கடல் மட்டம் உயர்ந்து ஏன்?விலங்கினங்கள் அழிந்தது ஏன் ?

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமி வெப்பமடைந்து வருவதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.


ஆசியக் கண்டத்தின் வடபகுதியில் உள்ள சைப்பீரியப் பகுதியில் ( ஆர்க்டிக் ) உள்ள நோவோசிபிர்ஸ்க் தீவுக் கூட்டத்தில் உள்ள  லியாக்கோவ்ஸ்கி தீவில் இருந்து,நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியின் புதைந்த கம்பள யானையின் உடலில் இருந்து இரத்தத்தை ரஷ்ய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ளனர்.
(முதலில் அந்த கம்பள யானை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என்று கருதப் பட்டது.பின்னர் மேற்கொண்ட ஆய்வில் அந்த யானை முப்பத்திஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என்பது தெரியவந்துள்ளது. ) 


இதே போன்று ஐரோப்பாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில், வட கடல் என்று அழைக்கப் படும் , கடலுக்கு அடியில் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் எலும்புகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.டாகர் லேண்ட் என்று அழைக்கப் படும் அந்த மூழ்கிய நிலப் பகுதியில் இருந்து யானையின் எலும்புகளும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  


( இதே கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டது. ) 




இதன் மூலம் கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஒரே காலத்தில்  நடை பெற்று இருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததாலேயே பூமியின் குளிர்ச்சி ஏற்பட்டு பனிப்படலங்கள் உருவாகி இருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பனி உருகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு.


உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளே காரணம்.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.