தூண் பாறைகள் எப்படி உருவாகின?


துருக்கியில் உள்ள காதல் பள்ளத் தாக்கு 


  
பஃபலோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ட்ரேசி கிரெக் என்ற புவியியல் வல்லுநர் ,1990 ஆம் ஆண்டு அவரின் கணவருடன் ஐஸ்லாந்து தீவிற்கு சுற்றுலா சென்ற பொழுது ,அங்கே தரைக்கு அடியில் இருந்து எட்டு அடி உயரத்திற்கு தூண் போன்ற பாறைகள் இருப்பதைக் கண்டதும் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை.

கையில் இருந்த கேமிராவில் பாட்டரி தீரும் வரை படமாக எடுத்துத் தள்ளினார்.

ஏனென்றால் இதற்கு முன்பு அவர் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்த பொழுது கடலுக்கு அடியில் இதே போன்ற பாறைகளைக் கண்டார்.

தூண் போன்ற வடிவில் இருக்கும் இவ்வகைப் பாறைகள்,கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு அழுத்தமுடன் மேல் நோக்கி உயரும் பொழுது, கடல் நீரால் உடனடியாகக் குளிர்விக்கப் படுவதால் உருவாகிறது. இது வரை தூண் பாறைகள் பூமியின் மேல் யாரும் கண்டதில்லை.
எனவே அந்தத் தூண் பாறைகளை ஐஸ்லாந்து தீவில் கண்டதும் டிரேசி படு உற்சாகத்துடன் அதைப் படமெடுத்தார்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு , அந்தத் தூண பாறைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய நிதிஉதவி கிடைத்ததும் டாக்டர் ட்ரேசி கிரெக் ஐஸ்லாந்து சென்று நான்கு நாட்கள் அந்த தூண் பாறைகளை ஆராய்ச்சி செய்தார்.

அப்பொழுது அந்தத் தூண் பாறைகள் உள்ளீடு அற்று இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்தத் தூண் பாறைகளின் மேற்பரப்பில் நீளவாக்கில் வடுக்களுடன் இருப்பதும் தெரிய வந்தது.

எனவே பூமிக்குள் இருந்து அழுத்தமுடன் அந்த பாறைக் குழம்பு மேல் நோக்கி உயர்ந்த பொழுது நீரால் குளிர்விக்கப் பட்டு உடனடியாகப் பாறையாக உருவாகி இருப்பது தெரிய வந்தது.

சொரசொரப்பாகவும் கண்ணாடி போன்ற நீட்சிகளுடனும் இருப்பதும் தெரிய வந்தது.அதன் அடிப்படையில் அந்தப் பாறைகள் உடனடியாக நீரால் குளிர்ந்து உருவாகி இருப்பதாக டிரேசி தெரிவிக்கிறார்.

ஆனால் ஒரு காலத்தில் அப்பகுதியில் ஆறு ஒன்று ஓடிக கொண்டு இருந்ததாகவும் ,அப்பொழுது அந்தப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பால் ஆந்த ஆற்றின் பாதை மறிக்கப் பட்டதால் அப்பகுதியில் ஒரு குளம் உருவாகிய பிறகு, அந்தக் குளத்திற்கு அடியில்பாறைக் குழம்பு வெளிவந்த பிறகு குளிர்ந்ததால், இந்தத் தூண் பாறைகள் உருவானதாக டாக்டர்.டிரேசி விளக்கம் கூறுகிறார்.


ஆனால் அதே ஐஸ்லாந்து தீவில் கடலுக்கு அடியில் உருவாகும் தலையணைப் பாறைகள் இருப்பதை ஹொக்கைடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கேன்சோ யாகி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார்.

இதே போன்று தலையணைப் பாறைகள் ஏற்கனவே மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் காணப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

அத்துடன் சைப்ரஸ் தீவில் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் காணப் படுவதன் அடிப்படையில் சைப்ரஸ் தீவானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே ஐஸ்லாந்து தீவில் காணப் படும் தூண் பாறைகள் மூலம் ஐஸ்லாந்து தீவானது ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் எரிமலையாக இருந்திருப்பதும் பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பதும் புலனாகிறது. 
இதே போன்று மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள அனடோலியா பீடபூமிப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படும் பள்ளத் தாக்குப் பகுதியில் பல எண்ணிக்கையில் தூண் போன்ற பாறைகள் காணப் படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் ஏற்பதற்காக ராட்சத பலூன்கள் மூலம் வானில் மிதந்து செல்லும் வசதியும் செய்து தரப் பட்டுள்ளது.

குறிப்பாகஇந்தப் பாறைகள் சிம்னிகள் என்று அழைக்கப் பட்டாலும் ஆண் குறி வடிவில் இருப்பதால் இந்தச் சுற்றுலாத் தளமானது காதல் பள்ளத் தாக்கு என்றும் அழைக்கப் படுகிறது.

இது போன்று எரிமலைப் பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது , பூமிக்கு அடியில் நடைபெறும் எரிமலைச் செயல் பாட்டைப் புலப் படுத்துகிறது.


 


( தூண் பாறைகளை ஆய்வு செய்யும் டாக்டர் டிரேசி )





( சைப்ரஸ் தீவில் உள்ள பாறை )

( சைப்ரஸ் தீவும் அனடோலியா பீட பூமியும் )

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.