டைனோசர்களை அழித்த திடீர் கால நிலை மாற்றம்.



ktb3.jpgktb3.jpg


ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ நாட்டில் விழுந்த ஒரு விண் கல்லால் தான் டைனோசர்கள் அழிந்தன என்றும் இல்லை இல்லை ,லட்சக் கணக்கான ஆண்டுகளாக எரிமலைகள் சீரியதால்தான் டைனோசர்கள் அழிந்தன என்றும் புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் விவாதம் சூடு பிடித்துள்ள நிலையில் ,கடல் மட்ட உயர்வால் ஏற்பட்ட கால நிலை மாற்றமே டைனோசர்கள் அழியக் காரணம் என்பது நான் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ktb4.jpgktb4.jpg


விண் கல்லால் டைனோசர்கள் அழிந்தன!
பதினைந்து கோடி ஆண்டு காலமாக இந்தப் பூமியில் மற்ற விலங்கினங்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய டைனோசர் இனம் முற்றிலும் அழிந்தது ஏன் என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்தது.

இந்த நிலையில் இத்தாலி நாட்டில் புவியியல் ஆய்வை மேற்கொண்ட வால்டர் ஆல்வராஸ் என்ற புவியியல் வல்லுநர் ஒரு நாள் தன் தந்தையிடம் ஒரு படிவப் பாறைப் பகுதியைக் கொண்டு வந்து காட்டினர்.அந்தப் படிவப் பாறைக்கு இடையில் மெலிதாக சாம்பல் நிறப் பாறை அடுக்கு இருந்தது.அந்தப் பாறை அடுக்கானது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்றும் ஆனால் அந்தப் பாறை அடுக்கு  எப்படி உருவானது என்பது புதிராக இருப்பதாகவும் தந்தையிடம் கூறினார்.

அவரது தந்தை வேறு யாரு அல்ல,இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான டாக்டர் லூயிஸ் ஆல்வராஸ்.லூயிஸ் ஆல்வராஸ் அந்தப் பாறைப் பகுதியைத்  தந்து நண்பர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.அப்பொழுது அந்தப் படிவப் பாறைக்கு இடையில் இருந்து அடுக்கில் சாதாரணமாகப் பூமியில் இருப்பதைக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமாக இரிடியம் என்ற உலோகம் இருப்பது தெரிய வந்தது.

ktb5.jpgktb5.jpg

இரிடியம் உலோகமனது விண் கல்லில் அதிகமாக காணப் படுகிறது.

இந்த நிலையில் பூமியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப் பட்ட படிவப் பாறைகளிலும் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான படிவப் பாறைகளிலும் இரிடியம் உலோகத்தால் ஆன படிவம் இருப்பது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் அப்பாவும் மகனும் ஒரு விளக்கத்தை முன் வைத்தனர்.

அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஒரு விண் கல் விழுந்ததால் எழுந்த தூசி மற்றும் புகை மண்டலமானது.பல மாதம் அல்லது ஆண்டு சூரியனை மறைத்ததால் ஒளிச் சேர்க்கை செய்ய இயலாமல் தாவரங்கள் அழிந்ததாகவும் அதனால் விலங்கினங்கள் குறிப்பாக டைனோசர் இனமே அழிந்ததாகவும் விளக்கம் தெரிவித்தனர்.

ktb6.jpgktb6.jpg

ஆனால் டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்த தவளைகள் போன்ற நீர் நில வாழ் உயிரினங்களானது கால நிலை மாற்றத்தால் எளிதில் பாதிக்கப் படக் கூடியது.ஆனால் தவளை முதற் கொண்டு மற்ற நீர் நில வாழ் உயிரினங்கள் அழிய வில்லை.அதே போன்று முதலை,பாம்பு மற்றும் ஆமைகள் அழிய வில்லை.அதே போன்று பறவைகளும் பாலூட்டிகளும் ஏன் அழிய வில்லை போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விண் கல் தாக்கத்தால் விளக்கம் கூற இயலவில்லை.

gert10.pnggert10.png
gert11.pnggert11.png

இந்த விளக்கமானது 1980 ல் முன் மொழியப் பட்டாலும் ,1884 ஆம் ஆண்டுதான் மெக்சிகோ நாட்டுப் பகுதியில் நூறு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு பள்ளம் போன்ற பகுதி இருப்பது அடையாளம் காணப் பட்டது.சிக்சுலப் பள்ளம் எண்று அழைக்கப் படும் அந்தப் பள்ளமானது டைனோசர்களை அழித்த பள்ளம் என்று நம்பப் படுகிறது.

பெரும்பாலான புவியியல் வல்லுனர்கள் டைனோசர்களின் அழிவுக்கு விண் கல் மோதலே காரணம் என்று  நம்புகின்றனர்.

பல புவியியல் வல்லுனர்கள் ஆல்வராஸ் விளக்கத்தை ஏற்றுக் கொண்டாலும் சில புவியியல் வல்லுனர்கள் ஆல்வரசின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வில்லை.குறிப்பாக வர்ஜீனியா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியர் டாக்டர் மக் லீன்,எரிமலைகள் வழியாக பூமிக்குள் இருந்து வெளி வந்த அதிகப் படியான கார்பன் டை ஆக்சைட் வாயுக்களால் ஏற்பட்ட பாதிப்பால் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

இதே போன்று கலிபோர்னியா பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் டாக்டர் பால் ரெனி அவர்கள்,டைனோசர்களின் அழிவில் எரிமலையின் பங்கும் இருக்கலாம் என்று நம்புகிறார்.

கலப்புக் கொள்கை.அதே போன்று விண் கள் மோதலானது டைனோசர்களின் அழிவுக்குக் காரணமான கால நிலை மாற்றத்தைத் துவக்கி வைத்த துப்பாக்கி வெடிப்பு என்றும்,  எரிமலைச் செயல் பாடானது டைனோசர்களின் சரித்திரத்தை முடித்து வைத்த நிகழ்வு என்றும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனாலும் எரிமலைகளால் உலக அளவில் கால நிலை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுமா என்பதில் புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறு பாடு நிலவுகிறது.

எரிமலைச் சீற்றத்தால்தான் டைனோசர்கள் அழிந்தது.

ktb7.jpgktb7.jpg

இந்த நிலையில் தற்பொழுது பிரின்சிடன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் டாக்டர் கெர்ட்டா கெல்லர் தலைமையிலான குழுவினர்,மெக்சிகோ நாட்டிற்குச் சென்று விண் கல் விழுந்ததாகக் கருதப் படும் பகுதிக்குச் சென்று ஆய்வை மேற்கொண்டனர்.

குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வட கிழக்குப் பகுதியில் உள்ள எல் பெனான் பகுதியில் இருந்த படிவப் பாறைகளை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது அந்தப் படிவப் பாறைக்கு இடையில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவில் ,அதீத வெப்பத்தால் உருவாகக் கூடிய பாறைத் துணுக்கு மணிகள் இருப்பதைக் கண்டனர்.

இது போன்ற பாறைத் துணுக்கு மணிகளானது விண் கல் தாக்கத்தாலும் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து உள்ளனர்.அதே போன்று எரிமலைப் பாறைப் படிவிலும் பாறைத் துணுக்கு மணிகள் காணப் படுகின்றன.

இதே போன்று போன்று இரிடியம் உலோகப் படிவமும் கூட எரிமலைப் பாறைப் படிவுகளில் காணப் படுகிறது.

இந்த நிலையில் டாக்டர் கெர்ட்டா கெல்லர், எல் பெனான் பகுதியில் காணப் பட்ட பாறைகளில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுக்கு அடியில் உருவாகி இருந்த பாறைப்  படிவ அடுக்கில் காணப் பட்ட உயிரினங்களின் புதை படிவங்களை ஆய்வு செய்தார்.

gert3.jpggert3.jpg


அதில் ஐம்பத்தி இரண்டு வகையான உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.இதே போன்று பாறைத் துணுக்கு மணிகள் இருந்த அடுக்கிற்கு மேலே இருந்த பாறை  அடுக்கில் காணப் பட்ட உயிரினங்களின் புதை படிவங்களையும் ஆய்வு செய்ததில்,அதே ஐம்பத்தி இரண்டு இன வகையான உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

dinoex1.jpgdinoex1.jpg
இதன் அடிப்படையில் டாக்டர் கெர்ட்டா கெல்லர் ,விண் கல் மோதலானது பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்க வில்லை என்றும் அதனால் உயிரினங்கள் எதுவும் அழிந்திருக்க வில்லை என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி எல் பெனான் பகுதியில் காணப் பட்ட பாறைப் படிவில்  பாறைத் துணுக்கு மணிகள் இருந்த பாடிப் படிவ அடுக்கானது டைனோசர்கள் அழிந்த காலத்துக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

எனவே டைனோசர்களின் அழிவுக்கு விண் கல் தாக்குதல் காரணம் அல்ல என்ற முடிவுக்கு டாக்டர் கெல்லர் வந்தார்.

அத்துடன் இந்தியாவுக்கு வந்து தக்காணப் பீடபூமிப் பகுதியில் ,ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலைப் பாறைப் படிவுகளில்,பொராமினி பெரா என்று அழைக்கப் படும் ஒரு செல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை ஆய்வு செய்தார்.

அப்பொழுது முதலில் உருவான பாறைப் படிவத்தில் பல வகையான பொராமினி பெரா உயிரினங்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது.அதே போன்று அந்தப் பொராமினி பெரா இன வகைகளின் அளவும் பெரிதாக இருந்திருப்பதும் தெரிய வந்தது.

அதைத தொடர்ந்து  உருவான பாறைப் படிவுகளில் படிப்படியாக  பொராமினி பெரா இன வகைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதுடன் அதன் அளவும் சிறுத்து இருப்பதும் தெரிய வந்தது.

gert2.pnggert2.png


இதன் அடிப்படையில் தக்காணப் பீட பூமிப் பகுதியில்  லட்சக் கணக்கான ஆண்டு காலமாக எரிமலைச் செயல் பாடு நடை பெற்றதால் வளி மண்டலத்தில் வாயுக்கள் கலந்து சூரிய ஒளி மறைக்கப் பட்டதால் தாவரங்கள் அழிந்ததால் டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்று டாக்டர் கெர்ட்டா கெல்லர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வளி மண்டலத்தில் கலந்த கார்பன் டை ஆக்சைட் மற்றும் கந்தக வாயுக்களானது அமில மழை மூலம் கடலிலும் கலந்ததால் ,கடல் நீரானது மாசடைந்ததால் பொராமினி பெரா போன்ற நுண்ணுயிரிகளின் இன வகைகள் குறைந்ததுடன் அளவும் சிறிதாகியதாக டாக்டர் கெர்ட்டா கெல்லர் நம்புகிறார்.
ஆனாலும் எரிமலைகளால் உலக அளவில் கால நிலை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுமா என்பதில் புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறு பாடு நிலவுகிறது.

குறிப்பாக பாரீசில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவி இயற்பியல் வல்லுநர் வின்சென்ட் கோர்டிலாட் , எரிமலைகளில் இருந்து ஐம்பது முதல் நூறு மடங்கு அதிக அளவில் கார்பன் டை ஆக்சைட் மற்றும் கந்தக வாயுக்கள் வெளி வந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

அதாவது விண்கல் மோதல் நிகழ்வை க் காட்டிலும் பத்து மடங்கு அதிக வாயுக்கள் வெளிப் பட்டு இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் ப்ரெஸ்ஸல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் டாக்டர் பிலிப் க்லேயஸ் ,தக்காணப் பீட பூமிப் பகுதியில் நிகழ்ந்த எரிமலைச் செயல் பாட்டின் பொழுது வெளிப்பட்ட வாயுக்களானது டைனோசர் இனத்தை அளிக்கும் அளவுக்கு போதுமானதாக இருந்திருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில் டைனோசர்கள் அழிவு குறித்து புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறு பாடு நிலவுகிறது.

கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் பூமியின் வெப்ப நிலை குறைந்தால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் தாவரங்கள் மற்றும் டைனோசர்கள் அழிந்திருக்கின்றன.

டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கடலின் பரப்பளவும் தாழ்வாக இருந்ததால் பூமியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருக்கிறது.

அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும் பொழுது பிரியும் வாயுக்களும் நீராவியும் குளிர்ந்ததால் உருவான நீரானது சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலந்ததால் கடல் மட்டம் உயர்ந்தது.கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவும் அதிகரித்ததால் பூமியின் வளி மண்டலத்தில் குளிர்ச்சி ஏற்பட்டது.இவ்வாறு ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால் டைனோசர்கள் உண்ட தாவரங்கள் உள்பட டைனோசர்களும் அழிந்தது.

ஆதாரம்.நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்களை,புவியியல் வல்லுனர்கள் மற்றும் தொல் விலங்கியல் வல்லுநர்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ,கெர்கூலியன் என்று அழைக்கப் படும் ஒரு கடலடிப் பீட பூமியானது எப்பொழுது உருவானது என்று அறிவதற்காகப் பிரிட்டிஷ் நாட்டுப் புவியியல் வல்லுனர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
குறிப்பாக அவர்கள் கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளை எடுத்து அதன் தொண்மையை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகளானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்தது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பும் இருந்திருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபனாமாகிறது.

எனவே அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்துமே காரணம்.

ஆனால் தற்பொழுது டைனோசர்களின் புதை படிவங்களானது அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு கண்டங்கள் ஒன்றாக இருந்ததாகவும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.


mtr1mtr1

இந்த நிலையில் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததாலேயே விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் சென்று இருப்பது மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலமாகவும் தெரிய வந்துள்ளது.

உதாரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அத்துடன் அந்த குள்ள வகை நீர் யானைகளானது நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

குள்ள வகை நீர் யானையானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானையால் நீர்பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாத விலங்கு.ஆனால் மடகாஸ்கர் தீவும் ஆப்பிரிக்கக் கண்டமும் இரண்டு கிலோ இட்டார் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

முக்கியமாக மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்களின் அடிப்படையில் மடகாஸ்கர் தீவில் மூன்று வகையான குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

hippo3a.pnghippo3a.png
இதன் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து குள்ள வகை நீர் யானைகளானது தனித் தனியாக மூன்று  முறை கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மூலம் தற்செயலாக வந்து சேர்ந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இரண்டு வகையான குள்ள வகை நீர் யானைகள் இரண்டு முறை மரக் கிளைகள் மூலம் சாகசப் பயணம் மூலம் தற்செயலாக வந்து சேர்ந்து இருக்க இயலாது.

எனவே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டுகிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

mtr5mtr5

இதே போன்று மடகாஸ்கர் தீவில் சீமோ சூக்கஸ் என்று அழைக்கப் படும் ,மூன்று அடி நீளமுள்ள, எலும்புத் தகடுகளால் மூடப் பட்ட்டு இருக்கும், நீந்த இயலாத தாவர உண்ணி முதலையின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்த விலங்கு எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.

mtr6mtr6


இந்த நிலையில் அண்டார்க்டிக் கண்டத்தில் ஒன்றரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏரி இருந்திருப்பதும் ஆஸ்ட்ரோகாட் என்று அழைக்கப் படும் சிறிய ஒட்டுடலியின் புதை படிவம் மூலம் தெரிய வந்துள்ளதாகப் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தில் பனிச் சூழலில் வாழக் கூடிய பெங்குவின் பறவைகளானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு பொது மூததையில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று இருப்பதும் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக உயிரியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததாலேயே கடலின் பரப்பளவு அதிகரித்து இருப்பதும் அதன் காரணமாக வளி மண்டலத்தில் வெப்ப நிலை குறைந்து கால நிலை மாற்றம் ஏற்பட்டதால் துருவப் பகுதிகளில் பனிப்படலங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
.................................
இதே போன்று, 13,000 ஆண்டுகளுக்கு முன்பும், கடல் மட்ட உயர்வின் காரணமாக ஏற்பட்ட திடீர் கால நிலை மாற்றம் காராணமாக, மாஸ்டோடோண்ட் யானைகள் உள்பட ஸ்லோத் என்று அழைக்கப் படும் கரடி போன்ற விலங்கினங்களும் அழிந்திருப்பது ,தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அடுத்த பதிவில் தொடர்கிறது....

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.