கடல் மட்டம் உயர்வால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

கடல் மட்டம் உயர்வால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி.
வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது.இந்த நிலப் பகுதியானது பெருமை புரோஸ்ட் என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள் மனுவுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு எகிப்து மம்மிகளைப் போன்று காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரதம் காணப் படுகிறது.குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமலையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். உறைபனி நிலத்தில் கையாண்டு பிடிக்கப் பட்ட விலங்கினங்களின் மம்மி உடல்கள். சைபீரியாவில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிமண்ணில் புதைந்த ஒரு பறவையின் உடலானது சில நாட்களுக்கு முன்பு இறந்த பறவையின் உடலைப் போன்று இருக்கிறது. ரஸ்யாவின் உகுதியா பகுதியில் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு சிங்க குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதன் பல்லில் அது கடைசியாகக் குடித்த பாலின் மிச்சங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று சைபீரியாவில் 42,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு கம்பள மயிர் யானைக் குட்டியின் மம்மி கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று சைபீரியாவில் 28,000 ஆண்டு தொன்மையான மாமத் யானையின் உடலில் இருந்து எடுக்கப் பட்ட செல்லின் டி என் ஏ குளோனிங் செயல் பாட்டுக்கு வினை புரியத் தக்க அளவில் இருந்தது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 22,000 முதல் 39,500 ஆண்டு தொன்மையான கரடியின் மம்மி பாகங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. சைபீரியாவில் கண்டு பிடிக்கப் பட்ட 42,000 ஆண்டுகள் தொன்மையான குதிரைக்கு குட்டியின் மம்மி உடலில் திரவ வடிவில் இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது போன்று சைபீரியாவில் 34,000 ஆண்டுகள் தொன்மையான கம்பள மயிர் காண்டா மிருகத்தின் மம்மி உடலில் அது கடைசியாக உண்ட உணவின் மிச்சங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இது போன்று சைபீரியாவில் மான் மேய்ப்பவர்களால் பல விலங்கினங்களின் மம்மி உடல்களை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக கனடாவின் பகுதியில் 57,000 ஆண்டு தொன்மையான ஒநாய்க் குட்டியின் மம்மி உடல் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
குறிப்பாக கோபன் ஹேகன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லேர்ஸ் லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஆர்க்டிக் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில் இருந்த விலங்கினங்களின் கழிவுகள்,அவற்றின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுகள்,தாவரங்களின் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்து மரபணு சோதனை செய்தனர். அதன் அடிப்படையில்,வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும் அவற்றை பனி யானைகள் உண்டு வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால், கால நிலை குளிர்ந்ததாகவும்,அதனால் பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதனால் பனி யானைகளின் எண்ணிக்கை குறைந்ததாகவும்,அதன் பிறகும் பனிப் பொழிவால் கால நிலை குளிர்ந்தால்.பூக்கும் தாவரங்கள் அழிந்ததால் சத்து குறைந்த புற்கள் மட்டுமே எஞ்சியதாகவும் அதனால் பனி யானை இனமே அழிந்ததாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் பனியால் மூடப் பட்டதால்,விலங்குகளால் புற்கள் இருப்பதை அறியவும் முடிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,வட அமெரிக்காவின் மெக்சிகோ வளை குடாப் பகுதியில் அலபாமா நகராக கடற் கரைப் பகுதியில்,60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்ட உயர்வால் கடலுக்கு மூழ்கிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியை ஆராய்சசியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.கார்பன் காலா கணிப்பு மூலம் அந்த சைப்ரஸ் காடு 60,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐரோப்பாவில் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய காட்டுப் பகுதியானது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவில் வீசிய கடும் புயலால் கடல் மட்டத்துக்கு மேல் வெளிப் பட்டது பரபப்பாக பேசப் பட்டது. இதே போன்று ஐரோப்பாவில் நார் போல்க் நகரத்தில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவர்கள் கடலுக்கு அடியில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய காட்டை கண்டு பிடித்து இருக்கின்றனர். குறிப்பாக பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் நியாண்டர்தால் மாமனிதனின் மண்டை ஓடு மற்றும் கற்கால கமனிதர்கள் பயன் படுத்திய கருவிகள் மாமத யானையின் தந்தங்கள் ,கண்டு பிடிக்கப் பட்டது. அந்தப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடைக்கும் டோகர் லேன்ட் என்று அழைக்கப் படும் நிலப் பகுதியானது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிட்டிஷ் தீவுக்கும் இடையில் நிலத் தொடர்பாக இருந்திருக்கிறது. அதற்கும் முன்பு அந்த நிலப் பகுதியானது கற்கால மனிதர்கள் மற்றும் யானை உள்பல பல விலங்கினங்கள் வாழ்ந்த காட்டுப் பகுதியாக இருந்திருக்கிறது.அந்தப் பகுதியில் சேகரிக்கப் பட்ட எலும்புகள் மற்றும் கருக்கருவிகள் மூலம் அந்த நிலப் பகுதியானது பதினாறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கத் தொடங்கி இறுதியாக நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக மூழ்கி இருப்பத்தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல நூறு ஆதி வர தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் தெற்காசிய நிலப் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு சென்று இருப்பதாக தொல் பொருள் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல நூறு ஆதி தாழ்வாக இருந்த பொழுது கற்கால மனிதர்கள் பிலிப் பைன்ஸ் தீவுகளுக்கு சென்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கிரீன்லாந்து தீவில் பனிப் படலங்களுக்கு அடியில் நாலாயிரம் அடி ஆழத்தில் இருக்கும் தரைப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட மண் மாதிரிகளில் மரங்கள் செடிகளின் பாகங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.அதன் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரீன்லாந்து தீவில் பசுமைக் காடுகள் இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு போஸ்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆர்க்டிக் பகுதியில் உள்ள எழுபத்தி மூன்று குகைகளின் படிவுகளை ஆய்வு செயித்தனர்.அதன் அடிப்படையில் அவர்கள் கடந்த பதினைந்து லட்சம் ஆண்டுகள் முதல் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆர்க்டிக் பகுதியில்,குறிப்பாக உயர்ந்த அச்சக கோட்டுப் பகுதியில் கூட, உறை பனி நிலமானது உருகி இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர்.ஆனால் நன்கு லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு உறை பனி நில உருகலானது ஆர்க்டிக் பகுதியில் தாழ்ந்த அட்ச ரகைப் பகுதியில் மட்டும் நிகழ்ந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அத்துடன் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் கோடை காலத்தில் பணிப் படலங்கள் இருந்திருக்க வில்லை என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக அவர்கள் ஆர்க்டிக் பகுதி உரை பனி நிலமானது ஆச்சர்யமாக நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். மேற்கூறிய ஆதாரங்கள் மூலம் கடந்த ஐம்பதாயிரம் ஆண்டு காலமாக வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருப்பதுடன் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. எனவே,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாகவும் அதன் காரணமாகவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கம் என்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய ஆதாரங்களை மூலம் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது குறைந்து இருப்பதும் அதனால் பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதும் அதனால் திருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாக்கி இருப்பதும் அதனால் காடுகள் அழிந்து விலங்கினங்களும் அழிந்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. -விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

hallegadsden said…
Casino - DrmCD
Visit our casino page to 남원 출장샵 browse 경산 출장마사지 the casino's current games, games, promotions, 목포 출장샵 customer service and support. 경산 출장마사지 Go to our FAQ section and visit Casino FAQ 동두천 출장마사지 section  Rating: 4 · ‎6 reviews

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.