கண்டத்தின் மத்தியில் ஏன் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன?

உண்மையில் பிளேட் டெக்டானிக் என்று அழைக்கப் படும் தியரியின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

ஏனென்றால் அந்தக் கருத்தின் படி கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, ஆஸ்திரேலியாக் கண்டமானது சுற்றிலும் கடல் தளத்தால் சூழப் பட்டு இருக்கிறது.

எனவே ஆஸ்திரேலியாக் கண்டத்தில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் கண்டத் தட்டின் மத்தியப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் ( intraplate quakes )  என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் கண்டத் தட்டு தியரியின் படி கண்டத் தட்டின் ஓரப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு மட்டுமே விளக்கம் அளிக்க முடியும். 
எனவே மத்திய அமெரிக்கா,மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு காரணம் கூற இயலாத நிலையில் புவியியல் வல்லுனர்கள் இருக்கிறார்கள்.என்று அமெரிக்க புவியியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெயின் தெரிவித்து இருக்கிறார்.

( The plate tectonics revolution of the 20th century elegantly explained why most earthquakes occur where they do – at Earth's plate boundaries. It didn't explain, however, the occurrence of intraplate quakes and the deformation processes that give rise to them. As a result, geologists studying areas like the central U.S., western Europe, and Australia, don't know what causes these quakes, how often they will happen in the future, and how dangerous they are.)http://www.geosociety.org/news/pr/07-50.htm

மேலும் நவீன நில அதிர்ச்சி இயலில் இது போன்று கண்டத்தின் மத்தியப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளானது ''தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் புரிந்து கொள்ள இயலாத வளர்ப்புக் குழந்தை'' போல் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.


எனது விளக்கம்.பூமிக்கு மேல் உள்ள எரிமலைகள் எல்லாம் பூமிக்குள் இருந்தே மேல் நோக்கி உயர்ந்து உருவாகி இருக்கின்றன.


இன்னும் பூமிக்குள் பல எரிமலைகள் உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையிலேயே இருக்கின்றன.

இவ்வாறு பூமிக்குள் இருக்கும் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.