நிஜமல்ல கதை... இது நிஜமல்ல கதை .




ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில்  நில் அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன.இதன் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டதைச் சுற்றியுள்ள கடல்தரைப் பகுதியும் ஒரு கண்டத் தட்டு என்று அழைக்கப் படுகிறது.ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல்தரை உருவாகியதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது.




அதாவது ஆப்பிரிக்கக் கண்டத்தைச்  சுற்றி தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படும் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறைகளாக உருவாகுவதாக விளக்கம் கூறப் படுகிறது.இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு வருவதாகவும், அவ்வாறு வரும் பொழுது  ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும்  விளக்கம் கூறப் படுகிறது.


Image courtesy-usgs.

இதே போன்று தொடர்ந்து நடை பெறுவதால் ஆப்பிரிக்கக் கண்டத்தைச்  சுற்றிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் ஒரு கண்டதைச்  சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் கடல் தளம் உருவாகி குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் குறைந்த சுற்றுவட்டப் பகுதியில்  புதிய கடல் தளம் உருவாகி அதிக சுற்றுவட்டப் பகுதியை நோக்கி நகர்ந்து அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப பூகோள ர்தியில் சாத்தியம் இல்லை.
எனவே ஆப்பிரிக்கக் கண்டதைச்  சுற்றி தொடர்ச்சியாக புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் பூகோள ரீதியில் சாத்தியம் இல்லை.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.