காஸ்பியன் கடலின் உப்புத் தன்மை குறைவாக இருப்பது ஏன்?



casp.jpg
ஈரானுக்கு வட பகுதியில் உள்ள உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடல் உருவானதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது இருபத்திஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரு ஒற்றைப் பெருங் கண்டம் இருந்ததாகவும் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது.
அதன் பின்னர் அந்தப் பெருங் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து பல சிறிய கண்டங்களாக உருவாகி நகர்ந்து மறுபடியும் இணைந்த பொழுது இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியே காஸ்பியன் கடல் என்று விளக்கம் கூறப் படுகிறது.
locre.jpg
ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது  பெருங் கடலில் இருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.இதற்கு காஸ்பியன் கடலில் ஆறுகள் கலப்பது ஒரு காரணமாகக் குறிப்பிடப் படுகிறது.
casp1.png
உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும் காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை.
இடைப்பட்ட காலத்தில் காஸ்பியன் கடலின் மட்டம் தாழ்வடைந்தும் இருக்கிறது.
 காஸ்பியன் கடல்மட்டம் தாழ்வடைந்ததற்கு அதில் இருந்து நீர் ஆவியாகியதே காரணம்.நீர் ஆவியாகும் பொழுது அந்த நீரில் உள்ள உப்பானது கடலிலேயே தங்கி விடுவதால் காலப் போக்கில் காஸ்பியன் கடலில் உப்பின் அளவு அதிகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் காஸ்பியன் கடலின் உப்பின் அளவு கடல் நீரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருகிறது.எனவே காஸ்பியன் கடலானது மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. அத்துடன்  காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருகிறது.
எனவே கண்டங்கள் நகர்ந்து மோதிக் கொண்டதால் இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியே காஸ்பியன் கடலாக உருவானது என்று கூறப் படும் விளக்கம் தவறு.
அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.காஸ்பியன் கடலானது உள் நாட்டுப்  பகுதியிலேயே உருவாகி இருக்கிறது.
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.