மெக்சிகோ நில அதிர்ச்சிகளுக்குக் காரணம் என்ன?

cocos9.png
cocos9.png


பூமியின் மேலோடானது பல பகுதிகளாக உடைந்து இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

இந்த நிலையில் பூமியின் அடிப்பகுதியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு உயர்ந்து வருவதாகவும்,அவ்வாறு வந்த பிறகு குளிர்ந்து கணம் அதிகரித்து மறுபடியும் அடிப்பகுதிக்கே சென்று கொண்டு இருப்பதாகவும்,இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது சுழல்வதால் மேற்பகுதியில் உடைந்த பாறைத் தட்டுகளாக இருக்கும் கடல்தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
cocos10.gif
cocos10.gif

குறிப்பாக கண்டங்களுக்கு அருகில் உள்ள கடல் தரையின் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதற்கும்,அந்தப் பகுதிகளில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதற்கும்,அதே பகுதியில் எரிமலைகள் வரிசையாக உருவாகி இருப்பதற்கும் இதே கருத்தின் அடிப்படையிலேயே புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


உதாரணமாக சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளின் மேல் வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.அத்துடன் சுமத்த்ரா ,ஜாவா தீவுகளுக்கு அருகில் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதுடன் அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.


இவ்வாறு சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு அருகில் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதற்கு,அந்தப் பகுதியில் பத்து கிலோ மீட்டர் தடிமனுடன் கடல் தளமானது கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று விளக்கம் கூறுகின்றனர்.


அத்துடன் பூமிக்குள் சென்ற கடல் தளமானது வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளை துளைத்துக் கொண்டு தீவுகளுக்கு மேலே எரிமலைகளாக வரிசையாக உருவாகி இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


குறிப்பாக சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு அருகில் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதால்தான் அந்தப் பகுதியில் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.



mekvb.jpg
mekvb.jpg
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் தென்பகுதியயான மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி எரிமலைகள் வரிசையாக உருவாகி இருக்கின்றன.


குறிப்பாக மெக்சிகோ பகுதியானது வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி நீண்டு இருக்கிறது.
tmvb5.jpg
tmvb5.jpg

இந்த நிலையில்  மெக்சிகோவிற்கு தென் மேற்குப் பகுதியில் பசிபிக் கடல் தரையில், மெக்சிகோவுக்கு இணையான திசையிலேயே அதாவது வடமேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி நீண்டு குறுகிய கடல் தரைப் பள்ளம் உருவாகி இருப்பதுடன் அந்தப் பகுதியில் அடிக்கடி சுனாமிகளை உருவாக்கும் அளவுக்கு பெரிய அளவிலான நில அதிர்ச்சிகளும் ஏற்படுகின்றன.

cocos11.jpg
cocos11.jpg
இவ்வாறு மெக்சிகோ நிலப் பகுதிக்கு இணையாக கடல் தரையில் பள்ளம் உருவாகி இருப்பதற்கும் அந்தப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதற்கு ,அந்தப் பகுதியில் கடல் தளமானது கீழ் நோக்கி வளைந்து உரசியபடி மெக்சிகோவுக்கு அடியில் சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் இந்தக் கருத்தின் அடிப்படையில் மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலை வரிசைக்கு புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.
ஏனென்றால் வடமேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் மெக்சிகோவிற்கு தென் மேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் கடல் தரைப் பள்ளமானது மெக்சிகோவைப் போலவே வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி நீண்டு இருக்கிறது.


ஆனால் மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது மெக்சிகோ பகுதியில் உள்ள கடல் தரைப் பள்ளத்திற்கு இணையாக, வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி உருவாகாமல் ,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.


இவ்வாறு மெக்சிகோ கடல் தரைப் பள்ளத்திற்கு இணையாக வடமேற்கு –தென் கிழக்கு திசையில் உருவாகாமல் கிழக்கு –மேற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதால், பூமிக்கு அடியில் செல்லும் கடல் தளமே உருகிப் பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து நிலத்தைப் பொத்துக் கொண்டு தரைக்கு மேலே எரிமலைகளாக உருவாகின்றன என்ற விளக்கம் இங்கு பொருந்த வில்லை.

pari3
pari3
உலகிலேயே இளமையான எரிமலை


குறிப்பாக மெக்சிகோவின் மத்தியப் பகுதியில்தான் உலகிலேயே இளமையான எரிமலை இருக்கிறது.


பாரிகுட்டின் என்று அழைக்கப் படும் அந்த எரிமலையானது கடந்த 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி இருபதாம் நாள்தான் பூமிக்கு அடியில் இருந்து வெடிச் சத்தத்துடன் உருவானது.


அந்த எரிமலை உருவாகுவதற்கு முன்பு மூன்று வாரத்திற்கு முன்பு அந்தப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டன.எனவே பூமிக்கு மேலே எரிமலைகள் வெடிப்பதைப் போலவே பூமிக்கு அடியிலும் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவது பாரிகுட்டின் எரிமலை மூலம் நிரூபணமாகிறது.

hspot.png
( 'மெக்சிகோவில் உள்ள எரிமலை வரிசையில் உள்ள எரிமலைகளின் வேதிச் சேர்மாணமானது ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருப்பதன் மூலம் ,மெக்சிகோ நிலப் பகுதியானது நிலையாக ஓரிடத்தில் இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. )
hspot.png ( 'மெக்சிகோவில் உள்ள எரிமலை வரிசையில் உள்ள எரிமலைகளின் வேதிச் சேர்மாணமானது ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருப்பதன் மூலம் ,மெக்சிகோ நிலப் பகுதியானது நிலையாக ஓரிடத்தில் இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது. )


குறிப்பாக நிலத்தின் மேலும் கடல் தளத்தின் மேலும் எரிமலைகள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு, அந்த நிலப் பகுதி அல்லது கடல்தளமானது, பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெப்ப மையத்தின் மேல் நகர்ந்து செல்லும் பொழுது நிலப் பகுதி அல்லது கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் படுவதாலும் உருவாகின்றன என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் இந்த முறையில் உருவாகும் எரிமலை வரிசையில் முதலில் உருவாகும் எரிமலையின் தொன்மையானது அதிகமாகவும் பின்னர் அடுத்தடுத்து உருவாகும் எரிமலைகளின் தொன்மையானது படிப்படியாக குறைந்தும் இருக்க வேண்டும்.


ஆனால் மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் தொண்மையை புவியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்ததில் அந்த எரிமலைகளின் தொன்மையானது படிப்படியாக குறையாமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.


அதுமட்டுமல்லாது பூமிக்குள் சென்ற கடல் தளமானது உருகி மேல் நோக்கி உயர்ந்ததால் எரிமலைகள்  உருவாகி இருந்தாலும்,அல்லது ஒரு எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டு எரிமலை வரிசை உருவாகி இருந்தாலும் அந்த எரிமலைகளின் வேதித் தன்மையானது ஒரே மாதிரி இருக்க வேண்டும்.


ஆனால் மெக்சிகோவின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைகளின் வேதிச் சேர்மானமானது ஒன்றுக் கொன்று மிகவும் வேறுபட்டு இருப்பதும்  புவியியல் வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது   


எனவே மெக்சிகோ நிலப் பகுதியானது நிலையாக இருப்பதுடன் பூமிக்கு அடியில் வெவ்வேறு இடத்தில் இருந்து பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்ததாலேயே மெக்சிகோவின் மத்தியப் பகுதி எரிமலைகள் உருவாகி இருப்பது அந்த எரிமலைகள் வேறுபட்ட வேதிச் சேர்மானத்துடன் இருப்பதன் மூலம் நிரூபணமாகிறது.


அதே போன்று பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் பாரி குட்டின் எரிமலை உருவான பொழுது ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்  மூலமும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.    

cocos17.gif
cocos17.gif

முக்கியமாக வடமேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு இணையாக கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளம் உருவாகி இருக்கிறது.

இந்தப் பகுதியில் கடல் தளமானது கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால்தான் இந்தப் பள்ளம் உருவானதாக  விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் அந்தக் கடல் தளமானது மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கும் தென் மேற்குப் பகுதியில் ‘ ட ‘ வடிவில் உருவாகி இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகியதாக விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் இந்த விளக்கமானது பொருத்தமற்ற விளக்கம்.

எப்படியென்றால் அந்த ‘ ட ‘ வடிவ கடலடி எரிமலைத் தொடரில் செங்குத்துப் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நுகர்ந்து கொண்டு இருந்தால்,முறையே மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
cocos2.gif
cocos2.gif
இதில் கிழக்கு திசையை நோக்கி கடல் தளமானது சென்றால் இறுதியாக மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக்கு அடியில் செல்லும்.அதே போன்று மேற்கு திசையை நோக்கி கடல் தளமானது நகர்ந்து சென்றால் அந்தக் கடல் தளமானது கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி அதாவது ஜப்பானை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் மோதி நொறுங்கும்.

இதே போன்று அந்த ‘ட ‘ வடிவ கடலடி எரிமலைத் தொடரில் படுக்கை வாட்டாக அமைந்து இருக்கும் எரிமலைத் தொடரில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

குறிப்பாக அந்தக் கடலடி எரிமலைத் தொடரில் உருவாகி வடக்கு திசையை நோக்கி நகரும் கடல் தளமானது ஏற்கனவே செங்குத்துப் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல்தளதுடன் மோதி நொறுங்கும்,

அதே போன்று அந்தப் படுக்கை வாட்டுப் பகுதியில் உருவாகி தெற்கு திசையை நோக்கி கடல் தளமானது நகர்ந்து சென்றால் ,அந்தக் கடல் தளமானது ,கிழக்கு பசிபிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி,கிழக்கு திசையை நோக்கி அதாவது தென் அமெரிக்கக் கண்டத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் மோதி நொறுங்கும்.

எனவே மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு தென் மேற்குப் பகுதியில் உள்ள ‘ட ‘ வடிவ கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமே முற்றிலும் சாத்தியமில்லாத விளக்கம்.
இது போன்ற பொருத்தமற்ற விளக்கங்கள் மூலம் கடல் தரையில் பள்ளங்கள் உருவாகி இருப்பதற்கும்,எரிமலைத் தொடர்களுக்கும்,நில அதிர்சிகளுக்கும்,சுனாமிகளுக்கும் புவியியல் வல்லுனர்கள் பொருத்தமற்ற விளக்கங்களைக் கூறிக் கொண்டு இருப்பது தெளிவாகப் புரிகிறது. 
இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த மத்திய அமெரிக்க நிலப் பகுதியில்தான் கரீபியன் பாறைத் தட்டு  உருவாகி எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து சென்றது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்கள் விவாதம் செய்து கொண்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு வடக்கில் ஹாலிவுட் அமைந்து இருக்கும் நகரமே வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து ரஷ்யாவின் கம்சட்கா தீப கர்ப்பப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு வினோத விளக்கமும் கூறப் படுகிறது. 

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.