Earth research report-scientist.G.Ponmudi.

தற்பொழுது பனி யானைகளின் அழிவிற்கும், டைனோசர்கள் அழிவிற்கும், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும், நில அதிர்ச்சி மற்றும் சுனாமிகளும் தவறான விளக்கங்கள் கூறப் படுகின்றன. -விஞ்ஞானி.க.பொன்முடி. பனி யானைகள் மற்றும் டைனோசர்களின் அழிவிற்கு கால நிலை மாற்றமே காரணம் என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பல லட்சம் கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் லட்சக் கணக்கில் பனி யானைகள்,பனி கரடிகள்,பனி மான்கள்,பனி நரிகள்,பனி ஓநாய்கள்,பனி காண்டா மிருகங்கள்,பனி எருதுகள்,சிங்கம் புலி போன்ற கொன்று திண்ணிகள்,என லட்சக் கணக்கில் விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பது இன்று அப்பகுதியில் பனிப் படலங்களுக்கு அடியில் காணப் படும் மம்மிகள் போன்ற அதன் உடலங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த விலங்கினங்களின் அழிவுக்கு காரணம் மனிதனின் வேட்டையா மற்றும் கால நிலை மாற்றமா என்று நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. விலங்கினங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மனிதனின் கற்க கருவிகளோ இருப்பிட ஆதாரங்களோ காணப் பட வில்லை.மேலும் மனிதன் வட துருவப் பகுதிக்கு வருவதற்கு முன்பே அந்த விலங்கினங்கள் அழிவை சந்தித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. தற்பொழுது கால நிலை மாற்றமே காரணம் என்பது ஆதார பூரவமாகத் தெரிய வந்துள்ளது. அதே போன்று ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் அழிந்ததற்கு விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த மலை அளவு பாறையே காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது. குறிப்பாக ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாறை அடுக்குகளில் இரிடியம் என்ற தனிமத்தின் படிவுகள் அதிக அளவில் இருப்பதாகவும் விண் பாறைகளில் அதிக அளவில் இரிடியம் இருப்பதாகவும் எனவே விண் கல் மோதலே டைனோசர் இனத்தின் அழிவிற்கு காரணம் என்று விளக்கம் கூறப் பட்டது. இந்த நிலையில்,ஒரு விண் கல் மோதலால் மட்டுமே ,உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்த இயலாது என்று கருதிய ஆராய்ச்சியாளர்கள் விண் கல் மோதலுடன் உலகம் முழுவதும் உள்ள எரிமலைகளின் சீற்றமும் காரணமாக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர். இந்த நிலையில்,பிரின்ஸிடன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் ஜெர்ட்டா கெல்லர் என்ற ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆய்வில் விண் கல் மோதல் காலத்திற்கும் டைனோசர்கள் ஆழ்ந்த காலத்துக்கும் முப்பதாயிரம் ஆண்டு கால இடை வெளி இருப்பதாகவும் அதனால் டைனோசர்களின் அளவுக்கு விண் கல் மோதல் காரணம் அல்ல என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் டைனோசர்களின் அழிவானது ஏக காலத்தில் நிகழ்ந்த நிகழ்வு அல்ல என்பதும்,படிப் படியாக நிகழ்ந்த நிகழ்வு என்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக டைனோசர்களின் எலும்பு புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்காவின் வட பகுதியும் ஆசியாவின் வட பகுதியான சைபீரியாவும் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே வட துருவப் பகுதிக்குள் நகர்ந்தது வந்து விட்டதாகப் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்தது.அத்துடன் பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இவ்வாறு நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரி வரை கீழ் செல்கிறது. ஆனால் டைனோசர்கள் இனமோ பாலூட்டிகளைப் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை இனத்தை சேர்ந்தது. எனவே பனி மான்களை போன்று டைனோசர்கள் குளிர் கால நெடுந்துயிலை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் பனி மான்களை போன்று குளிர் கால இடப் பெயர்ச்சியை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் கருதப் பட்டது. ஆனால்,டைனோசர்கள் முட்டைகள் பெரிய ஆறு மாதத்திற்கு மேல் தேவைப் படும் என்று கிரிகரி எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிய வந்த்துள்ளது. அத்துடன் டைனோசர்களின் குஞ்சுகள் ஓரளவு தனியாக இயங்க மேலும் ஒரு ஆண்டு தேவைப் படும் என்றும் அவர் தெவித்து இருக்கிறார். இந்த நிலையில் ஆர்க்டிக் பகுதியில் இலை வயது டைனோசர்களின் புதை படிவங்களும் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. எனவே டைனோசர்கள் குளிர் கால இடப் பெயர்ச்சி மற்றும் நெடுந் துயிலை மேற்கொண்டு இருக்க இயலாது என்பது தெரிய வந்துள்ளது.அத்துடன் டைனோசர்களானது ஆண்டு முழுவதும் ஆர்க்டிக் பகுதியில் தங்கி வாழ்ந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் டைனோசர்களின் முட்டைகள் பெரிய முப்பத்தி நான்கி டிகிரி சென்டி கிரேட் தேவை.ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும்.எனவே டைனோசர்களின் முட்டைகள் எப்படி புரிந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. சில சிறிய வகை டைனோசர்கள் முட்டைகளை அடை காத்ததற்கு ஆதாரங்கள் இருந்தாலும் கூட,ஆர்க்டிக் பகுதியில் எட்டு டன் எடையுள்ள எட்மாண்டோ சாரஸ் என்ற டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அது போன்ற பெரிய டைனோசர்கள் நிச்சயம் முட்டைகளை அடை காத்து இருக்க இயலாது. குறிப்பாக நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது சூரிய ஒளி இன்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே ஆர்க்டிக் பகுதியில் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர் கூட்டத்துக்கு உணவளிக்க கூடிய அடர்ந்த காடுகள் உருவாகி இருக்க இயலாது. சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்கள் குறைந்த அளவு உணவை உண்டு ஆறு மாத காலம் தப்பித் பிழைத்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.அப்படி என்றால் விண் கல் மோதலால் பூமி எங்கும் எழுந்து பரவிய தூசிகளால் சூரியன் ஆறு மாத காலம் மறைக்கப் பட்டதாகவும் அதனால் டைனோசர் இனம் அளித்ததாகவும் கூறப் பட்ட விளக்கம் கேள்விக்கு குரியதாகி விடுகிறது. எனவே டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் அதிக வெப்ப நிலை நிலவி இருப்பதும்,பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டைனோசர்களின் அழிவிற்கு கால நிலை மாற்றமே காரணம் என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்களை,புவியியல் வல்லுனர்கள் மற்றும் தொல் விலங்கியல் வல்லுநர்களால் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ,கெர்கூலியன் என்று அழைக்கப் படும் ஒரு கடலடிப் பீட பூமியானது எப்பொழுது உருவானது என்று அறிவதற்காகப் பிரிட்டிஷ் நாட்டுப் புவியியல் வல்லுனர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். குறிப்பாக அவர்கள் கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளை எடுத்து அதன் தொண்மையை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகளானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்தது.எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பும் இருந்திருப்பதும் அதன் வழியாக டைனோசர் போன்ற விலங்கினங்களின் இடப பெயர் நடை பெற்று இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன அதில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன அதனால் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன அதனால் டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு தவறான விளக்கங்கள் கூறப் படுகின்றன. அதாவது தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் கரிய மில, வாயு வளி மண்டலத்தில் கலப்பதால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதனாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இந்த விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் சத்து குறைந்த புற்கள் மட்டுமே எஞ்சியதாகவும் அதனால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்கள் இருப்பதை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இதே கால கட்டத்தில் கடல் மட்ட உயர்வால் காடுகள் மூழ்கி இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மெக்சிகோ வளை குடா பகுதியில்,புளோரிடா மாகாணத்திற்கு அருகில் உள்ளே அலபாமா பகுதியில் கடற் கரையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் அறுபது அடி ஆழத்தில் சைப்ரஸ் காட்டு மரங்கள் மூழ்கி இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். கார்பன் கால கணிப்பு முறையில் கணிக்கப் பட்டதில்,அந்த காடுகளானது அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதே போன்று ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து கற்கால மனிதர்கள் ஆஸ்திரேலிய கண்டத்திற்கு சென்றதாகவும் தொல் பொருள் மற்றும் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் தீவுக்கும்,ஐரோப்பாக் கண்டத்திற்கும் இடையில் டோகர் லேண்ட் என்ற நிலப் பகுதி இருந்திருப்பது அப்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட கற்கால மனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கருவிகள் மாமத் யானைகளின் எலும்புகள் மூலம் தெரிய வந்து இருப்பதாகவும், அந்த நிலப் பகுதியானது பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்த் தொடங்கி இறுதியாக எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் மூழ்கியதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று,பிரிட்டிஷ் தீவில் வேல்ஸ் பகுதியில் ஆறாயிரம் மற்றும் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் மூழ்கிய மரங்களும் தற்பொழுது வெளிப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம். தற்பொழுது கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது அண்டார்க்டிக்கா ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று நம்பப் படுகிறது. ஆனால் கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. இந்த நிலையில் கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைத் தொடர்கள் இருப்பது தெரிய வந்தது. அத்துடன் அந்த எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற் பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தரையாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகிப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தரையுடன் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது கடல் தரையுடன் நகரும் பொழுது அவற்றின் ஒரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து, மறுபடியும் பூமிக்குள் சென்று அழிவதாகவும், அவ்வாறு நகரும் பொழுது, அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் படுவதால் சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. ஆனால் உலக அளவில் இலட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரைய பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்தது கொண்டு இருப்பதாக நம்பப் படும் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் அடிப்படையில், கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் கடல் தரையும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்,சுமத்ரா தீவுப் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், நாசாவை சேர்ந்த புவியியல் வல்லுநர்கள், இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சுமத்ரா தீவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஒரு விளக்கத்தையும் அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டது தட்டு தட்டு நகர்ந்து சுமத்ரா தீவுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று இன்னொரு விளக்கத்தையும் அடிப்படை ஆதாரமின்றி தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதே போன்று வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இதைப் பட்ட கடல் தரையிலும் தொடர்ச்சியாக நிலா அதிர்ச்சிகள் ஏற்படாமால் இருப்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில்,அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விலகி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக நம்பப் போகும் எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் புனித பால் மற்றும் புனித பீட்டர் தீவு பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல் அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகராமல் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் இருக்கும் ஹைத்தி தீவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு அமெரிக்காவின் USGS அமைப்பை சேர்ந்த புவியியல் வல்லுநர்கள் கரீபியன் தீவுக்கு கூட்ட எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரியாத நிலையிலேயே கண்டத் தட்டுகள் நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று அடிப்படை ஆதாரம் இன்றி கற்பனை விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,குமுறும் எரிமலைகளைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளானது எரிமலையுடன் உயர்ந்து இறங்குவதால் எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரைமட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் இதே போன்ற தரை மட்ட மாறுபாடுகளானது, நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்ட பகுதிகளில் நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் ஏற்பட்டு இருப்பதும் தரைமட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இத்தாலியிலும்,,சுமத்ரா, ஹைத்தி மற்றும் ஹோன்சூ தீவுகளிலும் நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரைமட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. முக்கியமாக இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததுடன், அப்பகுதியில் நில அதிர்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் என்ற வாயு வெளிப் பட்டு இருப்பதும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதே போன்று,ஹோன்சூ தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பதும் ஆராய்ச்சியாளர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளே நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது. குறிப்பாக ஜப்பானில் உள்ள சுடு நீரூற்றுக்களில் இருந்து வெளிவரும் நீரானது பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து வெளிவரும் நீர் என்பது தெரிய வந்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிக் கட்டிகளும் இதே போன்று நிலவின் ஆழத்தில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரால் உருவானது என்ரூ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக மாறும் பொழுது, அதில் இருந்து வெளியாகும் நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளிப் பட்டு, புவித் பரப்புக்கு மேல் சேர்ந்ததால் கடல் உருவானது.இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக்கு குழம்பானது படிப்பு படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகளாக உருவாகும் பொழுது, பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் சேர்ந்தால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. இதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவான பொழுது,பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்களால் வளி மண்டலம் உருவானது. நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான அடர்த்தி குறைவான பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததால் கண்டங்கள் உருவாகின. குறிப்பாக கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது, கடங்களின் மேல் பரவலாக காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மற்றும் கடலுக்கு அடியில் உருவாகும் தலையணை வடிவ பாறைகள் மற்றும் பாம்புப் பாறைகள் காணப் படுவதன் மூலம் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது பெரும் பகுதியாக இருப்பதாலும் பூமியும் படிப் படியாகக் குளிர்ந்து கொண்டு இருப்பதாலும் பூமிக்கு அடியில் பாறைக் குழம்பில் நீர் உருவாகி கடலில் கலப்பதும் தொடரும். எனவே எதிர் காலத்தில் நிலப் பகுதிகள் யாவும் கடல் மட்ட உயர்வால் மூழ்கடிக்கப் படும். அதே போன்று தற்பொழுது துருவப் பகுதியில் இருக்கும் பனிப் படலங்கள் பூமத்திய ரேகைப் பகுதி வரை பரவி காடுகளையும் விலங்கினங்களையும் அழிக்கும். -விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.