புதை படிவப் புதிர்களுக்கு என்ன விடை?-விஞ்ஞானி.க.பொன்முடி.

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள,முதலை போன்ற, ''மெசோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில்,நிச்சயம் இந்த விலங்கால் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிச்சயம் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார். குறிப்பாக அவர்,ஒரே கால நிலையில் வாழக் கூடிய ,வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார். அதன் அடிப்டையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து தென் பகுதி வரை தொடர்ச்சியாக,''பாஞ்சியா ''என்ற ஒரு பெரிய கண்டம் இருந்ததாகவும்,அந்தக் கண்டத்தை சுற்றிலும் ''பாந்தலாசா'' என்ற கடல் பகுதி இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததாகவும், அதனால் லாரேசியா,கோண்டுவாணா என்ற இரண்டு கண்டங்கள் உருவாகி முறையே வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில்,பூமத்திய ரேகைப் பகுதியில் ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி முறையே மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தாகவும்,அதனால் இந்தக் கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவாகி பெரிதாக்கிக் கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால் தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று ஆப்பிரிக்கா ,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் ஆப்பிரிக்கக் கண்டமானது மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும்,அதே போன்று இந்தியக் கண்டமானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார். ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது?என கேள்வி எழுப்பியவர்களுக்கு, வெக்னரால் உறுதியாக எந்த ஒரு பதிலையும் கூற இயலவில்லை. இந்த விளக்கமானது,''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. முக்கியமாகக் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் ஏதும் கடல் தரையில் காணப் பட வில்லை. ஆனால்,கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக எரிமலைகள் இருப்பதும்,அந்த எரிமலைப் பகுதிகளில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும்,நில அதிர்ச்சியிலும் ஏற்படுவது தெரிய வந்தது. இதன் அடிப்படையில்,வெக்னரின் விளக்கமானது சிறிது மாற்றி அமைக்கப் பட்டது. அதாவது கண்டங்களுக்கு இடையில் இருக்கும், அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது இந்தக் கருத்தின் அடிப்படையில் புதை படிவப் புதிர்களுக்கு நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறினாலும்,ஆர்க்டிக் வளையப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,,சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் ஏற்பட்ட நில அதிர்சிகளுக்கும் சுனாமிகளும் இந்தக் கருத்தின் அடிப்படையில்,புவியியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயலாத நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலையில்,கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதுடன்,கடல் மட்டமானது டைனோசர்கள் காலத்தில் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதுடன் அதன் வழியாக டைனோசர்கள் போன்ற விலங்கினங்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டமானது தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் அதனால் ஏற்பட்ட கடல் மட்ட உயிர்வாழும் கடலின் பரப்பளவு அதிகரிப்பதாலும்,வலி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு துருவப் பகுதிகளில் பணிப் படலங்கள் உருவாகியதால்,திருவப் பகுதிகளில் காடுகளும் டைனோசர்களும் அழிந்து இருப்பதும்,ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. அத்துடன் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சியிளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. தற்பொழுது மித வெப்ப மணடலக் கால நிலை நிலவக் கூடிய அட்ச ரேகைப் பகுதியில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில்,சதுப்பு நிலப் பகுதியில் வாழக் கூடிய ''ஈட்டியோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. இதற்கு, இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது, இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே இருந்ததாகவும்,அப்பொழுது அரிசோனா மாகாணமானது பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்தததாகவும், அதன் பிறகு வட அமெரிக்கக் கணடமானது வடக்கு நோக்கி நகர்ந்தால் அரிசோனா மாகாணமானது, மித வெப்ப மண்டலக் கால நிலை நிலவும் அட்ச ரேகைப் பகுதிக்குள் வந்து விட்டதாகவும்,கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில், புவியியல் வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால்,இந்தக் கருத்தின் அடிப்படையில்,ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில்,கண்டு பிடிக்கப் பட்ட, பனிரெண்டு வகையான டைனோசர்களின் எலும்புத் புதைப்படிவங்களுக்கும்,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால், இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின், வட பகுதியில் இருக்கும், அலாஸ்காவின் வட பகுதியும்,அதே போன்று ஆசியக் கண்டத்தின் வட பகுதியான, சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டது. இந்த நிலையில், அலாஸ்கா மற்றும் சைபீரியாவில், ''ஏழு கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால்,பூமியானது,தன் அச்சில் இருப்பது மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக பகலும்,அதே போன்று நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவும் நீடிக்கிறது. இவ்வாறு நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கு கீழே செல்கிறது.எனவே டைனோசர்கள் குடிக்க நீர் கூட கிடைக்காமல் அனைத்தும் பனிக் கட்டி ஆகி விடும். அத்துடன் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால், தாவரங்களானது சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது,எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டம் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களால் இன்று வரை விளக்கம் கூற இயல வில்லை. ஒரு வேளை, டைனோசர்களானது பனி மான்களை போன்று,குளிர்கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்கலாம் அல்லது ,பனிக் கரடிகளைப் போன்று,குளிர் கால நீண்ட தூக்கத்தை மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பப் பட்டது. ஆனால் டைனோசர்களின் முட்டைகள் பெரிய ''ஆறு மாத காலம்'' தேவைப் படும் என்பது தெரிய வந்துள்ளது.அதன் பிறகும் இள வயது ,டைனோசர்கள் தனியாக இயங்க ''ஒரு ஆண்டு காலம்'' தேவைப் பட்டு இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே,டைனோசர்களானது ஆர்க்டிக் பகுதியில்,ஆண்டு முழுவதும் தங்கி வாழ்ந்து இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய ,முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது ''பத்து சென்டி கிரேட் டிகிரி'' ஆகும். அத்துடன் ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ''வாத்து அலகு டைனோசரின்'' எடையானது ஏழு டன்,யானையை விட பல மடங்கு பெரிய டைனோசர்களின் முட்டைகளானது ''அடை காத்தல் '' மூலம் பொரிந்து இருக்காது. எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது ,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் முட்டைகள் மற்றும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள்மூலம் உறுதியாகிறது. எனவே கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்களுக்கு ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் கூற இயல வில்லை. குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது,குறைவானதாகவும் அதே போன்று,மத்தியப் பகுதியில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல,ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையானது,படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இந்த நிலையில்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''பேலியோடிக்டின்'' என்ற கடல் உயிரியின் புதை படிவங்கள் இருப்பதை ஆல்வின் என்ற நீர் மூழ்கிக் கலன் மூலம் சென்ற ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம் ,கடந்த ஐந்து கோடி ஆண்டு காலமாகவே,அந்த எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிறெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து இருக்க வில்லை என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும்,மலைத் தொடரின் உச்சிப் பகுதியாகவும்,கடல் மட்டத்துக்கு மேலாக எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் தீவுகளாகவும் இருக்கும்,புனித பீட்டர் பாறைத தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட,பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது,அந்தப் பாறைகளின் தொன்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பூமியில் இது வரை கண்டு பிடிக்கப் பட்ட பாறைகளில் அதிக தொன்மையான பறையின் மதிப்பானது நானூற்றி நாற்பது கோடி ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில்,பூமியானது நானூற்றி ஐம்பது முதல் நானூற்றி அறுபது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாகக் கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் மலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம்,பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கடல் தளமானது நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. பேலியா நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது. இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார். அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது. ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது. இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர். அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது. ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது. பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார். அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார். டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார். ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார். ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும். தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன. ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த நிலையில், நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதன் மூலம்,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கு வடகிழக்கே, செட்லாண்ட் தீவுக்கு அருகில் ,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலப் பகுதி மூழ்கிக் கிடப்பதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அந்தக் கடலடி நிலத்தில் இருந்து படிவங்களைச் சேகரித்து ஆய்வு செய்ததில் ,அந்தப் படிவுகளில்,நிலக் கரி உள்பட,பூக்களின் மகரந்தத் துகள்கள் இருப்பதும், அதன் அடிப்படையில்,அந்த நிலப் பகுதியானது ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதும், அதன் பிறகு கடலால் மூழ்கடிக்கப் பட்டு இருப்பதும், தெரிய வந்திருப்பதாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கூட,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும்,கெர்கூலியன் பீட பூமி என்று அழைக்கப் படும்,ஒரு கடலடி பீட பூமியின் தொன்மையை அறிவதற்காகப் பிரிட்டிஷ் நாட்டின் புவியியல் வல்லுனர்கள்,அந்தக் கடலடி பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எரிமலைப் பாறைப் படிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்தப் பாறைப் படிவுகளானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்தப் பாறைப் படிவுகளில்,மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்தது. இந்த ஆதாரங்கள் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும். எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும். எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது. கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது. பசிபிக் பெருங் கடலில் ,நாலாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைக்கும் டார்வின் குயாட் என்று அழைக்கப் படும் ஒரு கடலடி சமதள மலையின் மேல் ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,முன் ஒரு காலத்தில் பசிபிக் கடல் மட்டமானது நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. குள்ள வகை நீர் யானைகள் மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது யற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு கடல் மட்டமானது டைனோசர்கள் காலத்தில் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் போமியின் வெப்ப நிலையம் அதிகமாக இருந்திருக்கிறது,அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்தால் பூமியின் வெப்ப நிலையும் குறைந்து இருப்பதுடன் அதன் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து பறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரே சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. பூமிக்கு அடியில் பெரும் பகுதியாக பாறைக் குழம்பு இருப்பதுடன்,பூமியானது தொடர்ந்து குளிர்ந்து கொண்டு இருப்பதால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து நீரும் தொடர்ந்து பிரிந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலந்து கொண்டு இருப்பதும் தொடரும்.எனவே கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து நிலப் பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும்.இதனால் தவற மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கை முற்றிலுமாக அழியும். கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன. பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருக்கின்றன. விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.