துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவது ஏன் ? விளக்கம்.

ala10.jpegala10.jpeg

http://phenomena.nationalgeographic.com/2013/05/06/dinosaurs-in-the-dark/
ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்கள்,முட்டைகளை இடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன.ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொறிவதற்கு முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் கடுங் குளிர் நிலவும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின் , வட பகுதியில் உள்ள,அலாஸ்காவின் கொல் வில்லி ஆற்றுப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை மைனஸ் இருபது டிகிரி.எனவே நிச்சயம் உறை பனி வெப்ப நிலையில் டைனோசர்களின் முட்டைகள் பொறிந்து இருக்க சாத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.அதே போன்று யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டதிற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு,பூமத்திய ரேகைப் பகுதியில் காணப் படுவதைப் போன்ற அடர்ந்த காடுகளும்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் இருந்திருப்பதும்,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

அத்துடன்,பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் ,தொடர்ந்து பகலும்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி,தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே,பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருப்பதும் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டதற்குப் பூமிக்கு அருகில் சென்ற குறுங் கோளின் ஈர்ப்பு விசை பாதிப்பு காரணமாக இருந்திருக்கலாம்.

ala5.jpgala5.jpg

http://www.blm.gov/pgdata/etc/medialib/blm/ak/aktest/culture_res/culture_pdfs.Par.48740.File.dat/alaska_dinosaurs.pdf
ala.jpgala.jpg

http://www.climatesource.com/ak/fact_sheets/fact_tmin_ak.html
ala1.jpgala1.jpg
http://www.pbs.org/wgbh/nova/nature/arctic-dinosaurs.html

http://www.kpbs.org/news/2010/dec/09/nova-arctic-dinosaurs/
ala2.jpgala2.jpghttp://www.uct.ac.za/dailynews/?id=8085
ala3.jpgala3.jpghttp://www.smithsonianmag.com/science-nature/how-did-the-siberian-dinosaurs-die-37091068/?no-ist
ala4.pngala4.png
http://www.smithsonianmag.com/science-nature/how-did-the-siberian-dinosaurs-die-37091068/?no-istதற்பொழுது துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு விலங்கியல் வல்லுனர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.காரிபு என்று அழைக்கப் படும் பனி மான்களைப் போன்று டைனோசர்களும்,குளிர் கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்குமோ என்று கருதப் பட்டாலும் கூட ,மிகவும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள் துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,அந்தக் கருத்து நிராகரிக்கப் பட்டுள்ளது.

அதே போன்று பனிக் கரடிகளைப் போன்று  டைனோசர்களும் ஒரு வேளை குளிர் கால உறக்கத்தில் ஆழ்ந்திருக்குமா என்ற கருத்தும் விலங்கியல் வல்லுனர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது.
ala6.jpgala6.jpg
http://scopeweb.mit.edu/articles/giant-dinosaur-migrator-dethroned/
http://www.australiangeographic.com.au/news/2011/09/dinosaurs-didnt-hibernate,-says-study
ala7.jpgala7.jpghttp://www.dnaindia.com/scitech/report-dinosaurs-did-not-hibernate-to-survive-through-frigid-antarctic-winters-1574369
ala8.jpgala8.jpghttp://www.mantleplumes.org/Cartoons.html

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.