கருங் கடலில் ஏன் சுறாக்கள் இல்லை ?


 

கருங் கடலிலும் காஸ்பியன் கடலிலும் ஏன் சுறாக்கள், ஆக்டோ பஸ்கள் ஜெல்லி மீன்கள் நட்சத்திர மீன்கள் இல்லை.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
 



 

நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் தனித் தனித் தீவுகளாக பூமத்திய ரேகைப் பகுதியில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் பின்னர் அந்தத் தீவுப் பகுதிகள் சேர்ந்ததால் தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவானதாக பரவலாக நம்பப் படுகிறது.

இவ்வாறு நிலப் பகுதிகள் ஒன்று சேர்ந்ததால் இடையில் உள்ள கடல் பகுதிகள் நிலத்தால் சூழப் பட்டதால் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல் போன்ற உள்நாட்டுக் கடல்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்து உண்மையென்றால் அந்தக் கால கட்டத்தில் தோன்றிய கடல் உயிரினங்கள் நிலத்தால் சூழப் பட்ட கடலில் காணப் படவேண்டும்.

ஆனால் சுறாக்கள் நாற்பதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் தற்பொழுது சுராக்களில் முன்னூறுக்கும் அதிக இனவகைகள்

இதே போன்று நட்சத்திர மீன்களும் அறுநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.நட்சத்திர மீன்களில் ஆயிரத்தி எண்ணூறுக்கும் மேற்பட்ட இனவகைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதே போன்று முநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இனவகைகளுடன் ஜெல்லி மீன்களும் ஐந்நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பி இருந்தே கடலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

இதே போன்று தலைக் காலிகள் என்று அழைக்கப் படும் ஆக்டோ பஸ்சும் எண்ணூறுக்கும் மேற்பட்ட இனவகைகளுடன் ஐம்பது கோடி ஆண்டுகளாக கடலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.

உண்மையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் நிலப் பகுதிகளாக இருந்து கண்டங்களாக உருவாகி இருந்தால் கண்டங்களுக்கு மத்தியில் காணப் படும் கருங் கடல் மற்றும் காஸ்பியன் கடலிலும் சுறாக்கள்,நட்சத்திர மீன்கள்,ஆக்டோ பஸ்கள்,மற்றும் ஜெல்லி மீன்களும் காணப் படவேண்டும்.

ஆனால் அவ்வாறில்லாமல் கருங் கடலிலும் காஸ்பியன் கடலிலும் சுறாக்கள் உள்பட நட்சத்திர மீன்கள் ஆக்டோ பஸ்கள் ஜெல்லி மீன்கள் இல்லாததன் அடிப்படையில் கண்டங்கள் தற்பொழுது உள்ள இடத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதை எடுத்துக் காட்டுவதுடன்.பூமிக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்று நீரால் கடல்கள் உருவாகி இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சிறிய திருத்தம்.
கருங் கடலில் ரோமானியன் கடற்கரைப் பகுதியில் பெருங் கடல் பகுதியில் காணப் படும் ஜெல்லி மீன்கள் மற்றும் கடல்தாமரை போன்ற உயிரினங்கள் காணப் படுகின்றன.இதற்கு காரணம் கருங் கடலானது மத்திய தரைக் கடலுடன் நீரினைப்பைக் கொண்டுள்ளது.ஆனால் நீர் வழித் தொடர்பு இல்லாத காஸ்பியன் கடலில் ஜெல்லி மீன் மற்றும் கடல்தாமரை போன்ற பெருங் கடல் உயிரினங்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 எனவே காஸ்பியன் கடலானது தனியாக நிலப் பகுதிக்கு நடுவில் உருவாகி இருக்கிறது.காஸ்பியன் கடலில் பெருங் கடல் பகுதியில் காணப் படும் நட்சத்திர மீன்,ஜெல்லி மீன்,ஆக்டோ பஸ்,சுறாக்கள்,போன்ற விலங்கினங்கள் காணப் படாதாது அந்தக் கடலானது நிலத்திற்கு நடுவில் தனியாக உருவாகி இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
மற்றபடி நிலப் பகுதிகள் நகர்ந்து இணைந்ததால் உள்நாட்டுக் கடல் பகுதிகள் தோன்றியதாக கூறப் படும் விளக்கம் சரியல்ல.உண்மையில் நிலப் பகுதிகள் நகர்ந்து இணைந்து இருந்தால் உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் நட்சத்திர மீன்,ஜெல்லி மீன்,ஆக்டோ பஸ் சுறா போன்ற கடல் உயிரினங்கள் காணப் படவேண்டும்.
------------------------------------------------

காஸ்பியன் கடலில் கடல் உயிரினங்கள் காணப் படாததற்கு அந்த நீரில் உப்புத் தன்மையானது கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பது ஒரு காரணமாகக் கருதப் படுகிறது.

ஆனால் காஸ்பியன் கடலில் 1999 ஆம் ஆண்டு நிமியோப்சிஸ் லிடி என்ற வகை ஜெல்லி மீன்கள் அறிமுகப் படுத்தப் பட்டதில் ஜூ பிளான்க்டான் என்று அழைக்கப் படும் நுண்ணிய மிதவை உயிரினத்தின் அளவை எழுபத்தி ஐந்து சதா வீதத்தை காலி செய்தது.

எனவே உண்மையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களானது உண்மையில் தீவுக் கண்டங்களாக நகர்ந்து கொண்டுஇருந்திருந்தால், காஸ்பியன் கடலானது மற்ற கடல் பகுதியின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் காஸ்பியன் கடலில் ஜெல்லி மீன் உள்பட இன்னும் பல கடல் உயிரினங்கள் காணப் படவேண்டும்.

அவ்வாறில்லாமல் காஸ்பியன் கடலில் ஜெல்லி மீன் நட்சத்திர மீன்,கடல் தாமரை,ஆக்டோ பஸ் போன்ற உள்பட மற்ற கடல் உயிரினங்கள் காணப் படாதாது காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

எனவே கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் தீவுக் கண்டங்களாக நகர்ந்து மோதியாதால் காஸ்பியன் கடலானது நிலத்திற்கு இடையில் சிக்கிக் கொண்டதாக கூறப் படும் விளக்கம் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை.
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
 
 
 
 

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.