5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் 30ºC வெப்பம் நிலவியிருந்திருக்கிறது.

arcticalligators7.jpgarcticalligators7.jpg
http://www.popsci.com/environment/article/2009-05/crocodile-reptiles-lived-arctic-55-million-years-ago-could-it-happen-again-0
arcticalligators.pngarcticalligators.png
http://www.sciencedaily.com/releases/2010/08/100824132417.htm
ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் 30 சென்டி கிரேட் வெப்ப நிலை நிலவியிருந்திருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் பனித் தீவான எல்லிஸ்மெர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

arcticalligators6.jpgarcticalligators6.jpg
https://ec.gc.ca/glaces-ice/default.asp?lang=En&n=0D65637D-1
 arcticalligators4.pngarcticalligators4.png
http://en.wikipedia.org/wiki/Ellesmere_Island
 arcticalligators2.pngarcticalligators2.png
http://en.wikipedia.org/wiki/Alligator
alligators.pngalligators.png
http://en.wikipedia.org/wiki/American_alligator

முதலைகளின் முட்டைகள் பொரிய 30 முதல் 34 சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

தபொழுது எல்லிஸ்மெர் தீவில்,ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் உறை பனி வெப்ப நிலைக்கும் குறைந்த வெப்ப நிலை நிலவுகிறது. ஜூலை மாதம் மட்டுமே மூன்று டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை நிலவுகிறது.

http://en.wikipedia.org/wiki/Alert,_Nunavut

இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் முதலைகள் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினங்கள் உயிர் வாழ்ந்திருக்க இயலாது.

இதே தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாம்புகளின் புதைபடிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை நிலவி இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

அது மட்டுமின்றி பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் வட துருவப் பகுதியில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும் அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் முப்பது டிகிரி வரை இறங்குகிறது.

இது போன்ற குறைந்த வெப்ப நிலையில் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த முதலைகளால் உயிர் வாழ்ந்திருக்க இயலாது.

எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்க வில்லை என்பதும் ஆர்க்டிக் பகுதித் தீவான எல்லிஸ்மெர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட முதலைகளின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
arcticalligators8.jpgarcticalligators8.jpg
http://www.paleoportal.org/index.php?globalnav=time_space&sectionnav=period&period_id=8
பொதுவாக இது போன்று குளிர் பிரதேசத்தில், வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்ந்த காலத்தில்,அந்தப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட நிலப் பகுதிகளானது,வெப்ப மண்டலப் பிரதேசத்தில் இருந்ததாகவும், பின்னர் குளிர் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் தீவானது, கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

புவியியலாளர்களைப் பொறுத்த மட்டில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைப் போலவே எப்பொழுதும் இருந்திருக்கிறது என்று நம்புகின்றனர்.

அதனால் தரை வாழ் விலங்கினங்களின் புதை படிவங்கள், கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் காணப் படுவதற்கு ,முன் ஒரு காலத்தில் அந்த நிலப் பகுதிகள் எல்லாம் ஒன்றாக இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.

இது போன்ற கருத்துக்களின் அடிப்படையில், ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் எல்லிஸ்மெர் போன்ற தீவுகளில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான முதலைகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக ஆர்க்டிக் பகுதியில் முதலைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது, நமது பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.

பூமியின் வெப்ப நிலை  ஏன் குறைந்தது ?

உண்மையில் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் தீவுகளிலும் கண்டங்களிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.

இதற்கு ஆதாரமாக நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

டைனோசர்கள் காலத்தில் கடல்மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.அதன் வழியாகவே டைனோசர்கள் அன்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன.


கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால் பூமியின் வெப்ப நிலைஅதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளிலும் டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன.
arcticalligators9.jpgarcticalligators9.jpg
http://bourabai.ru/cenozoic2.htm
arcticalligators10.pngarcticalligators10.png
http://www.gmanetwork.com/news/story/352530/scitech/science/miniature-t-rex-was-king-of-the-arctic

குறிப்பாக ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கும் இன்று வரை புவியியலாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.

ஏனென்றால் டைனோசர்களும் முதலைகளைப் போலவே முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யும் ஊர்வன வகை விலங்கினமாகும்.

கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்குள் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கும் நீரால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

கடல்மட்டம் உயர்ந்து கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்பநிலை குறைந்ததால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.