கனடா நில அதிர்ச்சிகளுக்கு காரணம் என்ன?



கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் அடிப்படையில் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது குறித்து ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரைகளில் தெரிவித்து இருந்தேன்.

பிளேட் டெக்டானிக் என்று அழைக்கப் படும் ஒரு கருத்தின் அடிப்படையில் கண்டங்களின் மேல் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதற்கும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.

இந்தக் கருத்தின் படி கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல்தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

அவ்வாறு நகரும் கடல் தளமானது கண்டங்களின் ஓரப் பகுதியில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் உரசியபடி சென்று கொண்டு இருப்பதால் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதாகவும் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.

அதே போன்று பூமிக்குள் செல்லும் கடல்தளமானது உருகிப் பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து கண்டதைத் துளைத்துக் கொண்டு நிலத்திற்கு மேலே எரிமலைகளாக வரிசையாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால் இது போன்ற விளக்கத்தால் கனடாவின் மேற்குப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

உலகில் எங்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட்டாலும் உடனே புவியியல் வல்லுனர்கள் பிளேட் டெக்டானிக் என்று அழைக்கப் படும் ஒரு கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறுவது வழக்கம்.ஆனால் அந்தக் கருத்தின் அடிப்படையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வாடா மேற்குப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

ஏனென்றால் இந்தியாவுக்கு மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாகி இருப்பதைப் போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் காசஸ்கேடியா எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.குறிப்பாக அந்த எரிமலைத் தொடரில் இருபது எரிமலைகளும் சிறிய அளவிலான நாலாயிரம் எரிமலைக் குன்றுகளும் உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதற்கு புவியியல் வல்லுனர்கள் பிளேட் டெக்டானிக் கருத்தின் படி ஒரு விளக்கத்தைக் கூறுகிறார்கள்.

அதாவது வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் உள்ள பசிபிக் கடலுக்கு அடியில் ஜுவான் டி புக்கா என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது தொடர்ச்சியாக மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல்தளமானது உருவாகி முறையே வட மேற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதில் வடமேற்கு திசையை நோக்கி நகரும் கடல் தளமானது இறுதியாக பசிபிக் கடலின் வட பகுதியில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு அடியில் சென்று கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.

இதே போன்று ஜூவான் டி புக்கா கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து உருவாகி தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது இறுதியாக வட அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் நகர்ந்து சென்று கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து வட அமெரிக்கக் கண்டத்தை பொத்துக் கொண்டு தரைக்கு மேலே எரிமலைகளாக வரிசையாக உருவாகி இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இதே போன்றுதான் அலூசியன் தீவுகளுக்கு அடியில் சென்ற கடல்தளமும் பூமிக்குள் உருகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து அந்தப் பகுதியில் எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் வட அமெரிக்கக் கண்டத்திற்கு வடமேற்குப் பகுதியில் அலாஸ்கா வளை குடாப் பகுதி அமைந்து இருக்கிறது.

அந்த வளை குடாப் பகுதியில் வட பகுதியிலும் அலூசியன் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதுடன் அந்தத் தீவுகளுகுத் தென்பகுதியில் கடல் தரையில் பள்ளங்கள் உருவாகி இருக்கின்றன.



அதே போன்று கிழக்குப் பகுதியில் உள்ள கனடாவின் மேற்குப் பகுதியிலும் எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு அருகருகே இரண்டு திசைகளில் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதற்கு பிளேட் டெக்டானிக் கருத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஜூவான் டி புக்கா கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி வடமேற்கு தென் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படும் நிலையில் ,அதே கடலடி எரிமலைத் தொடருக்கு வட பகுதியில் இருக்கும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து இறுதியாக அலூசியன் தீவுகளுக்கு தென் பகுதியில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்ற பிறகு பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து 

கடல்தளத்தைப் பொத்துக் கொண்டு அலூசியன் எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்றும் அந்தப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு அவ்வாறு கடல் தளமானது பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதே காரணம் என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே வட அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் ஜூவான் டி புக்கா கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளங்கள் உருவாகி முறையே வடமேற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் அந்த எரிமலைப் பகுதிக்கு வடக்கில் உள்ள எரிமலைத் தொடர் பகுதியில் பிளேட் டெக்டானிக் கருத்தின் படி புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் அந்தக் கடலடி எரிமலைத் தொடரின் தென் பகுதியில் கடல்தளங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு நொறுங்கி விடும்.எனவே எந்தத் திசையை நோக்கியும் கடல் தளங்கள் நகர்ந்து கொண்டு இருக்க இயலாது.

இருப்பினும் அந்தப் பகுதியில் கடல் தளங்களுக்கு இடையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பது பற்றி புவியியல் வல்லுனர்கள் எந்தவித விளக்கத்தையும் தெரிவிக்காமல் அலாஸ்கா வளை குடாவுக்குத் தெற்கில் புதிய கடல் தளம் உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகும் அதனால் அந்தப் பகுதியில் கடல் தளத்துக்கும் வட அமெரிக்காவின் வட மேற்குப் பகுதிக்கும் இடையில் பக்க வாட்டு உரசலை ஏற்படுத்தும் நில முறிவு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் இது போன்ற விளக்கத்தால் வட அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் குறிப்பாக கனடாவின் மேற்குப் பகுதியில் எரிமலைகள் எப்படி உருவாகி இருப்பதற்கு பிளேட் டெக்டானிக் கருத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

ஏனென்றால் பிளேட் டெக்டானிக் தியரியின் படி நிலப் பகுதிகளுக்கு அடியில் நகர்ந்து செல்லும் கடல் தளமே உருகிப் பாறைக் குழம்பாகி கண்டத்தைப் பொத்துக் கொண்டு எரிமலைகளாக வரிசையாக உருவாகுவதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் வட அமெரிக்கக் கண்டத்திற்கு வட மேற்குப் பகுதியில் கடல் தளமானது இணையாக நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

எனவே வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது வட அமெரிக்கக் கண்டதைத் துளைத்துக் கொண்டு கண்டத்திற்கு மேலே எரிமலைத் தொடர்களாக உருவாகி இருப்பதாக தற்பொழுது நம்பப் படுகிறது.

ஆனால் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுவதால் ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொத்துக் கொண்டு நிலத்திற்கு மேலே எரிமலைத் தொடராக உருவாகி இருந்தால் அந்தப் பகுதியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கும் ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,அனாகிம் எரிமலைத் தொடரும்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடர்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளை நோக்கி ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.

எனவே பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பானது மேல் நோக்கி உயர்ந்து கண்டங்களையும் கடல் தளத்தையும் பொத்துக் கொண்டு உயர்வதால் நிலத்திற்கு மேலே எரிமலைகள் உருவாகின்றன என்று நம்பப் படும் வெப்ப மையக் கருத்தின் அடிப்படையிலும் வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களுக்கு புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

இதே போன்று கனடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நில அதிர்சிகளுக்கும் காரணம் அறியப் படவில்லை என்று கனடாவின் அரசு இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஏனென்றால் பிளேட் டெக்டானிக் கருத்தின் படி அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் கடல்தளங்கள் எதுவும் கண்டத்திற்கு அடியில் சென்று கொண்டு இருப்பதாக கருதப் படாததால் அந்தப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு காரணம் புரிந்து கொள்ளப் படவில்லை.
எனது விளக்கம்.

வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இறுகும் எரிமலைத் தொடர்கள் மூலம் வட அமெரிக்கக் கண்டமும் கடல் தளமும் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.எனவே வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.