தூசித் தட்டுக் கொள்கைக்கு முரணாக இருக்கும் வேற்றுக் கிரகங்கள்.



புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுற்றுப் பாதைகளானது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்தே நமது சூரிய மண்டலம் போன்று விண்வெளியில் வேற்று கிரகங்கள் இருக்கக் கூடும் என்று நம்பப் பட்டு தேடப் பட்டது.

அத்துடன்,கிரகங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு விடை காண,விஞ்ஞானிகள் விண்வெளியில் தேடிய பொழுது,பல நட்சத்திரங்களைச் சுற்றி பெரும் அளவில் தூசியும் வாயுக்களும் சுழன்று கொண்டு இருப்பதைக் கண்டனர்.

அதன் அடிப்படையில்,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்கள் சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.

இந்தக் கருத்தின் படி,சூரியனுக்கு அருகில் இருக்கும் தூசிகளும் வாயுக்களும் ஆவியாகி விடும் என்பதால் கிரகங்கள் எல்லாம்,சூரியனில் இருந்து அதாவது மைய நட்சத்திரத்தில் இருந்து சற்று தொலைவிலேயே உருவாகும் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில், கடந்த 1992 ஆம் ஆண்டில், போலந்து நாட்டைச் சேர்ந்த அலக்ஸ் சாண்டர் வோல்சான் என்பவர்,ஒரு வேற்று கிரகத்தைக் கண்டு பிடித்தார்.

ஆனால் அவரின் கண்டு பிடிப்பை அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.

ஏனென்றால் வோல்சான் கண்டு பிடித்த கிரகமானது நமது சூரியனை விட பல மடங்கு வெப்பமான கதிர் வீச்சை வெளியிடக் கூடிய நட்சத்திரமாக இருந்தது.

அத்துடன் அந்தக் கிரகமானது,அந்த அதிவெப்ப நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாகவும் வலம் வந்து கொண்டு இருந்தது.

எனவே எப்படி ஒரு கிரகம் ஒரு அதிவெப்ப நட்சத்திரத்துக்கு மிக அருகில் உருவானது?முக்கியமாக எப்படி அந்த கிரகமானது அதிவெப்பச் சூழலில் ஆவியாகாமல், அந்த நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்தக் கேள்விக்கு,டாக்டர் மார்க் குச்னர் என்ற விஞ்ஞானி.அந்த அதிவெப்ப நட்சத்திரத்துக்கு அருகில் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது,பல கிலோ மீட்டர் ஆழத்துக்கு வைரப் படிகங்களால் ஆனா வைரக் கிரகங்களாக இருக்கும் என்று விளக்கம் கூறி இருந்தார்.

ஆனால் விண்வெளியில் வெற்றிடத்தில் எப்படி வைரம் உருவாக முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில்,விண்வெளியில் பல நட்சத்திரங்கள், அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களின் வாயு மண்டலத்தை, ஆவியாக்கிக் கொண்டு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.

அத்துடன்,பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள்,ஒரு எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில்,நிலாவை விடப் பெரிய அளவில் ஒரு வைரக் கோளப் படிகம் உருவாகி இருப்பதையும் கண்டு பிடித்தனர்.

இதன் அடிப்படையில் நான்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகின்றன என்பதைக் கண்டு பிடித்தேன்.

குறிப்பாக எரிந்து முடிந்த நிலையில் இருக்கும் நட்சத்திரங்களை அதி வெப்ப நட்சத்திரங்கள் கவர்ந்து இழுத்து அதன் வெளிப் பகுதி வாயு மண்டலத்தை ஆவியாக்கி விடும் பொழுது,எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையப் பகுதியில் உருவாகி இருந்த வைரக் கோளப் படிகங்களானது,வைரக் கிரகங்களாக அதி வெப்ப நட்சத்திரங்களை வலம் வருகின்றன என்று விளக்கம் கூறி இருந்தேன்.

அதன் அடிப்படையில்,நமது பூமி உள்பட,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் மற்றும் அந்தக் கிரகங்களை வலம் வந்து கொண்டு இருக்கும் துணைக் கிரகங்கள் எல்லாம் எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் மையத்தில் உருவான பிறகு,சூரியனின் ஈர்ப்பு விசையால் கவர்ந்து இழுக்கப் பட்ட பொழுது,அதன் வெளிப் பகுதியில் இருந்த வாயுக்களானது விண்வெளியில் விசிறியடிக்கப் பட்ட பிறகு தற்பொழுது கிரகங்களாகவும் துணைக் கிரகங்களாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன, என்று தெரிவித்து இருந்தேன்.

இந்த நிலையில்,புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட வேற்று கிரகங்கள் எல்லாம்,ஆராய்ச்சியாளர்களின் எதிர் பார்ப்புக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.
ஏனென்றால்,ஆராய்ச்சியாளர்கள் தூசித் தட்டுக் கருத்தை நம்புகின்றனர்.

குறிப்பாக அந்தக் கருத்தின் படி,விண்வெளியில் இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,சுருங்கித் தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த தூசிகளும் வாயுக்களும் காலப் போக்கில் ஆங்காங்கே திரண்டு கிரகங்களாக உருவாகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதன் படி,சூரியன் அதாவது மைய நட்சத்திரமானது சுழன்று கொண்டு இருக்கும் அட்சிற்கு இணையாக, கிரகங்கள் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுடன் அதே திசையில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாகப் பல வேற்று கிரகங்கள் இருக்கின்றன.

அந்த வேற்று கிரகங்களின் சுழற்சிக்கு உரிய விளக்கத்தைக் கூற இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

உதாரணமாக,நமது சூரிய மண்டலத்திலேயே,வெள்ளி கிரகமானது,சூரியன் சுற்றிக் கொண்டு இருக்கும் திசைக்கு எதிர் திசையில் சுழன்று கொண்டு இருக்கிறது.

அதாவது வெள்ளி கிரகமானது,பூமி உள்பட மற்ற கிரகங்களைப் போல் அல்லாது,கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி சுழன்று கொண்டு இருக்கிறது.

இவ்வாறு வெள்ளி கிரகமானது,சூரியனின் சுழற்சி திசைக்கு எதிர் திசையில் சுழன்று கொண்டு இருப்பதற்கு,முன் ஒரு காலத்தில் வெள்ளி கிரகத்தின் மேல் ஒரு கிரகம் மோதியதே காரணம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் எனது கருத்தின் படி, வெள்ளிக் கிரகமானது சூரியனால் ஈர்க்கப் பட்ட ஒரு கிரகம்,எனவே வெள்ளிக் கிரகமானது எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுழன்று கொண்டு இருக்கலாம்.

உதாரணமாகக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை ஒரு கயிற்றின் உதவியுடன் மேலே இழுக்கும் பொழுது,அவன் வலப் புறமாகவோ அல்லது இடப் புறமாகவோ சுற்றியபடி மேலே வரலாம்.

அதே போன்று,சூரியனால் ஈர்க்கப் பட்ட கிரகமும்,எந்தத் திசையில் வேண்டுமானாலும் சுற்றியபடி சூரியனைத் தொடரலாம்.

குறிப்பாகத் தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரிய மண்டலக் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாமே,ஒரே அமைப்பாக உருவாகி,ஆரம்பத்தில் இருந்தே சூரியனுடன் இருப்பதாக நம்பப் படுவதால் சூரிய மண்டலத்தை சூரியக் குடும்பம் என்றம், சூரிய அமைப்பு என்றம் அழைக்கப் படுகிறது.

ஆனால் எனது கருத்தின் படி, சூரிய மண்டலக் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் எல்லாமே,அவ்வப் பொழுது,சூரியனால் ஈர்க்கப் பட்டதால் சூரியனுடன் சேர்ந்து கொண்டது.எனவே எனது கருத்தை ,இணைக்கப் பட்ட அல்லது திரட்டப் பட்ட, கிரக மண்டலம் என்று அழைக்கலாம்.

குறிப்பாக சூரியனின் பயணத்தின் பொழுது,சூரியனுக்கு அருகில் வந்ததால் சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள்,எனவே எல்லாக் கிரகங்களும் சூரியனின் சுழல் திசைக்கு இணையாக சுழல வேண்டும்,வலம் வர வேண்டும், என்ற அவசியம் இல்லை.

அதே போன்று,தூசித் தட்டுக் கருத்தின் படி,சூரியனின் மையப் பகுதிக்கு இணையான தளத்திலேயே,எல்லாக் கிரகங்களும் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எதிர் பார்த்தனர்.

ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாக,சூரியனால் வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்கள் ஒவ்வொன்றும்,சூரியனின் மையப் பகுதியில் இருந்து,வெவ்வேறு கோணத்தில் ,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

உதாரணமாக சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கிரகமானது,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து,ஏழு டிகிரி சாய்வான தளத்தில் இருந்தபடி, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

அதே போன்று,சூரியனுக்கு தொலைவில் இருக்கும் புளூட்டோவானது, சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து,பதினேழு டிகிரி சாய்வான தளத்தில் இருந்தபடி, சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு சூரிய மண்டலக் கிரகங்களானது,சூரியனைச் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு, சூரிய மண்டலத்தின் வெளிப் பகுதியில் இருந்தபடி,சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும்,பூமியை விடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசையே காரணம் என்று,ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனாலும் இன்று அந்தக் கிரகமானது கண்டுபிடிக்கப் படவில்லை.

இந்த நிலையில்,புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களின் சுழற்சியும்,சுற்றுப் பாதையும் கூட,ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உதாரணமாகக் கடந்த 1995 ஆம் ஆண்டு,முதன் முதலாக நமது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருந்த வேற்று கிரகத்தைத் தொலை நோக்கியில் பார்த்ததும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால்,51 –b பெகாசிஸ் என்று பெயர் சூட்டப் பட்ட அந்த கிரகமானது,அதன் நட்சத்திரத்தை மிக நெருக்கமாக அதாவது,சூரியனை புதன் கிரகம் வலம் வந்து கொண்டு இருக்கும் தொலைவைக் காட்டிலும்,எட்டு மடங்கு குறைவான தொலைவில்,அதன் நட்சத்திரத்தை,நான்கு நாட்களுக்கு ஒரு முறை என தலை தெறிக்கும் வேகத்தில் வலம் வந்து கொண்டு இருந்தது.

குறிப்பாக அந்தக் கிரகமானது நமது சூரிய மண்டலத்தில் இருக்கும் வியாழன் போன்ற கிரகத்தின் அளவுடனும்,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் இருந்ததால் அதிக வெப்பத்துடனும் இருந்தது.

எனவே அந்தக் கிரகமானது வெப்ப வியாழன் என்று அழைக்கப் பட்டது.

பின்னர் இதே போன்று பல நட்சத்திரங்களை வெப்ப வியாழன்கள் வலம் வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

தூசித் தட்டுக் கருத்தின் படி,அந்த அளவுக்கு, ஒரு நட்சத்திரத்திற்கு அருகில்,தூசிகள் மற்றும் வாயுக்கள் இருக்கவோ அவைகள் திரண்டு ஒரு கிரகமாக உருவாகவோ சாத்தியமில்லை.

எனவே,வெப்ப வியாழன்கள் அதன் நட்சத்திரத்தில் இருந்து அதிக தொலைவில் உருவாகிய பிறகு,அதன் நட்சத்திரத்துக்கு அருகில் இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று கருதப் பட்டது.

இந்தக் கருத்தானது இடப் பெயர்ச்சி கொள்கை (migration theory ) என்றும் அழைக்கப் படுகிறது.

ஏன் இவ்வாறு கிரகங்கள் இடம் பெயர வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் வண்ணம்,ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி இருந்த தூசிகள் மற்றும் வாயுக்கள் சுழன்று கிரகமான உருவான பொழுது,அந்தத் தூசித் தட்டின் சுழற்சி வேகத்தில்,சுருங்கிய பொழுது, வெப்ப வியாழன்களானது,அதன் நட்சத்திரத்தை நோக்கி இடம் பெயர்ந்தது என்று,நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி,வெப்ப வியாழன்களானது,மைய நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு இணையாக,அதன் நட்சத்திரங்களை வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும்.

இந்த நிலையில்,பூமியில் இருந்து 568 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்று பத்து மடங்கு எடையுள்ள ஒரு பெரிய கிரகமானது,மூன்றரை நாளுக்கு ஒரு முறை,சுற்றி வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

xo-3 b என்று பெயர் சூட்டப் பட்ட, அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 37 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை வெப்ப வியாழன்களின் இடப் பெயர்ச்சி கருத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் விளக்கம் தெரிவிக்க இயலவில்லை.

இதே போன்று, பூமியில் இருந்து ஆயிரம் ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை,வியாழன் கிரகத்தைப் போன்று ஒன்றரை மடங்கு எடையுள்ள ஒரு பெரிய கிரகமானது,இரண்டு நாளுக்கு ஒரு முறை, வலம் வந்து வந்து கொண்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

HAT-P-7, என்று பெயர் சூட்டப் பட்ட, அந்தக் கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 180 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருக்கிறது.

இன்னொரு ஆய்வில்,இதே கிரகமானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு, 86 டிகிரி கோணத்தில்,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது, HAT-P-7, கிரகமானது,தூசித் தட்டுக் கருத்திற்கு முற்றிலும் முரணாக, அதன் நட்சத்திரத்தின், துருவத்திற்கு இணையாக,அதன் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு வேற்று கிரகங்களானது அதன் நட்சத்திரங்களை வெவ்வேறு கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,அந்தக் கிரகங்களை வேறு ஒரு கிரகமானது மோதித் தள்ளி முரணான சுற்றுப் பாதைக்குத் தள்ளி இருக்கலாம் என்று கருதப் பட்டது.

இந்த நிலையில் பல வேற்று கிரகங்களானது அதன் நட்சத்திரங்களை,அந்த நட்சத்திரங்களின் சுழல் அச்சுக்கு முரணான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்திருப்பது ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.


இதுநாள் வரை நமது சூரியமண்டலமானது பிரதான மாதிரியாகவும்,மற்ற வெற்றுக் கிரகக் குடும்பங்கள் எல்லாம்,அரிதான நிகழ்வுகளாகவும் கருதப் பட்டது.

இந்தநிலையில் ,கண்டுபிடிக்கப் பட்ட வேற்று கிரகங்களில் பல வேற்றுக் கிரகங்களானது,அதன் நட்சத்திரத்தின் சுழல் அச்சுக்கு முரணான கோணத்தில் வலம் வந்து கொண்டு இருப்பது தெரிய வந்து இருக்கிறது.

எனவே ,தற்பொழுது மற்ற வேற்று கிரகங்களானது பொதுவான அமைப்பாகவும், நமது சூரியக் குடும்பமானது, வித்தியாசமான அமைப்பாகவும் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

A research team led by astronomers from the University of Tokyo and the National Astronomical Observatory of Japan (NAOJ) has discovered that inclined orbits may be typical rather than rare for exoplanetary systems.

http://astronomy.com/~/link.aspx?_id=ac94da25-993c-47f2-85cd-05a496696e99

“We had thought our solar system was typical in the universe, but from day one everything has looked weird in the extrasolar planetary systems. That makes us the oddball really. Learning about these other systems provides a context for how special our system is. We certainly seem to live in a special place.”

– Frederic A. Rasio

http://www.universetoday.com/85585/the-flip-side-of-exoplanet-orbits/

ஆனால் எனது ஈர்க்கப் பட்ட கிரகங்களின் கருத்தின் படி,மைய நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமாக வியாழன் போன்ற கிரகங்கள் வலம் வந்து கொண்டு இருப்பததும்,அதே போன்று,மைய நட்சத்திரத்தின் சுழல் அச்சில் இருந்து,வேறு கோணத்தில் வெப்ப வியாழன்கள் வலம் வந்து கொண்டு இருப்பதும்,நிகழக் கூடிய ஒன்றே.

ஏனென்றால் எனது கருத்தின் படி, சூரிய மண்டலத்தின் கிரகங்கள் எல்லாமே சூரியனால் ஈர்க்கப் பட்டவைகளே.

அதாவது சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் வழியில்,அக்கம் பக்கமாகச் சென்று கொண்டு இருந்த எரிந்து முடிந்த நிலையில் இருந்த நட்சத்திரங்களையே சூரியன் ஈர்த்து இருக்கிறது.

எனவே எந்தத் திசையில் இருந்தும் கிரகங்களானது ஈர்க்கப் பட சாத்தியம் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.