீர் புகக் கூடியதாக இருப்பதாலும், கடல் வழியாக சாத்தான் தவளைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்கும் என்ற விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் எழுதிரோ டாக்டைல்ஸ் என்று அழைக்கப் படும் தவளையின் இன வகைகள் ,தென் அமெரிக்கக் கண்டத்தை ஒட்டி அமைந்து இருக்கும் கரீபியன் தீவுகள் காணப் படுவதற்கு,அந்தத் தவளையின் மூதாதைகள் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதந்து சென்ற தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் தவளைகள் கடலில் தத்தளித்த படி கரீபியன் தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று,அந்தத் தவளைகளின் மரபணுவை ஆய்வு செய்த பென்சில் வேனியாப் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருந்தார்.

அத்துடன் கரீபியன் தீவுக்கு தவளைகள் கடலில் மிதக்கும் தாவரங்களில் கடல் பயணம் செய்த பொழுது அந்த மிதவைத் தாவரங்களில் தவளைகள் உண்பதற்கு பூச்சிகளும் குடிப்பதற்கு தூய குடி நீரும் இருந்திருக்கலாம் என்றும் டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மடகாஸ்கர் தீவின் சாத்தான் தவளைகள் குறித்து டாக்டர் பிளேர் ஹெட்ஜெஸ் ,தோற்றத்தில் மடகாஸ்கர் தீவுத் தவளைகள் தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகளைப் போன்று இருந்தாலும் அவைகள் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சில சமயங்களின் வெவ்வேறு பகுதிகளில் விலங்கினங்கள் ஒரே உருவ அமைப்பில் பரிணாம வளர்ச்சி அடையும் என்று தெரிவித்து இருக்கிறார்.

அப்படியே அந்தத் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவகையாக இருந்தாலும் கடலில் மிதக்கும் தாவரங்கள் மூலமாக தவளைகள் தென் அமெரிக்காவில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்றும் பிளேர் ஹெட்ஜெஸ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் டாக்டர் சூசன் இவான் சாத்தான் தவளைகள் தென் அமெரிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த தவளைகள் என்பதில் சந்தேகம் இல்லை.என்றும் தென் அமெரிக்க் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் அண்டார்க்டிக் கண்டம் வழியாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் சூசன் இவான் நம்புகிறார். 

ஆனால் அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனர் ரிச்சர்ட் லேன் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் தவளைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுவதானது கோண்டுவானாக் கண்டமானது லேட் கிரேட்டேசியஸ் காலத்தில் பிரிந்திருப்பதையே ஆதரிக்கிறது என்றும்  கருத்து தெரிவித்து இருக்கிறார்.




gfr.pnggfr.png
gfr3.pnggfr3.png


gfr9.pnggfr9.png
gfr10.pnggfr10.png

gif8.pnggif8.png

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.