நியூஸ் ஸ்டோரி - அவுட் லைன்

எனது கண்டு பிடிப்பு பொது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவில் எளிய முறையில் கதை சொல்லும் பாணியில் முழு விபரங்களைத் தெரிவித்து இருக்கிறேன்.

புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் சுனாமி உருவானது.புதிய ஆதாரங்கள் மூலம் தெரிய வந்த உண்மை.

பத்தாவது சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக நான் சுனாமி குறித்து மேற்கொண்ட ஆய்வில் எனக்குத் தெரிய தெரிய வந்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எனது ஆய்வு பற்றி ...

தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தரையுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் ,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு திடீரென்று செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இணைய தளத்தில் வெளியாகி இருந்த செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்ததில் புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆய்வில் எனக்கு எப்படி ஈடு பாடு வந்தது?

ஒரு நாள் நான் நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை அசிரத்தையாகப் புரட்டிக் கொண்டு இருந்தேன்.அப்பொழுது அதில் வெளியாகி இருந்த ஒரு படம் ஏன் கவனத்தைக் கவர்ந்தது.

அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்று கொண்டு கையில் மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.

குறிப்பாக அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் 220 அடி ஆழத்தில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

அத்துடன் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததாகவும் பின்னர் கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

அப்படியென்றால் கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்ததே காரணம் என்று எனக்குத் தோன்றியது.

ஆனால் கண்டங்கள் எல்லாம் பக்க வட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுவது குறித்து எனக்குச் சந்தேகம் எழுந்தது.
''உடனே புதை படிவங்கள் குறித்த தகவல்களை இணைய தளத்தில் தேடினேன்.

அப்பொழுது கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஐம்பது மாகாணதிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதே போன்று மற்ற கண்டங்களிலும் கூட மத்தியப் பகுதிகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

எனவே கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்திருக்கிறது.அதன் பிறகு கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்திருப்பது தெரிந்தது.

அப்படி என்றால் ஏன் கண்டங்கள் எல்லாம் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுகிறார்கள்? என்று தெரிந்து கொள்வதற்காக இணைய தளம் மூலமாகத் தேடினேன்.


அந்தத் தேடலில் தெரிய வந்ததை இங்கு பகிர்கிறேன்.

நகரும் கண்டங்கள் கருத்தின் தோற்றம் 

ஐரோப்பாவில் இருந்து வட அமெரிக்காவைக் கண்டு பிடித்துக் குடியேறிய ஐரோப்பியர்கள் ,வட அமெரிக்காவில் ஏற்கனவே ஐரோப்பாவில் கண்ட காட்டெருமைகள்,முயல்கள் மான்கள் போன்ற விலங்கினங்கள் இருப்பதை கண்டு ,எப்படி இந்த விலங்கினங்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஐரோப்பாவில் இருந்து வட அமெரிக்காவுக்கு வந்திருக்கும் என்று வியப்படைந்தார்கள்.

அந்தப் புதிரை விளக்குவதற்காக, ஒரு காலத்தில் வட அமெரிக்கக் கண்டதையும்,ஐரோப்பாக் கண்டதையும் இணைக்கும் வண்ணம் அட்லாண்டிக் கடலுக்கு குறுக்கே தற்காலிகமாக ஒரு நிலப் பாலம் இருந்திருக்க வேண்டும் என்றும் ,அதன் வழியாக விலங்கினங்கள் இடம் பெயர்ந்த பிறகு அந்த நிலப் பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்றும் நம்பினார்கள்.

இது தொடர்பான ஒரு ஆய்வுக் கட்டுரையை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் படித்த பொழுது அவருக்கு அந்த விளக்கம் திருப்தியளிக்க வில்லை.

குறிப்பாகத்  தென் அமெரிக்கக் கண்டத்தில் கிழக்கு கடற் கரையோரமும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கடற்கரையோரமும் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதற்கு, அந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருபாதே காரணம் என்று வெக்னர் நம்பினார்.

தான் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ,ஒரு முக்கியமான ஆதாரத்தைக் குறிப்பிட்டார்.

அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த, மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீளமுள்ள, முதலையைப் போன்ற, ஒரு ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் அட்லாண்டிக் கடலுக்கு மேற்குப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பத்தாது.பின்னர் அதே விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.

எனவே ஒரு காலத்தில் இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கம் கூறினார்.

ஆனால் அவரின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.மாறாக சுனாமி போன்ற நிகழ்வுகளின் பொழுது கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகளில் தொற்றிய படி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று நம்பினார்கள்.

இதே போன்று ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் சூயஸ் என்ற தாவரவியல் வல்லுநர், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் ஒரு தாவரத்தின் புதை படிவங்கள், தென் பகுதிக் கண்டங்களான தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் காணப் படுவதன் அடிப்படையில் ,முன் ஒரு காலத்தில் தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து கோண்டுவாணா என்ற பெருங் கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தக் கண்டத்தின் சில பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

ஆனால் வெக்னர் ஒத்த கால நிலையில் வாழக் கூடிய தவற மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்கும் வண்ணம் உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

அதன் அடிப்படையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு  எல்லாக் கண்டங்களுமே ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்ற ஒற்றைப் பெருங் கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பாஞ்சியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால் லாரேசியா என்ற வடபெருங் கண்டம் உருவாகி வட  பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதாகவும்,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும் விளக்கம் கூறினர்.

அதன் பிறகு வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா -ஆசியாக் கண்டங்கள் இணைந்த யூரேசியாக் கண்டங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர ஆரம்பித்ததால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் கூறினார்.

அதே போன்று தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால் தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா, ,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகக் கூறினார்.

இவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாக வெக்னர் விளக்கம் கூறினார்.அதே போன்று ஒரு கண்டத்துடன் அடுத்த கண்டம் மோதுவதால் இடைப் பட்ட நிலப் பகுதியானது புடைத்துக் கொண்டு உயர்வதால் மலைத் தொடர்கள் உருவாகுவதாகவும் வெக்னர் விளக்கம் தெரிவித்தார்.

அப்படியென்றால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது? என்று மற்றவர்கள் கேட்ட கேள்விக்கு வெக்னரால் உறுதியாக எந்த ஒரு விளக்கத்தையும் கூற இயலவில்லை.

பூமியின் சுழற்சி காரணமாக இருக்கலாம் என்றும் சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக இருக்கலாம் என்றும் வெக்னர் கூறினார்.

ஆனால் கடல் தரையில் கண்டங்கள் பிளந்து கொண்டு சென்றதற்கு தடயங்கள் எதுவும் காணப் படவில்லை.ஒரு வேளை  விலங்கினங்கள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம் தற்செயலாக மற்ற கண்டங்களுக்குப் பரவி இருக்கலாம் என்று மற்ற ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள்.

ஆனாலும் வேக்னரை எதிர்த்தவர்களால் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகின்றன ?  மலைத் தொடர்கள் எப்படி உருவாகுவாகின்றன என்ற கேள்விகளுக்கு சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.

இதற்கிடையில் கிரீன்லாந்து தீவில் கால நிலை பற்றிய ஆராய்ச்சிப் பயணத்தின் பொழுது வெக்னர் பனிப் புயலில் சிக்கி உயிரிழந்தார்.அதன் பிறகு வெக்னரின் கருத்துக்கள் வெகு காலமாக விமர்சனம் செய்யப் பட்டது.

இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ,லிஸ்ட்ரோ சாராஸ் என்று அழைக்கப் படும் ஒரு மூதாதைப் பாலூட்டி விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

அந்த விலங்கு ஒரு மந்தமான விலங்கு என்பதால் அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி இருக்கும் ஆக்ரோசமான கடல் பகுதியைக் கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிய படி அண்டார்க்டிக் கண்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை.

எனவே வெக்னரின் விளக்கத்த்தின் மேல் புவியியலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.அதன் பிறகு கண்டங்கள் நகர்வதற்கான சாத்தியங்கள் குறித்து புவியியலாளர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

பிளேட் டெக்டானிக் தியரியின் தோற்றம் .

இந்த நிலையில் ஆர்தர் ஹோம்ஸ் என்ற ஆங்கிலேயே புவியியல் வல்லுநர் ஒரு கருத்தை முன் மொழிந்தார்.அதாவது ஒரு தேநீர் பாத்திரத்தில் நீர் கொதிக்கும் பொழுது பாத்திரத்தின் அடிப் பகுதியில் இருந்து வெப்பமான நீர் மேற்பகுதிக்கு வந்த பிறகு மறுபடியும் பாத்திரத்துக்கு அடியில் செல்வதைப் போல,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருக்கும் கதிரியக்கத் தன்மை உடைய உலோகங்கள் சிதையும் பொழுது அதிக வெப்பம் உருவாகி அதனால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது உருகி வெப்பத்தால் விரிவடைந்து மேல் நோக்கி உயர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து கணம் அதிகரித்து மறுபடியும் பூமிக்கு அடியிலேயே செல்லாம் என்றும் இவ்வாறு பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது ஒரு சக்கரம் போன்று சுழன்று மேற்பகுதியில் இருக்கும் கண்டங்களை நகர்த்தலாம் என்றும் ஒரு கருத்தை முன் மொழிந்தார்.

ஆனால் இது குறித்து மேற் கொண்டு ஆராய்ச்சி செய்து ஆதாரங்கள் திரட்டப் பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்றில் பனி புரிந்த ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்,அந்தக் கப்பலில் இருந்த சோனார் என்று அழைக்கப் படும் கருவி மூலம் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்திய பிறகு அந்த ஒலி அலைகளானது கடல் தரையில் பட்டு திரும்பவும் மேற்பரப்புக்கு வரும் பொழுது ஏற்படும் நேர வித்தியாசத்தைப் பதிவு செய்வதன் மூலம் கடலடித் தரையில் உள்ள மேடு பள்ளங்கள் குறித்து அறிந்தார்.அப்பொழுது அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலடி மலைத் தொடர் இருப்பதை அறிந்தார்.

அத்துடன் அந்த மலைத் தொடரில் அடிக்கடி எரிமலை வெடிப்புகளும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவதையும் அறிந்தார்.போர் முடிந்த பிறகும் ஹெஸ் அதே கப்பலில் உலகம் முழுவதும் பயணம் செய்து ஆராய்ச்சி செய்தார்.

அப்பொழுது கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அந்த மலைத் தொடரானது பல கிளைகளாகப் பிரிந்து கண்டங்களைச் சுற்றி ஒரு மலைப் பாம்பு போன்று நீண்டு இருப்பதை அறிந்தார்.

அப்பொழுது ஹெஸ்சுக்கு ,ஆர்தர் ஹோம்ஸ் முன்மொழிந்த கருத்த்தின் மேல் நம்பிக்கை ஏற்பட்டாது.அதன் அடிப்படையில் ஹாரி ஹெஸ் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்தார்.

அதாவது அந்தக் கடலடி மலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது வெப்பத்தால் உருகி மேல் நோக்கி உயர்ந்து மேற்பகுதிக்கு வந்த பிறகு ,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவாகுவதாகவும் அதனால் அந்தக் கடலடி மலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்வதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்கள் தனித் தனியான பாறைத் தட்டுகளாக நகரும் பொழுது பாறைத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சியும் ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு அழுத்திக் கொண்டு இருந்த பிறகு திடீரென்று விடுபட்டு நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதகவும் விளக்கம் கூறப் படுகிறது.

பிளேட் டெக்டானிக் தியரியால் தீர்க்க முடியாத பிரச்சினை.

இந்த விளக்கம் பிளேட் டெக்டானிக் என்று அழைக்கப் படுகிறது.தற்பொழுது பெரும்பாலான புவியியல் வல்லுனர்கள் இந்தக் கொள்கையைகொள்கையையே கருத்தையே நம்புகின்றனர். ஆனாலும் இந்தக் கருத்த்தின் அடிப்படையில் கண்டத்தின் மத்தியப் பகுதியில் ஏன் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன என்ற கேள்விக்கு சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.

உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் மாட்ரிட் நகரில் 1811 ஆம் ஆண்டு இறுதியிலும் 1812 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கு இன்று வரை புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.

முக்கியமாக ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த காலத்தில் தென் பகுதிக் கண்டங்களான ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியத் துணைக் கண்டமும் ,மடகாஸ்கர் தீவும் தனித் தனித் தீவுகளாக நகர்ந்து கொண்டு இருந்ததாக நம்பப் படுகிறது.

ஆனால் இந்தக் காலத்தில் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய பாலூட்டி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக மடகாஸ்கர் தீவில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு அந்தத் தீவானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்துடன் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் பின்னர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இந்தியாவும் மடகாஸ்கர் தீவும் தனியாகப் பிரிந்து நகர்ந்ததாகவும், அதற்குப் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் தீவில் இருந்து இந்திய நிலப் பகுதியானது தனியாகப் பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்போகின்றனர்.

இதில் பிரச்சினை என்னவென்றால் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து விட்டாதாக நம்பப் படுகிறது.ஆனால் தற்பொழுது மடகாஸ்கர் தீவில் காணப் படும் லெமூர் குரங்கினமானது ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பது அந்தக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால் லெமூர்கள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு வந்தது? என்ற கேள்வி எழுந்தது.

இந்தப் புதிரை விளக்க ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு லெமூரின் மூதாதைகள் மடகாஸ்கர் தீவுக்கு வந்த பிறகு பல்கிப் பெருகி இருக்கலாம் என்றும் இந்த முறையில் பல லெமூர்கள் கூட்டமாக வந்திருக்கா விட்டாலும் குறைந்த பட்சம் ஒரே ஒரு கர்ப்பிணி லெமூராவது அரை மயக்க நிலையில் மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதே போன்றே மடகாஸ்கர் தீவில் காணப் படும் மற்ற விலங்கினங்களும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் மடகாஸ்கர் தீவில் மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.இதன் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மூன்று முறை வந்திருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது.

இதே போன்று மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் சிசிலி,கிரிட்டி மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது அந்தத் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சைப்ரஸ் தீவுக்கு நீர் யானைகள் எப்படி வந்தது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை.

குறிப்பாக மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் தீவுகளில் வாழ்ந்த குள்ள வகை நீர் யானையானது ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த ஹிப்போபோட்டமஸ் ஆண்டிக்குயாஸ் என்று அழைக்கப் படும் பெரிய அளவுள்ள நீர் யானையின் வழித் தோன்றல்கள் என்று நம்பப் படுகிறது.

அதாவது ஐரோப்பாவில் இருந்து சிசிலி,கிரிட்டி,மால்டா மற்றும் சைப்ரஸ் தீவுகளுக்கு கடலில் மிதந்து வந்த மரக் கிளைகளில் தொற்றிய படி தற்செயலாக வந்து சேர்ந்த பிறகு தீவில் குறைந்த அளவே உணவு கிடைத்ததால் காலப் போக்கில் குள்ள வகை நீர் யானை இனமாக உருவாகி விட்டது என்று நம்பப் படுகிறது.

இதில் மிகவும் குறிப்பிடத் தக்க வேண்டியது என்னவென்றால், மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து சென்றதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் சைப்ரஸ் முதலான தீவுகள் எந்தக் காலத்திலும் எந்தக் கண்டத்துடனும் இணைந்து இருந்திருக்க வில்லை என்பதால் எப்படி அந்தத் தீவுக்கு நீர் யானைகள் வந்தன? என்று விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை.

எதோ ஒரு தீவில் மட்டும் நீர் யானைகள் இருக்கும் பட்சத்தில் ஒரு வேளை தற்செயலாகக் கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு நீர் யானைகள் அந்தத் தீவுக்கு வந்த பிறகு இனப் பெருக்கம் செய்து இருக்கலாம் என்று நம்பலாம்.

ஆனால் நான்கு தீவுக்கும் அதே போன்று கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு நீர் யானைகள் தற்செயலாக வந்திருக்கலாம் என்பது அசாத்தியமானது.

இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மூன்று முறை நீர் யானைகள் வந்திருக்க வேண்டும் என்று விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர் 

இதுவும் ஒரு அசாத்தியமான விளக்கம்.


எப்படி என்றால் , மடகாஸ்கர் தீவில் எழுபதுக்கும் அதிக இனத்தைச் சேர்ந்த லெமூர் குரங்குகள் காணப் படுவதற்கு கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிய படி ஒன்றிரண்டு லெமூர்கள் வந்திருக்கா விட்டாலும் கூட குறைந்த பட்சம் ஒரே  ஒரு கர்ப்பிணி லெமூராவது அரை மயக்க நிலையில் மடகாஸ்கர் தீவில் ஒதுங்கிய பிறகு பல குட்டிகளை ஈன்று இருக்கலாம் என்றும் பின்னர் அந்த லெ மூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து பல்கிப் பெருகிய பிறகு,பரிணாம வளர்ச்சியில் புதிய லெமூர்கள் தோன்றி இருக்கலாம் என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் நீர் யானைகளானது  வழக்கமாக ஒரே ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது.அரிதாக இரண்டு குட்டிகளையும் நீர் யானைகள் ஈன்றிறுக்கின்றன.

ஆனால் அதன் அடிப்படையில் ஐரோப்பாவில் இருந்து சிசிலி,கிரிட்டி,மால்டா ,மற்றும் சைப்ரஸ் ஆகிய நான்கு தீவுகளுக்கும் நான்கு முறை கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு நீர் யானைகள் தற்செயலாக வந்து சேர்ந்த பிறகு நான்கு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈன்றிருக்கும் என்பதும் அதன் பிறகு இனப் பெருக்கம் செய்து நீர் யானை இனம் பெருகி இருக்கும் என்பது அசாத்தியமானது.

இதே போன்று மடகாஸ்கர் தீவுக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மூன்று முறை கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு நீர் யானைகள் தற்செயலாக வந்து சேர்ந்த பிறகு வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈன்றிருக்கும் என்பதும்  அசாத்தியமானது.அதன் பிறகு இனப் பெருக்கம் செய்து நீர் யானை இனம் பெருகி இருக்கும் என்பது அசாத்தியமானது.

குறிப்பாக மத்திய தரைக் கடல் பகுதியில் நான்கு முறையும் மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறையில் ஆக் மொத்தம் ஏழு முறையும் கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு நீர் யானைகள் தற்செயலாக வந்து சேர்ந்த பிறகு வழக்கத்துக்கு மாறாக ஏழு முறையும் இரண்டு குட்டிகளை ஈன்றிருக்கும் என்பதும்,அதன் பிறகு அந்தக் குட்டிகள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து நீர் யானை இனம் பெருகி இருக்கும் என்பது அசாத்தியமானது.

எனவே மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் நான்கு தீவுகளிலும் மடகாஸ்கர் தீவில் மூன்று இனஹ்த்டைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

முக்கியமாக குள்ள வகை நீர் யானை இனமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.அத்துடன் மடகாஸ்கர் தீவும் ஆப்பிரிக்கக் கண்டமும் நானூறு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. 

எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானையின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதும் அதன் பிறகு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதாரங்கள் மூலம் தெளிவாக நிரூபணமாகிறது.

எனவே டைனோசர் உள்பட மற்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் மற்ற கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததே காரணம்.

கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் தரை வழித் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் 

நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவாலாக வாழ்ந்து மடிந்த பிளேட்டியோசாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடி பீட பூமியின் தொன்மையை அறிவதற்காக துளையிட்டு சேகரிக்கப் பட்ட பாறைப்பகுதிகளானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருப்பது தெரியவந்தது.

அது மட்டுமல்லாது அந்தப் பாறைகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது  இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதுடன், அதன் வழியாகவே டைனோசர்களும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.  

புதிய ஆதாரங்கள் மூலம் தெரிய வந்த உண்மை.

இந்த நிலையிலேயே இணைய தளத்தில் வெளியான செயற்கைக் கோள் படங்களை நான் ஆய்வு செய்த பொழுது புவித் தரைக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்தது.

ஆதாரங்கள் 

 தரை மட்ட மாறுபாடுகளை நுட்பமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலமாகவும், பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வட அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாகாணத்தில் ‘மூன்று சகோதரிகள்’ என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.

அந்த எரிமலைப் பகுதியை எரிமலை இயல் வல்லுனர்கள், தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வந்தனர்.

குறிப்பாக அந்த எரிமலையின் மேல் செயற்கைக் கோள் பறந்து செல்லும் பொழுது செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டன.

அந்த ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த பொழுது, செயற்கைக் கோளில் இருந்த நுட்பமான கருவிகள் மூலம் தரையின் ஏற்றத் தாழ்வுகள் நீலம்,சிவப்பு,மஞ்சள் போன்ற வண்ணங்களாக பதிவு செய்யப் பட்டது.

இதே போன்று மறுபடியும் அதே எரிமலைப் பகுதியின் மேல் செயற்கைக் கோள் பறந்து சென்ற பொழுதும், ரேடியோ கதிர்கள் மூலம் தரையின் மேடுபள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.

இவ்வாறு ஒரு எரிமலைப் பகுதியின் மேல் வெவ்வேறு காலத்தில் பறந்து சென்ற செயற்கைக் கோள் மூலம் பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மேடு பள்ளப் பதிவுகளை, கணினி உதவியுடன் ஒரே படமாகத் தொகுக்கப் படும் பொழுது, இடைப் பட்ட காலத்தில் அந்த எரிமலைப் பகுதியில் ஏற்பட்ட சிறிய அளவிலான மாற்றம் கூட பதிவாகிறது.

உதாரணமாக இந்த முறையில் ஒரு வயல் வெளியை உழுதிருந்தால் கூட கண்டு பிடித்து விட முடியும்.

இதே முறையில் ஆரிகன் மாகாணத்தில் உள்ள எரிமலைப் பகுதியின் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்து பார்த்த பொழுது அந்தப் பகுதியில் அறுநூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரையானது பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.

‘ஆரிகன் புடைப்பு’ என்று அழைக்கப் பட்ட அந்தப் பகுதிக்கு எரிமலை இயல் வல்லுனர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அப்பகுதியில் பூமிக்கு அடியில் ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு இருந்ததாகவும், அப்பகுதியில் பூமிக்கு அடியில் புதிதாக ஒரு எரிமலை உருவாகிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2004  ஆம் ஆண்டு ஒரே மாதத்தில் அந்த புடைத்த பகுதியின் மத்தியப் பகுதியில் மட்டும் முன்னூற்றி ஐம்பதுக்கும் அதிகமான முறை சிறிய அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எரிமலைகளைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்

மியாமி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், தரை மட்ட மாறுபாடுகளை ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யும் செயற்கைக் கோள் மூலம், ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை ஆய்வு செய்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது.

இவ்வாறு எரிமலையைச் சுற்றியுள்ள தரையில் வளைய வடிவில் மேடு பள்ளங்கள் உருவாகுவதற்கு, அந்த எரிமலையானது உயர்ந்து இறங்குவதே காரணமே என்று டாக்டர் ஜூலியட் பிக் தெரிவித்து இருக்கிறார்.

குறிப்பாக ஒரு எரிமலைக்கு அடியில் பாறைக் குழம்பு திரண்டு அந்த எரிமலை உயரும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் எரிமலையுடன் சில சென்டி மீட்டர் உயர்கிறது.

இதே போன்று அந்த எரிமலையில் இருந்து வாயுக்களும் நீராவியும் வெளியேறி எரிமலையின் உயரம் மறுபடியும் இறங்கும் பொழுது எரிமலையுடன் வட்ட வடிவில் உயர்ந்த தரைப் பகுதியானது, மறுபடியும் தாழ்வடையும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக வடுக்கள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

இந்த நிலையில் கடந்த 2009  ஆண்டு இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போலவே சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.

அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும் கதிர் வீச்சுத் தன்மை உடைய வாயு வெளிப் பட்டு இருந்ததை நில அதிர்ச்சி ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.

முக்கியமாக ரேடான் வாயுவானது எரிமலைகளில் இருந்து வெளிப்படும் வாயுவாகும்.

எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே இத்தாலி நாட்டில் லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று கடந்த 11.03.2011  அன்று ஜப்பானின் ஹோண்சு தீவுக்கு அருகில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி ஏற்பட்டது.

அப்பொழுது ஹோண்சு தீவில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.

அது மட்டுமல்லாது அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணாமாக உயர்ந்து இருந்ததும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இதற்கு அப்பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து கசிந்த கதிரியக்கத் தன்மை உடைய ரேடான் வாயு காரணமாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர்.

குறிப்பாக ரேடான் வாயுவின் கதிர் வீச்சின் காரணமாக காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலெக்ட்ரான்கள் வெளியேற்றப் பட்டதால் அந்த எலெக்ட்ரான்கள் திரண்டு எலெக்ட்ரான் மேகம் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருகிக்ன்றனர்.

மேலும் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு ஹோண்சு தீவின் வளி மண்டல மேலடுக்கின் வெப்ப நிலையானது மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.

எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று கடந்த 12.01.2010  அன்று ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்ததும் தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகியுள்ளது.

அது மட்டுமல்லாது அந்த நில அதிர்சிக்குப் பிறகு ஹைத்தி தீவின் கடற் கரையானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருந்தது.அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தது.

எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்து உயர்ந்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று கடந்த 26.12.2004 அன்று,இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சுனாமி உருவானது.

அந்த நில அதிர்சிக்குப் பிறகு சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.

அதனால் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் வெளியில் தெரிந்தன.

இந்த நிலையில் அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் 20.02.2008 அன்று கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்திருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.

எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே தெற்காசிய சுனாமி உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபனமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.