கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதற்கு ஆதாரம்

evid.jpg
evid.jpg
வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி காஸ்காடியா என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.
ptmap.jpg
ptmap.jpg
இந்த எரிமலைத் தொடரானது வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் உள்ள பசிபிக் கடல் தளமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்ற பிறகு வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக மாறி மேல் நோக்கி உயர்ந்து வட அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு தரைக்கு மேலே எரிமலைத் தொடராக உருவாகி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
hotspotvolcanoformation.jpg
hotspotvolcanoformation.jpg
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் சென்று  கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல்தரைப் பகுதிக்கு மேலே பசிபிக் கடல் தரைப் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து அலாஸ்கா வளை குடாப் பகுதிக்கு அடியில் சென்று வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உருவாகுவதைப் போன்றே எரிமலைகளாக உருவானதால் அலூசியன் எரிமலைத் தீவுகள் உருவானதாகப்  புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.navc.gif
navc.gif
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்திற்கு வட மேற்குப் பகுதியில் இவ்வாறு கடல் தரை எதுவும் சென்று கொண்டு இருப்பதாகக் கருதப் பட வில்லை.explo9.jpg
explo9.jpg
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அனாகிம் எரிமலைத் தொடர்  உருவாகி இருக்கும்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் ச்டிகைன் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் உருவாகி இருப்பதுடன் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருகின்றன.
எனவே எப்படி இந்த எரிமலைத் தொடர்கள் உருவாகியது என்று தற்பொழுது புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை.

இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் அட்லாண்டிக் கடல் தளமும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது  ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.

explo17.png

explo17.png

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.