அத்தியாயம் - நான்கு

அட்லாண்டிக் கடல் பகுதியிலும் இந்தியக் கடல் பகுதியிலும் உருவாகி இருப்பதைப் போலவே, பசிபிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தீவுகள் ,லைன் எரிமலைத் தீவுகள்,மற்றும் லூயிஸ் வில்லி எரிமலைத் தீவுகளானது, ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.

எனவே அட்லாண்டிக் மற்றும் இந்தியக் கடல் தளத்தைப் போலவே பசிபிக் கடல் தளமும் பசிபிக் கடல் தளத்தைச் சுற்றியுள்ள கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

pacificislandchains.jpg
pacificislandchains.jpg

குறிப்பாக பசிபிக் கடலைச் சுற்றி நியூ சிலாந்து, பிலிப்பைன்ஸ்,ஜப்பான் மற்றும் அலூசியன் எரிமலைத் தீவுகளும் அதே போன்று அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படும் அலாஸ்கா, கலிபோர்னியா,மத்திய அமெரிக்கா,மற்றும் தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப் பகுதிகள் அமைந்து இருக்கின்றன.
ttv.jpg
ttv.jpg
அத்துடன்  பசிபிக் கடலைச் சுற்றியுள்ள தீவுகளிலும் கண்டங்களின் ஓரப் பகுதிகளிலும் ஐநூற்றி நாற்பதுக்கும் அதிகமான எரிமலைகளும்  உருவாகி இருக்கின்றன.அதேபோன்று  பசிபிக் கடலைச் சுற்றியும் கடல் தளத்தில் நீண்டு குறுகிய கடல் தரைப் பள்ளங்களும் உருவாகி இருக்கின்றன.
patre1.gif
patre1.gif
இவ்வாறு பசிபிக் கடலைச் சுற்றியும் எரிமலைகளும்,கடல் தளத்தில் நீண்டு குறுகிய பள்ளங்களும் உருவாகி இருப்பதற்கும், பசிபிக் கடலைச் சுற்றியுள்ள தீவுகளிலும், கண்டங்களின் ஓரப் பகுதிகளிலும் ,அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு, பிளேட் டெக்டானிக் கருத்துப் படி விளக்கம் கூறப் படுகிறது. epr6.jpg
epr6.jpg

குறிப்பாக பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் கிழக்கு பசிபிக் கடலடி மேடு என்று அழைக்கப் படும் ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.

அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது ஏற்கனவே விளக்கிய படி, மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,வடமேற்கு மற்றும் தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,விளக்கம் கூறப் படுகிறது.
pcj.jpg
pcj.jpg
இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது இறுதியாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்குத் தென் பகுதியில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று உருகிப் பாறைக் குழம்பாகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து ஜப்பான் தீவுகளைத் துளைத்துக் கொண்டு ஜப்பானுக்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
subductionvolcano.gif
subductionvolcano.gif
அத்துடன் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் தீவுகளுக்கு அருகில் பசிபிக் கடல் தளமானது கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால்தான் அந்தத் தீவுகளுக்கு அருகில் கடல்தளத்தின் மேல் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

இதே போன்று கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி தென் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது,இறுதியாகத் தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று உருகிப் பாறைக் குழம்பாகி,மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து தென் அமெரிக்கக் கண்டதைத் துளைத்துக் கொண்டு ஆண்டிஸ் மலைத் தொடரில் எரிமலைகளாக வரிசையாக உருவாகி இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்திற்கு மேற்குப் பகுதியில் கடல் தளத்தில் ஆறாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு குறுகிய பள்ளம் உருவாகி இருக்கிறது.சிலி பெரு ட்ரென்ச் என்று அழைக்கப் படும் அந்தக் கடல் தரைப் பள்ளம் உருவாகி இருப்பதற்கு அப்பகுதியில் கடல் தளமானது பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால் உருவானது என்றும் விளக்கம் கூறப் படுகிறது.

முக்கியமாக ஜப்பானிலும் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலும் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு அப்பகுதியில் கடல்தளங்கள் உருசியபடி பூமிக்குள் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதே காரணம் என்று நம்பப் படுகிறது.
pacidivi.jpg
pacidivi.jpg

இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாக நியூசிலாந்து தீவுக்குக் கிழக்குப் பகுதியிலும் கடல் தளத்தின் மேல் டோங்கா ட்ரென்ச் என்று அழைக்கப் படும் ஒரு நீண்டு குறுகிய கடல் தரைப் பள்ளம் உருவாகி இருக்கிறது.

இதற்கு அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி புதிய கடல் தளம் உருவாகி வடமேற்கு மற்றும் தென் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்ற கடல் தளமானது , இறுதியாக டோங்கா தீவுக்கு அருகில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்ற பிறகு பாறைக் குழம்பாக உருகி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து புவித் தரையை துளைத்துக் கொண்டு உயர்ந்ததால், டோங்கா தீவுப் பகுதியில் எரிமலைகள் உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

குறிப்பாக கிழக்கு பசிபிக் கடலடி மேட்டுப் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளமானது, டோங்கா தீவுக்கு வட பகுதியில் சென்று கொண்டு இருக்கும் நிலையில், அதையொட்டிய படி அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடக்கில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி கடல் தளம் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கடல் தளங்களுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டு அப்பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
tongamark.jpg
tongamark.jpg
ஆனால் கடந்த1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் ,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தயாரித்து வெளியிட்ட ,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், டோங்கா தீவுக்கு வட பகுதியில், அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

எனவே பசிபிக் கடலின் தென் கிழக்குப் பகுதியில் கடல் தளங்கள் புதிதாக உருவாகித் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கருத்து அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்பதுடன்,கடல் தளமனது நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக பசிபிக் கடல் தளமானது நகர்ந்து பசிபிக் கடலைச் சுற்றியுள்ள ஓரப் பகுதிகளுக்கு அருகில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதால்தான் பசிபிக் கடலின் சுற்றுவட்டப் பகுதியில் கடல்தரைப் பள்ளங்கள் உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் பட்டாலும், பசிபிக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் கடல் தரைப் பள்ளங்களானது ஒரே தொடர்ச்சியாக உருவாகாமல் தனித் தனிப் பகுதிகளாக உருவாகி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே ஒரு சில பகுதிகளில் மட்டும் கடல் தளமானது வளைந்து பூமிக்குள் சென்று கொண்டு இருப்பதாகவும் அதற்கு அடுத்த பகுதியில் வளையாமல் நேராக சென்று கொண்டு இருப்பதற்கும் என்ன காரணமே என்று இதுவரை யாரும் எந்த ஒரு விளக்கத்தையும் முன்வைக்க வில்லை.
hawaiiformation.jpg
hawaiiformation.jpg
இதே போன்று ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலமாகவும் பசிபிக் கடல் தளமானது நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பசிபிக் கடல் தளமானது பசிபிக் பெருங் கடலின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது பசிபிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பின் மேல் வந்த பொழுது அந்த எரிமலைப் பிழம்பால் துளைக்கப் பட்டதால் பச்பிக் கடல் தளத்தின் மேல் ஒரு எரிமலைத் தீவு உருவானதாகவும் நம்பப் படுகிறது.

அதன் பிறகு பசிபிக் கடல் தளமானது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும், அதனால் கடல் தளத்துடன் அந்த எரிமலையும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்ததால் பூமிக்கு அடியில் இருந்த எரிமலைப் பிழம்பின் மேல் புதிதாக வந்து சேர்ந்த கடல் தளமானது மறுபடியும் துளைக்கப் பட்டதால் புதிய எரிமலையும் உருவாகி கடல் தளத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

இதே போன்று தொடர்ந்து நடைபெற்றதால் பசிபிக் கடல் தளத்தின் மேல் ஹவாய் எரிமலைத் தீவுகள் தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி தொடராக உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கம் உண்மையென்றால் பசிபிக் கடல் தளத்தின் மேல் முதலில் உருவாகிய தீவுகளில் உள்ள பாறையின் தொன்மையானது அதிகமாகவும் அடுத்தடுத்து உருவான தீவுகளில் உள்ள பாறைகளின் தொன்மையானது படிப்படியாக குறைந்து இருக்க வேண்டும்.

அதாவது தென் கிழக்குத் திசையில் உள்ள தீவுகளின் தொண்மையை விட வடமேற்கு திசையில் உள்ள தீவுகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.ஆனால் ஹவாய் எரிமலைத் தீவுகளில் உள்ள பாறைகளின் தொண்மையை வல்லுனர்கள் சேகரித்து ஆய்வு செய்ததின் அவற்றின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பது தெரிய வந்துள்ளது.
hagemark1
hagemark1

குறிப்பாக ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3520 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உர்யாகி தீவில் உள்ள பாறைகளின் தொண்மையானது 43.4 மிலியன் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.ஆனால் ஹவாய் தீவிற்கு வட மேற்கு திசையில் 3668 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்மி தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது 39.9 மிலியன் ஆண்டுகள் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு ஹவாய் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது. 

இதே போன்று ஹவாய் எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைத் தீவுகளில் உள்ள பாறைகளின் வேதிச் சேர்மாணமமும் ஒரே மாதிரியாக இல்லாமல்  வெவ்வேறாக இருப்பதன் மூலமாகவும் ஹவாய் எரிமலைத் தீவுகளானது தனித் தனிப் பிளம்புகளால் உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஸ்கிரிப்ட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அந்தோணி கொபெர்ஸ் என்ற புவியியல் வல்லுநர் பசிபிக் கடல் பகுதியில் உள்ள லைன் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளிலும் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து அவற்றின் தொண்மையை மதிப்பிட்ட பொழுதும் அந்தத் தீவு வரிசைகளில் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாக தெரிவித்து இருக்கிறார்.

இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள துமாத்து எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் பாறைகளின் தொன்மையும் படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் பாறைகளின் தொன்மையானது படிப்படியாக அதிகரிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
lohi2.jpg
lohi2.jpg
இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சிசுன் ஹுவாங் மேற்கொண்ட ஆய்வில் ஹவாய் தீவில் உள்ள மோனா லோவா எரிமலை மற்றும் மோனா கியா எரிமலைப் பாறைகளின் வேதிச் சேர்மாணமும் ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக மோனோ லோவா எரிமலைப் பாறையில் ஈயத்தின் ஐசோ டோப்புகளான ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது அதிகமாகவும் அதே நேரத்தில் மோனோ கியா எரிமலைப் பாறைகளில் ஈயம் 208 க்கும் ஈயம் 206 க்கும் உள்ள விகிதாச்சாரமானது குறைவாக இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இதன் அடிப்படையில் ஹவாய் தீவில் உள்ள இந்த இரண்டு எரிமலைகளும் தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதாக சிசுன் ஹுவாங் தெரிவித்து இருக்கிறார்.

இவ்வாறு ஒரே தீவில் உள்ள எரிமலைகளானது தனித் தனி எரிமலை ஊற்றுக்களில் இருந்து உருவாகி இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.

இதே போன்று பசிபிக் கடல் பகுதியில் உள்ள சமோவா எரிமலைத் தொடரிலும் உள்ள தீவுப் பாறைகளின் வேதிச் சேர்மாணமும் வேறுபட்டு இருப்பதுடன் மார்கொசாஸ் எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளின் வேதிச் சேர்மாணமும் வேறு பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

இவ்வாறு பசிபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவு வரிசையில் உள்ள தீவுகளில் உள்ள பாறைகளின் வேதிச் சேர்மானமானது வேறுபட்டு இருப்பதன் அடிப்படையிலும் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.